இறால்வடை (Prawn vadai)
இறாலைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய வடை (Prawn vadai) செய்யும் முறையைப் பார்ப்போம்.பொதுவாக இறாலைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் எல்லாமே மிக நல்ல சுவையில் இருக்கும்.வறுவல், குழம்பு,தொக்கு, பிரியாணி என்று தான் அதிகமாக செய்து சுவைப்போம்.
இறால் வடையை மாலை வேளை சிற்றுண்டியாக செய்து சாப்பிடலாம். அதோடு விருந்தினர்கள் வீட்டிற்கு வரும் போது, இறால் வடை (Prawn vadai) செய்து அவர்களையும் அசத்தலாம். உணவிற்கு முன் ஸ்டார்ட்டர் ஆகவும் பயன்படுத்தலாம். அருமையாக சுவையாக இருக்கும்.
வெறும் ரசம்,சோறுடன் சாப்பிடவே அவ்வளவு நல்லாக இருக்கும். செய்து அசத்துங்கள்.
இறால் வடை செய்ய தேவையான பொருட்கள் (Ingredients of Prawn vadai)
இறால் – 1 கிலோ
வெங்காயம் – 1 பெரிது
பச்சை மிளகாய் – 4
மிளகாய்தூள் – 1 தே.க
துருவிய தேங்காய் – 1 பாதி
சோம்பு – 2 தே.க
மஞ்சள்தூள் – 1/2 தே.க
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – 1 பொரிக்க
இறால் வடை செய்யும் முறை (Preparation)
இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம் ,பச்சை மிளகாயை சிறிதாக வெட்டி வைக்கவும்.
அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவைக்குள் வெட்டிய வெங்காயம்,பச்சை மிளகாய்,சோம்பு,மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
எண்ணெயை சூடாக்கி அதில் வடைகளாக தட்டி இருபக்கமும் சிவக்க விட்டு பொரித்து எடுக்கவும்.