குழந்தை வளர்ப்பு இலகுவானதா? (Raising a child)

குழந்தை வளர்ப்பு (Raising a child) என்பது சிக்கலானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இன்றைய பெற்றோருக்கு மாறிவிட்டது. 

உண்மையில்  குழந்தை வளர்ப்பு (Raising a child) என்பது அத்தனை கடினமான காரியம் இல்லை. குறித்த சூட்சமங்களை உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிகளிடம் அறிந்துகொண்டாலே போதும்.அவர்களுக்கு இந்த கலா குழந்தையை வளர்க்க என்ன தெரியும் என்ற அலட்சியம் தேவையில்லை.

அவர்கள் இதில் பாண்டித்தியம் பெற்றவர்கள் தான்.அதற்கு நாம் ஒவ்வொருவரும் நல்ல மனிதராக இருப்பதே சான்று!

குழந்தை பிறந்து 10 வயது வரை அந்தக் குழந்தையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அதன்பிறகு திடீரென்று குழந்தை வளர்ப்பை(Raising a child) நீங்கள் கையில் எடுத்தால், அக்குழந்தை உங்கள் வசப்படாது.


 குழந்தை பிறந்த மூன்று, நான்கு மாதங்களில் மற்றவர்களின் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்துவிடும்.குறிப்பாக தன் அம்மாவை நிறையத் தேட ஆரம்பிக்கும். எனவே குழந்தை வளர்ப்பு (Raising a child) என்பது குழந்தை பிறந்த கணத்திலிருந்து செய்யவேண்டிய ஓர் அதி முக்கியக் கடமை. குழந்தை வளர்ப்பு,annaimadi.com,Raising a child,குழந்தையை எப்படி சிறப்பாக வளர்ப்பது,அன்னைமடி,GoodParenting

பேசத் தெரியாத அந்தக் குழந்தைக்கு அழுகை தான் ஒரே மொழி. பசித்தாலோ, ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டாலோ, அல்லது எறும்பு போன்ற பூச்சிகள் கடித்தாலோ, அல்லது அம்மா தன்னைத் தூக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ, அழுகை மூலமாக மட்டுமே அந்தக் குழந்தை தன் உணர்வுகளை வெளிப்படுத்தும்.

பசி, உறக்கம், உடல் உபாதை எனக் குழந்தையின் அழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் தேவையை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும். ஆனால், வெறுமனே நீங்கள் தூக்கிக்கொள்ள வேண்டும் என்று அது அழுதால் அதற்கு நீங்கள் செவிமடுக்காதீர்கள்.

வேறு வழிகளில் குழந்தைக்கு விளையாட்டுக்காட்டி ரிலாக்ஸ் செய்யுங்கள். அப்படியல்லாமல் குழந்தை அழும் போதெல்லாம் தூக்கித் தூக்கி நீங்கள் பழக்கினால், குழந்தை இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டு அழுது, அழுதே உங்களைத் தூக்கிக்கொள்ள வைத்துவிடும்.

பிடிவாதம் மூலம் காரியம் சாதித்துக்கொள்ள முடியும் என்பதை குழந்தை கற்றுக்கொள்ளும் முதல் இடமும் இதுதான்.

குழந்தையின் நலமான வளர்ச்சியில் ஏற்படும் சில பிரச்சினைகள்

குழந்தையின் ஊட்டச்சத்து உணவும் , அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்,தூக்கத்தில் சிறுநீர்கழித்தல், ஓடி விளையாடாமல் இருப்பது, தூங்காத குழந்தை,வெருட்டப்படும் குழந்தை,குழந்தைகளின் அதிக  டிஜிட்டல் பாவனை

போன்றவு குழந்தையின் வளர்ச்சியில் பெரிதும் தாக்கத்தை ஏற்படும்.

இன்றைய பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு ஒன்று அதீத செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். இல்லையென்றால் கட்டுப்பாடாக வளர்க்கிறேன் என்று மிரட்டி வதைக்கிறார்கள்.

அதனால், ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு (Raising a child) என்பது கனிவு, உறுதி இந்த இரண்டும் கலந்ததாக அமைய வேண்டும்.   குழந்தை ஏதாவது தவறு செய்தால், உங்கள் குரலை உயர்த்தாமல், அதே சமயம் உறுதியுடன் அந்த தவறை குழந்தைக்கு புரியும் விதத்தில் சுட்டிக் காட்ட வேண்டும்.இதனால் இன்னொருமுறை அந்த தவறை குழந்தை செய்யாமல் கற்றுக் கொள்ளும்.

குழந்தையை அடிப்பதலோ அல்லது குரலை உயர்த்திக் கத்துவதாலோ குழந்தை தன் தவறை புரிந்து கொள்ளபோவதில்லை. இந்த இரண்டுமே குழந்தையை சரியான பாதைக்கு கொண்டு செல்லாது.

குழந்தை வளர்ப்பு,annaimadi.com,Raising a child,குழந்தையை எப்படி சிறப்பாக வளர்ப்பது,அன்னைமடி,GoodParenting

தூக்கமின்மை அல்லது தூக்கக் குழப்பம் என்பது வயதானவர்களின் பிரச்சனை மட்டுமல்ல, எந்த வயதினரையும் தாக்கலாம். சில பள்ளிக் குழந்தைகளும் அவ்வாறு இரவில் தூங்காமல் பிரச்சனை கொடுப்பதுண்டு.

நிம்மதியான நல்ல  தூக்கம் குழந்தையை மட்டுமின்றி உங்களையும் அரவணைக்கும்.

உங்கள் குழந்தை குறுநடை போடுகிறது என்ற ஆனந்தத்தில் இருக்கிறீர்களா? விழுந்துவிடுவானா எதையாவது போட்டு உடைப்பானா எனப் பெற்றோர்கள் திகிலில் இருக்கும் காலமும் அதுதான்.

குறுநடைபோடும் காலம் என்பது பொதுவாக ஒன்று முதல் மூன்று வயது வரை எனக் குறிப்பிடுகிறார்கள்.

இக்காலமானது குழந்தைகளின் உடல் வளர்ச்சியோடு அறிவாற்றல், உணர்ச்சிகளின் வெளிப்பாடு,சமூக உறவுகளின் விரிவு ஆகியன வளர்வதற்குமான மிகவும் முக்கிய காலப்பகுதியாகும்.

இக்காலத்தில் வாசிப்பதானது அவர்களது கற்கை ஆற்றலையும், அறிவு வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

இக்காலத்தில் ஏற்படும்வாசிப்பு பழக்கமானது அவர்களை வாழ்நாள் முழுவதும் வாசிப்பில் ஆர்வம் கொள்ள ஊக்குவிப்பதாக அமையும்.குழந்தை வளர்ப்பு,annaimadi.com,Raising a child,குழந்தையை எப்படி சிறப்பாக வளர்ப்பது,அன்னைமடி,GoodParenting

குழந்தையைக் கட்டித் தழுவி அமைதியும் செளகர்யமும் நிறைந்த இடத்தில்  குழந்தையுடன் கூடியிருந்து வாசியுங்கள்.

உங்கள் குழந்தை தவறாக உச்சரிக்கும் வார்த்தைகளைக் கவனத்தில் எடுத்து அவற்றை சரியான முறையில் நீங்கள் உச்சரித்து குழந்தையை அவதானித்து முயற்சி செய்து முன்னேற உதவுங்கள்.

பெற்றோர்களது உணர்வுகளும் செயற்பாடுகளும் பிள்ளைகளை உள்ளுர நன்கு பாதிக்கும் என்பதை எப்போதும் பெற்றோர் கருத்தில் வைத்திருக்க வேண்டும்.

அவை பெற்றோர்களினதாக மட்டும் இருக்க வேண்டியதில்லை.ஆசிரியர்களின், குடும்பத்தில் உள்ள மூத்தவர்களது,பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுனரது என யாராவது ஒரு சிலரின் செயற்பாடுகள் அவர்களை வெருட்டுவதாக அல்லது கொடுமைப்படுத்துவதாக இருக்கலாம்.

பிள்ளைகளை அச்சுறுதலும் கொடுமைப்படுத்தலும்

அச்சுறுதல் வேறு கிண்டல் பண்ணுதல் வேறாகும். பிள்ளைகள் விளையாடும் போது சகோதரங்களாலோ நண்பர்களாலோ கிண்டல் பண்ணப்படுவது சகசமானது.

