முடி உதிர்வதைத் தடுக்க கருஞ்சீரக எண்ணெய் (Black cumin oil to prevent hair fall)

தற்போது நிறைய பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு முடி அதிகமாகக் கொட்டுகின்றது. இவர்கள் கருஞ்சீரக விதை எண்ணெய்யைத் தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் தலைமுடி கொட்டும் (Prevent hair fall) பிரச்சனை சரியாவதோடு முடி நன்றாகவும் வளரும்.

பலவிதமான காரணங்களால் முடி உதிர்வு (Prevent hair fall) ஏற்படும். சத்துக்குறைபாடு ,சரியான பராமரிப்பு இன்மை, அழுக்கு படர்வது. பிசுபிசுப்பு, பொடுகு,டென்ஷன் ,கவலை,என பல இருக்கலாம்.

முன்பு கூந்தல் வலுவாக்கும் ஆரோக்கியமான கூந்தல் எண்ணெய்களை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தினார்கள். அப்படி பயன்படுத்திய பொருள்களில் முக்கியமானது கருஞ்சீரகம் ஆகும். இதை கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தினால் முடி உதிர்வு கட்டுக்குள் (Prevent hair fall) வரும்.

கருஞ்சீரக எண்ணெயை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of applying black cumin oil on scalp)

  • ஸ்கால்ப்பின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்
  • தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்
  • முடி உதிர்வது நிற்கும்
  • நரைமுடி வராமல் இருக்கும்

Black cumin oil,Black cumin oil benefits,Black cumin oil for hair grow,annaimadi.com,அன்னைமடி,கருஞ்சீரக எண்ணெய்,கருஞ்சீரக எண்ணெயின் பயன்கள்,சருமம் பராமரிப்பிற்கு, மற்றும் தலைமுடி பராமரிப்பிற்கு,black seed oil

முடி உதிர்வதைத் தடுக்க கருஞ்சீரக எண்ணெயை எப்படி பயன்படுத்துவது(How to use black cumin oil to prevent hair fall)

தேவையான பொருட்கள்
 
தேங்காய் எண்ணெய் – 1 கப்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
கருஞ்சீரக எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டு
 
பயன்படுத்தும் முறை
ஒரு  கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்த துண்டை தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும். இதனால் இந்த ஹேர் மாஸ்க்கின் முழு நன்மையையும் பெறலாம்.
20 நிமிடம் – 1 மணிநேரம் நன்கு ஊற வைத்த பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.
இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளலாம்.
 
Black cumin oil,Black cumin oil benefits,Black cumin oil for hair grow,annaimadi.com,அன்னைமடி,கருஞ்சீரக எண்ணெய்,கருஞ்சீரக எண்ணெயின் பயன்கள்,சருமம் பராமரிப்பிற்கு, மற்றும் தலைமுடி பராமரிப்பிற்கு,black seed oil
 
சிறிது கருஞ்சீரக எண்ணெய் எடுத்து அதனுடன் ஒலிவ் எண்ணெய் சேர்த்து அந்த எண்ணையை மருதாணி பொடியுடன் கலந்து பேஸ்ட் செய்து தலையில் முடி வேர்களில் படும்படி நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க பொடுகு தொல்லை தீரும்.

கருஞ்சீரக எண்ணெய் சிகிச்சை

 
தேவையான பொருள்
கருஞ்சீரக எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
 
பயன்படுத்தும் முறை
கருஞ்சீரக எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி, இரு கைகளையும் நன்கு தடவ வேண்டும்.
பின் கையில் உள்ள அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
ஸ்கால்ப் முழுவதும் எண்ணெயை தடவியப் பின், முடியின் நுனி வரை தடவ வேண்டும்.
பின்பு 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் கழித்து, தலைமுடியை ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வது விரைவில் நின்றுவிடும்.

கருஞ்சீரகத்தை எண்ணெய் காய்ச்சி பயன்படுத்தும் போது இவை தலைமுடி உதிர்தலுக்கு எதிராக போராடும். தலையின் ஸ்கால்ப் பகுதியில் இருக்கும் குறைபாட்டை நீக்கும். முடி வறட்சியையும் முடி உதிர்தலையும் கட்டுப்படுத்தும் (Prevent hair fall) . கூடுதலாக முடி வளர்ச்சியை ஊக்குவித்து இளநரையையும் கட்டுக்குள் வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *