சம்மணமிட்டு அமருங்கள் (Proper sitting position)

சம்மணம் அல்லது சப்பாணி போட்டு இருத்தல் (Proper sitting position) என்பது முன்னோர் பயன்படுத்தி வந்த ஆரோக்கியவாழ்விற்கான ஒரு மருத்துவம் என்றே சொல்லலாம்.

காலைத் தொங்க வைத்து அமரும் பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.இதனால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது. 

உண்மையில் எல்லா இடங்களிலும் நம்மால் சம்மணமிட்டு அமர முடியாது.

பள்ளிகளில், அலுவலகங்களில், சோபாக்களில், கட்டில், நாற்காலி, வாகனத்தில் பயணிக்கும் பொழுது, சினிமா தியேட்டரில் என  நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்த மாதிரியே  இருக்கிறோம்.

இதனால் சாதாரணமாக கூட தரையில் இருக்க முடியவில்லை.அப்படி இருந்தாலும் இலகுவாக எழும்ப முடிவதில்லை.

இனி குறைந்தது  சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்து (Proper sitting position)சாப்பிட தொடங்குவோம்.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலைமடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச்செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்துசாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
ஏனென்றால் கீழே ரத்தஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப்பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்படி வலியுறுத்தபட்டது!

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகி சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

இதே போல இந்திய வகை கழிவறை செல்லும் போது மட்டும் தான் காலை மடக்கி அமர்கிறோம். வெஸ்டர்ன் டைப் (western type toilets ) கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவுகள் வெளியேறும்.

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்.கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்.முடிந்தால், யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்.

சம்மணமிட்டு அமர்வதால் என்ன நன்மைகள் (What are the benefits of sitting down)

பத்மாசனம் நிலையில் இருக்கும் போது, நம் உடலின் ஒவ்வொரு அங்கமும் பலனடைகிறது. குறிப்பாக, தரையில் அமர்வதால், முழங்கால் மூட்டுகளும், இடுப்பெலும்புகளும் வலுவடைகின்றன.

அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பதால், இவை மிகவும் இலகுத் தன்மை அடைந்து நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது.

ஒரு நாளில் ஒரு முறையாவது குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுவது நல்லது என்று சொல்வார்கள். அப்போது சில நல்ல, முக்கியமான முடிவுகளும் எடுக்கப்படுவதுண்டு.

அதுவும் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது, குடும்பத்தினருக்கு இடையேயான பிணைப்பு இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் இருக்கையில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

மேல்நாடுகளில் கடுமையான குளிர் காரணமாக , உணவு உண்பதற்காக மேஜைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். நம் நாட்டிலும் உணவகங்களில் நாம் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட முடியாது.

ஆனால் நாம் அதை நாகரீகம் சௌகரியம் என நினைத்து  நமது  ஆரோக்கிய வாழ்வியலை தொலைத்து நிற்கின்றோம்.

இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவது தான் கௌரவம் என ஆகிவிட்டது.

தினமும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தை இதற்கென ஒதுக்கிக் கொள்ளுங்கள். வீட்டில் உணவருந்தும் போது சம்மணமிட்டு அமருங்கள். தினந்தோறும் பூஜையறையில் சம்மணமிட்டு அரை மணி நேரமாவது அமர்ந்து பூஜைகள், தியானத்தைச் செய்து வாருங்கள்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறும். பல ஆரோக்கிய குறைபாடுகளுக்கு நாம் அமரும் முறையும் முக்கியக் காரணமாக இருக்கிறது.

யோகிகளும் முனிவர்களும் தரையில் பத்மாசனத்தில் அமர்வது போல் பாதங்கள் இரண்டும்  உங்கள் கால்களுக்கு கீழே தரையில் இருக்க வேண்டும்.

நம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், தரையில் அமர்ந்து (Proper sitting position) சாப்பிடும் பழக்கம் ஆதி காலத்திலிருந்தே உள்ளது. டைனிங் டேபிளில் ஹாயாக உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டோ அல்லது படுக்கையில் உட்கார்ந்து கொண்டோ சாப்பிடுவது வசதியாக இருப்பது போல் நமக்குத் தோன்றலாம்.

ஆனால், கால்களை குறுக்காக மடக்கி, சம்மணம் போட்டு கட்டாந்தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூட என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை.

தினந்தோறும் பூஜையறையில் சம்மணமிட்டு அரை மணி நேரமாவது அமர்ந்து பூஜைகள், தியானத்தைச் செய்து வாருங்கள். ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறும்.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டதின் நோக்கமென்ன? (Proper sitting position)

செரிமான சக்தி அதிகரிக்கிறது

நாம் கால்களை குறுக்காக மடக்கி, சம்மணம் போட்டு (Proper sitting position)தரையில் உட்காரும் போது, இயல்பாகவே ஒரு ஆசன நிலைக்கு வந்து விடுகிறோம். இதற்கு ‘சுகாசனா’ அல்லது ‘பாதி பத்மாசனா’ என்று பெயர்.

இந்த போஸில் அமைதியாக சாப்பிட உட்காரும் போதே, செரிமானத்திற்குத் தயாராகுமாறு மூளைக்குத் தகவல் சென்று விடுகிறது. சாப்பாட்டுத் தட்டு தரையில் இருப்பதால், நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால், வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து, நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது.

உடல் எடை பேணப்படுகிறது

தரையில் அமர்ந்து (Proper sitting position) சாப்பிடுவதால், நாம் இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்பதையும் மூளை தெளிவாக நமக்குச் சொல்லி விடுகிறது.

இதனால் நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. தேவையான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும் இது வழி வகுப்பதால், நம் உடல் எடையும் தானாகக் குறையத் தொடங்குகிறது.

மிகவும் இலகுத் தன்மையாளராக மாற்ற

‘பத்மாசனா’ நிலையில் இருக்கும் போது வயிற்றைச் சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைவதால், அந்த இடத்தில் ஏற்படும் வலிகள் குறைகின்றன. மேலும் இந்த ஆசன நிலையில் வயிறு அழுத்தப்படாமல் இருப்பதால், நாம் திருப்தியாக சாப்பிட முடிவதோடு நம் செரிமான சக்தியும் அதிகரிக்கிறது.

நாம் ஒரு குடும்பமாக தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது, ஒரு மன அமைதி கிடைக்கிறது. மேலும், நல்ல உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும் இது உதவுகிறது.

உடல் தோரணை முன்னேற

நாம் தரையில் நேராக அமர்ந்து சாப்பிடும் போது, முதுகெலும்பும் தோள்களும் சீரான நிலையில் இருக்கின்றன. இதனால், தாறுமாறான போஸில் உட்காருவதால் ஏற்படும் வலிகளும், அசதியும் பறந்து விடுகின்றன.

நீண்ட நாள் வாழ… தரையில் அமர்ந்து எழுந்திருப்பதால், நம் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதயத்தை பலப்படுத்த

டைனிங் டேபிளில் அமரும் போது, புவி ஈர்ப்பு விசை காரணமாக இரத்தம் கீழ்நோக்கி கால்களுக்கு பாய்கிறது. ஆனால், தரையில் உட்காரும் போது இது குறைந்து, இரத்த ஓட்டம் இதயத்தில் மட்டுமே சீராக இருப்பதால், நம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

சம்மணமிட்டு அமர்ந்து (Proper sitting position) சரியான முறையில் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
நம் இளம் சந்ததியினருக்கும் கற்றுக் கொடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published.