கணையத்தைக் காக்கும் உணவுகள்(Foods that Protect the pancreas)

கணையம் பாதிக்கப்பட்டு, அதில் இன்சுலின் சுரக்கா விட்டாலோ, இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, அல்லது சுரந்த இன்சுலின், சரியாக வேலை செய்யாவிட்டாலோ நீரிழிவு நோய் வரும். நீரிழிவு நோய் வருவதைத் தடுப்பதற்கு கணியத்தை பாதுகாப்பது (Protect the pancreas) மிக முக்கியம்.

நம் உடலில் காணப்படுகிற கணையம் ஒரு சிறிய உறுப்பு என்றாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உறுப்பாகும். கணையம் தான் உணவை செரிக்க உதவும் நொதிகளை சுரக்கிறது.

மேலும் உணவில் இருந்து சத்துக்களை பிரித்தெடுத்து மற்ற பாகங்களுக்கு அனுப்பும் தொழில் செய்வதும் கணையமே.

அதுமட்டுமின்றி, உடலின் மிகப்பெரிய சுரப்பியான கணையம் தான் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் இன்சுலின் என்னும் ஹார்மோனையும் சுரக்கிறது.

இவ்வளவு வேலையை செய்யும் கணையத்தில் ஏராளமாக நச்சுக்கள் சேரும்.

எனவே கணையத்தில் சேரும் நச்சுக்களை நீக்கவும், கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒருசில உணவுப் பொருளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

பொதுவாக, நாம் உணவு சாப்பிடும் போதெல்லாம், உடலுக்கு தேவையான இன்சுலினை கணையம் சுரந்து கொண்டிருக்கும்.

இல்லாவிட்டால், கணைய அழற்சி, வலி மற்றும் வீக்கம் கொண்ட கணையம், கணைய புற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்கள் எவை?( Foods that protect the pancreas?)

ப்ரக்கோலி (Brocoli) , காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், கேல் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது கணையத்தின் ஆரோக்கியத்திற்கு (Protect the pancreas) நல்லது.

முக்கியமாக இந்த உணவுப் பொருட்கள் கணைய புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.

 

பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பயோஆக்டிவ் பொருள், கணையத்தில் எவ்வித கட்டிகளும் காயங்களும் ஏற்படாமல் நல்ல பாதுகாப்பு தரும். எனவே முடிந்த வரையில் தினசரி  உணவில் பூண்டு சேர்த்து வருவது நலம்.

டோஃபுவில் (Tofu)கணையத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க (Protect the pancreas) தேவையான புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே டோஃபுவை பிடித்தவாறு சமைத்து உணவில் சேர்த்து வாருங்கள்.

தயிர் சாப்பிட்டால், கணையத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமைப் பெறும்.

சிவப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வரோட்ரோல் என்னும் பொருள், ப்ரீ ராடிக்கல்களால் கணைய செல்கள் பாதிக்கப்படாமல் (Protect the pancreas).  

ப்ளூபெர்ரி மற்றும் செர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது. இவை கணைய புற்றுநோய் அண்டுவதைத் தடுக்கும். ஏனெனில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை கொண்டது தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு.

இதேபோல் ஆப்ரிகாட், கரட், சோளம் போன்றவற்றிலும் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது. இவற்றையும் இடையிடை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பசலைக்கீரையில் இரும்புச்சத்து, விற்றமின் பி போன்ற கணையத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே வாரம் 2-3 முறை பசலைக்கீரையை உணவில் சேர்த்து கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

 

கணையத்தை எப்படி பாதுகாப்பது என தெரிந்து கொள்வோம். வீடியோ பதிவைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *