சுவையான பூசணிகாய் சூப் (Pumpkin soup)

பூசணிக்காய் ஒரு நீர்த்தமையான காய் என்பதால் ,அதில் சூப் (Pumpkin soup) தாயரித்து சாப்பிடுவதால் குறைந்தளவு கலோரிகளே உடலில் சேரும்.இது ஒரு ஆரோக்கியமான உணவாகும்.

பூசணியில் பொட்டாசியம் சத்து மிகுதியாக இருப்பதால், நமது உடம்பின் அதிக ரத்த அழுத்தத்தை தடுத்து, இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் பாதுகாக்கிறது. பூசணிக்காயை சாம்பாரில் சேர்ப்பார்கள். மரவள்ளிக்கிழங்குடன் சேர்த்துக் கறி சமைப்பார்கள்.

இதைவிட பூசணிகாயில் அல்வா, இனிப்பு செய்யப்படும்.அவையும் மிக சுவையாக இருக்கும்.

இங்கே பூசணிக்காயைப் பயன்படுத்தி சூப் செய்வது எப்படி எனப் பார்ப்போம்.

பூசணிக்காய் – 1 கப் (சிறிய சதுர துண்டுகளாக வெட்டியது)
சின்னதாக நறுக்கிய வெங்காயம் – 2
வெங்காயத் தாள் – 1 கட்டு
சிறியதாக நறுக்கிய கேரட் – 1
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகுதூள் – சுவைக்கு ஏற்ப
உப்பு – தேவையான அளவு

Check price

பூசணிகாய் சூப் (Pumpkin soup) எப்படிச் செய்வது?

கடாயை  சூடேற்றி அதில் வெண்ணெயையும், நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதில் பூசணிக்காய் (பரங்கிக்காய்), கேரட், சிறிது வெங்காயத் தாள் சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு, தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பின்னர்  இதனை சிறிது ஆறவைத்து நன்கு மசிக்கவும்.

சாப்பிடும் முன் சூடுபடுத்தவும். மிளகு மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து அலங்கரிக்கவும்.

பூசணிகாய் சூப் (Pumpkin soup) வீடியோ செய்முறை

பூசணியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

Pumpkin soup,annaimadi.com,to make successful diet,diet food,remedy for ulser

பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடுகிறது.

Leave a Reply

Your email address will not be published.