தாய்மைக்கு தயாராவது எப்படி? (Preparing for motherhood)
20 வயதிற்கு மேல் எல்லா பெண்களுக்கும் ,தாய்மை குறித்த விழிப்புணர்வு (Preparing for motherhood) அவசியம் ஏற்படுத்தப் பட வேண்டும்.
அதாவது உடல் மாற்றமடையும் விதம், உடல் .மனரீதியாக தாய்மையை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விடயங்கலைப் பற்றி அறிந்திருத்தல் அவசியம்.
தாய்மையடைவதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. கர்ப்பம் குறித்த விழிப்புணர்வு, உடலின் மாற்றம், மனரீதியாக தாய்மையை எதிர்கொள்ளும் விதம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், அன்பான குடும்ப சூழல் என பல காரணிகள் இனிமையான கர்ப்ப காலதட்டிக் கொடுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடிகின்றது.
20 – 24 வயதில் தாய்மை அடைவது (Preparing for motherhood)
இந்த வயது இளம் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும். இந்த வயது பிரிவினருக்கு கரு உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் கர்ப்பகால நீரிழிவு Gestational diabetes) போன்றவை ,20 – 24 வயதினருக்கு ஏற்படுது மிகக்குறைவு.
இந்த வயதில் பெண்கள் உயர் படிப்பு,வேலை போன்றவறிற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுப்பதால் , திருமணம்,தாய்மை அடைவஹைத் தவிர்த்துக் கொள்கிறார்கள். இந்த வயதினருக்கு கருச்சிதைவு அடையும் வாய்ப்புகளும் மிகக் குறைவே.
ஒப்பீட்டளவில் இந்த காலகட்டங்களில் கருமுட்டைகள் வளமாக இருப்பதால் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும். அதோடு இந்த வயதில் மார்பக புற்றுநோய் ,கர்ப்பப்பை புற்று நோய் வரும் வாய்ப்பும் குறைவாக இருக்கிறது.
25 – 30 வயதில் தாய்மை அடைவது (Preparing for motherhood)
இந்த வயதுக்கு உட்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவும், சரியான உடற்பயிற்சியும் செய்தால் பிரசவத்தை எளிமையாக எதிர்கொள்ளலாம். மேலும் இதனால் பிரசவத்திற்கு பின்னும் உடலை பழைய மாதிரி திரும்ப கொண்டு வர முடியும்.
ஆனால் 30 வயதிற்கு பிறகு,உடலில் படிபடியாக மாற்றங்கள் ஏற்பட்டு,கருமுட்டைகளின் ஆற்றல் ,கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும்.
30 – 34 வயதில் தாய்மை அடைவது
34 வயது பெண்களிடம் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை கையாள்வதற்கான பக்குவம் இருக்கும்.
தாய்மையை சிறிது அனுபவத்தோடு எதிர்கொள்வீர்கள். பிரசவத்தின்போதும் குழந்தை வளர்ப்பிலும் மனதளவில் தெளிவுடன் செயற்பத முடியும்.கருச்சிதைவுக்கான வாய்ப்பு 10 % ஆக உள்ளது.
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் இடம்பெறுவதற்கான வாய்ப்பு 20-24 வயது உடையவர்களிவிட இரண்டு மடங்கு அதிகம் என்கின்றனர் மருத்துவ துறையினர்.
35 வயதிற்கு மேல் வயதில் தாய்மை அடைவது
இந்த வயது உள்ள பெண்கள் உடல் அளவில் சக்தியை இழக்க தொடங்கி விடிகின்றனர். இக்காலகட்டத்தில் கருமுட்டைகளின் ஆற்றல் பெருமளவு குறைந்துவிடும்.மேலும் உயர் இரத்த அழுத்தம் வரும் வாய்ப்புகள் இவ்வயதினருக்கு அதிகம் உள்ளது.
இதன் காரணமாக வயிற்றிலிருக்கும் கருவின் மீது அழுத்தம் ஏற்பட்டு குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் உருவாகின்றன.
இதனால் வேறு வழியின்றி ,கருவை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பாடுகிறது. அதோடு 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கர்ப்பகால நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதும் அதிகமாகிறது.
இந்த வயதிற்கு மேல் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளும் ஒப்பீட்டளவில் உயர்வாக உள்ளது.
35- 40 வயதில் தாய்மை அடைவது
இந்த வயதுகுட்பட்டவர்களுக்கு ஹோர்மோன் தூண்டுதலால் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
இதனால் இரட்டை குழந்தைகள், மூவர் மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
35 வயதை கடந்தவர்கள் கருத்தரிக்கும் போது தாயின் உடல் நலம், கருவின் வளர்ச்சி குறித்த மருத்துவ சோதனை செய்வது மிக அவசியம். இது தாய் சேய் இருவருக்கும் மிக நல்லது.
வயது அதிகரிக்க வாழ்க்கையில் வசதி, அனுபவம் பெருகுவது போல், உடலில் மாற்றங்களும், நோய்களும் வர ஆரம்பிக்கும்.
சரியான காரணம் இல்லாமல் தாய்மையை (Preparing for motherhood) தள்ளிப்போடுவது என்பது சரியான முடிவாகாது.
எனவே உங்கள் குடும்ப,வாழ்க்கை நிலைக்கு ஏற்ற முறையில் சரியான முடிவை எடுத்து, தகுந்த வயதில் .ஆரோக்கியமான குழந்தைதையை பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.