புடலங்காய் பொரியல் (Pudalangai poriyal)
உடலுக்கு வலு கொடுக்கும் புடலங்காய் பொரியல் (Pudalangai poriyal) செய்வோம்.தேகம் மெலிந்து இருப்பவர்கள் உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், உடல் பருமனடையும்.
சிலர் புடலங்காய் பொரியலுக்கு தேங்காய் போட்டும் செய்வார்கள்.அது வேறு விதமான சுவையைக் கொடுக்கும்.
ஆனால் இந்தமுறையில் அடுத்தநாளும் வைத்து உண்ண முடியும். கிட்டத்தட்ட சீனிசம்பல் (வெங்காயத்தில் செய்வது) போல இருக்கும். நிறைய தேங்காய் போட்டு புட்டு அவித்து அதனுடன் சேர்த்து உண்ண அருமையாக இருக்கும்.அதோடு செய்வதும் மிக இலகு.
புடலங்காய் பொரியலை பாணில் வைத்து சாண்ட்விச் (Sandwich) போல செய்து ,வேலைக்கு அல்லது பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடலாம்.
உடலுக்கு வலு கொடுக்கும்.தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
புடலங்காய் பொரியல் (Pudalangai poriyal) எப்படி செய்வது என பார்ப்போம்.
புடலங்காயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்
புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் அஜீரண கோளாறு நீங்கும். பசியைத் தூண்டும்.
குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண்,தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.
இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல் இல்லாமல் போகும். மூலநோய்க்காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.

ஆண்மை கோளாறுகளை நிவர்த்தி செய்யும் .உடல் தளர்ச்சியைப் போக்கி வலுவைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைபடுதலைக் சரிப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளையும் போக்கும்.
கண் பார்வையைத் தூண்டும். இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வையாக, சிறுநீராக வெளியேற்றும் ஆற்றல் புடலங்காய்க்கு உள்ளது.
புடலங்காயில் குழம்பு, புடலங்காய் கூட்டு ,புடலங்காய் பால்க்கறி, பருப்பு சேர்த்து பால்க்கறி, புடலங்காய் வறை போன்றன சமைப்பார்கள்.சாம்பாரிலும் சேர்க்கலாம்.
ஆனால் , இவற்றை எல்லாம் விட புடலங்காய் பொரியல் எல்லோரும் கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு அதிக சுவையாக இருக்கும். சமைத்து உண்டு பாருங்கள்.
உங்களுக்கே தெரியும்!