விளையாட்டுதனமாகவும் நட்புறவுடனும் ஒருவருக்கொருவர் கிண்டல் அடிப்பதை பிள்ளைகள் வேடிக்கையாகவே எடுப்பார்கள்.

ஆனால் அது கேலி என்ற அளவைத் தாண்டி மனதைப் புண்படுத்துவதாக, இரக்கமற்றதாக கொடுமையானதாக மாறும் போது அது அச்சுறுத்தலாக மாறுகிறது.

கொடுமைப்படுத்தல் என்பது உடல் ரீதியானதாக மட்டும் இருக்கும் என்றில்லை.

  • அது கடும் வார்த்தைகளாகவோ உளரீதியாகவும் இருக்கலாம்.
  • அடித்தல்,இழுத்தல்,பட்டப் பெயர் வைத்து இழித்தல,அச்சுறுதல்,வெருட்டிப் பணம் கறத்தல் அல்லது பொருட்களைப் பறித்தல் போன்ற பலவாகலாம்.
  • குறிப்பிட்ட பிள்ளையைப் புறக்கணிப்பதும், தவறான வதந்திகளைப் பரப்புவதும் ஆகலாம்.
  • இன்றைய காலத்தில்  குறும் தகவல்களாலும், பேஸ்புக் போன்ற சமூகதளங்கள் ஊடாகவும் மன உளைவையும் அச்சுறுத்தலையும் கொடுக்கலாம்.

‘பள்ளிப் பிள்ளைகள் தானே! இவற்றிக்கு முகம் கொடுத்து தாண்ட வேண்டியவர்கள் தானே’ என அலட்சியப்படுத்தக் கூடாது.

ஏனெனில் அது பிள்ளையின் சுயமதிப்பைப் பாதிப்பதுடன், அதனது பாதுகாப்பு உணர்வையும் பலவீனப்படுதும் அளவு தீவிரமானதாகும். சற்று வளர்ந்த பிள்ளைகளில் இது தற்கொலைக்கு கூட இட்டுச் செல்லலாம் என்பதை மனதில் இருத்தி எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பொறுப்பு (Parental responsibility in Raising a child) 

கொடுமை தாங்காத நிலை ஏற்பட்டு குழந்தை தானாகச் சொல்லுமளவு காத்திருக்கக் கூடாது. அல்லது கண்டல்கள் காயங்கள் என நிலமை மோசமாகும் வரை பொறுத்;திருக்கக் கூடாது.

அக்கறையுள்ள பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களே உசார்ப்படுத்திவிடும். பிள்ளை பதற்றமாக இருக்கக் கூடும்,

வழமைபோல உணவு உன்னாதிருக்கலாம், எரிச்சல்படலாம், எளிதில் கோபமுறலாம் தூக்கக் குழப்பம் ஏற்படலாம். இவற்றை எல்லாம் அவதானிக்க வேண்டும்.

வெட்கம் காரணமாகவோ, பிரச்சனை வெளிப்படுவதால் தான் மேலும் கொடுமைப்படுத்தப்படலாம் என்பதாலும் தனது பிரச்சனையை வெளிப்படுத்த பிள்ளை தயங்கக் கூடும். பெற்றோர்களில் தன்னில் குற்றம் கண்டு தன்னையே ஏசவோ அடிக்கவோ கூடும் எனவும் தயங்கலாம்.

எனவே ஆதரவோடும் அனுதாபத்துடனும் பெற்றோர்கள் அதை அணுக வேண்டும். தாங்கள் இவ்விடயத்தில் உறுதுணையாக இருப்போம். உதவுவோம் என்பதை தங்கள் பிள்ளைக்கு உணர்த்த வேண்டும்.

‘பலர் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். நீ தனியாக இல்லை. அச்சுறுத்தியவனே இழி செயலைச் செய்கிறான். நீ அல்ல’ என தெளிவுபடுத்த வேண்டும்.

