பூசணிக்காய் அல்வா (Pumpkin Halwa)
நமது உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் அதிகமாக பூசணிக்காயில் இருப்பதால், நாம் இதை வாரம் இரண்டு முறைகள் அல்லது தினமும் உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.(Pumpkin Halwa)
அல்வா பல விதமாக பல விதமான பொருட்களால் செய்வார்கள்.பூசணிக்காயில் அல்வா (Pumpkin Halwa) சுவையாக எப்படி செய்யலாம்.
பூசணிக்காய் அல்வா (Pumpkin Halwa) செய்ய தேவையான பொருட்கள்
பால் – 500 மி.லிட்டர்
சர்க்கரை – 400 கிராம்
முந்திரி – 15
திராட்சை – 15
பாதாம் – 15
நெய் – 250 கிராம்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
ஏலக்காய் – அரை ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
பூசணிக்காய் அல்வா (Pumpkin Halwa) செய்yயும்முறை
பூசணிக்காயை தோல் நீக்கி நன்றாகத் துருவி, அதன் சாறைப் பிழிந்து சக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.
பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் நெய்விட்டு, அதில் பூசணிச் சக்கையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
பின்பு சூடான பாலைச் சேர்த்து, மிதமான சூட்டில் வைத்துக் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இடை இடையே நெய் சேர்த்து கொண்டே இருக்கவும்.
அதன்பின், தேவையான சர்க்கரை, உப்பு, பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவைச் சேர்க்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது நெய் ஊற்றி திராட்சை, முந்திரியை போட்டு வறுத்து வைக்கவும்.
கடைசியாக அல்வா பதம் வந்தவுடன் (ஓரங்களில் நெய் வெளிவர ஆரம்பிக்கும் போது) ஏலக்காய்த் தூள், வறுத்த திராட்சை, முந்திரி, பொடித்த பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும்.
* நாவூறும் சூடான சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி.
பூசணிக்காய் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகள் பலவீனமாவதை தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் சீரண உறுப்புகளுக்கு பலத்தை அதிகப்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
பூசணிக்காய்யை தினமும் நம் உணவில் சேர்த்து வந்தால், வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை அழித்து, மூலப் பிரச்சனைகளுக்கு பூசணிக்காய் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லிகாய் சாறு அல்லது எலுமிச்சைசாறு கலந்து தினமும் குடிப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நம்மை தாக்குவதை தடுக்கிறது.
பூசணிக்காயின் விதைகளில் விற்றமின் B, விற்றமின் A, மினரல்ஸ், தாது உப்புக்கள், கல்சியம் (Calcium), இரும்புச் சத்து, பாஸ்பரஸ், லினோனெலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
நமது உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் அதிகமாக பூசணிக்காயில் (Pumpkin) இருப்பதால், நாம் இதை வாரம் இரண்டு முறைகள் அல்லது தினமும் உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

பூசணிக்காயின் விதைகளில் ஸ்டெரைல் கிளைகோஸைட் மற்றும் கொழுப்பு அமிலம் இருப்பதால், இவை நமது உடம்பில் புற்று நோய் கட்டிகளை (Cancer Cells) ஏற்படுத்தும் செல்களை அழித்து புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது.
பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லி சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து தினமும் குடிப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நம்மை தாக்குவதை தடுக்கிறது.
பூசணிக்காய்யை தினமும் நம் உணவில் சேர்த்து வந்தால், வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை அழித்து, மூலப் பிரச்சனைகளுக்கு பூசணிக்காய் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
ஆயுர் வேதம் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் வெண் பூசணிக்காயின் பூவை மஞ்சள் காமாலை, சீதபேதி மற்றும் இருமலைப் (Cough) போக்கும் சிறந்த மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும்.
பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும்.
காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.
பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும்,