இவ் விடயத்தில் ‘கவனம் எடுத்து சிக்கலைத் தீர்க்க வேண்டிய நடவடிக்கை எடுப்பேன்’ என நம்பிக்கை அளியுங்கள். பாடசாலை ஆசிரியர், அதிபர் அல்லது பொறுப்பானவருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தி மேலும் அவ்வாறு நிகழாதிருப்பற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுங்கள்.

சில தருணங்களில் அச்சுறுத்துபவனின் பெற்றோரை அணுகுவதும் உதவலாம். ஆயினும் நீங்கள் தனியாகச் செய்வதை விட பாடசாலை சார்ந்தவர்களின் உதவியோடு அணுகுவது நல்ல பலன் தரலாம்.

இவை எல்லாவற்றிகும் மேலாக தங்கள் பிரச்சனையை உங்களிடம் சொன்னால் நீங்கள் கோபிக்க மாட்டீர்கள். தட்டிக் கழிக்கமாட்டீர்கள். அனுதாபத்துடன் அணுகுவீர்கள். ஆதரவு தருவீர்கள் என்ற நம்பி;கையை உங்கள் பிள்ளையிடம் ஏற்படுத்துங்கள்.

நம்பிக்கை ஏற்படுத்துதல்

குழந்தை வளர்ப்பு,annaimadi.com,Raising a child,குழந்தையை எப்படி சிறப்பாக வளர்ப்பது,அன்னைமடி,GoodParenting

குழந்தைகளோடு கூடிக்களிப்பது தான் மனதுக்கு மகிழ்ச்சிதரும் நிகழ்வு என்பது போய், குழந்தைகளை விட்டு  ஒரு மணிநேரம் ரிலாக்ஸாக தனித்திருந்தால் போதும், மனசு அமைதியாகிவிடும் என்று நிறையப் பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இத்தனைக்கும் ஒரே ஒரு குழந்தை இருக்கும் குடும்பங்கள் தாம் இன்று அதிகம். அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள். இதற்கே இவ்வளவு போராட்டங்கள்.  

அதுமட்டுமில்லை, எவ்வளவுதான் பார்த்து பார்த்து குழந்தைகளுக்குப் பள்ளிக்குச் சமைத்துக்கொடுத்து அனுப்பினாலும், அதை முழுவதுமாகச் சாப்பிடாமல் மிச்சம் வைத்துக் கொண்டுவரும் பிள்ளைகள், குழந்தை வளர்ப்பு என்பதைப் புரியாத புதிராக மாற்றிவிடுகிறார்கள். 

இன்னொரு பக்கம், சதா மொபைல் மற்றும் வீடியோ கேம்ஸில் மூழ்கிக்கிடக்கும் பிள்ளைகளை அந்த மோகத்திலிருந்து மீட்டெடுக்க முடியாமல் திணறும் பெற்றோர் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சரி, கொஞ்சம் வளர்ந்தால் குழந்தைகள் சரியாகிவிடுவார்கள் என்றும் நினைக்க முடியவில்லை. டீன் ஏஜில் இருக்கும் பிள்ளைகளால் இன்னும் பெரிய பிரச்சனைகள்.

குழந்தைகளுடன் வெளியே ஷாப்பிங் செல்வது என்றால் கிளம்புவதற்கு முன்பே, ‘ஷாப்பிங்ல உங்களுக்குப் பிடிச்ச ஐஸ்க்ரீமை நாங்க வாங்கித் தர்றோம். ஆனா, பாக்குற பொருளை எல்லாம் கேக்கக் கூடாது. ‘ என்று அறிவுறுத்தி அழைத்துச் செல்லுங்கள். இப்படி ஓரளவு குழந்தைகளைத் தயார் செய்து வெளியில் அழைத்துக்கொண்டு சென்றால், குழந்தைகளும் பிடிவாதம் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.

 முன் இப்படி பெற்றோர் சண்டைபோட்டுக்கொள்ளவே கூடாது என்பதுதான். தொடர்ந்து குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிட்டுக் கொள்ளும்பொழுது, குழந்தைகள் மனதளவில் கடும் அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் ஆளாகிறார்கள். தங்கள் பெற்றோரிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ளவும் செய்கிறார்கள்.குழந்தை வளர்ப்பு,annaimadi.com,Raising a child,குழந்தையை எப்படி சிறப்பாக வளர்ப்பது,அன்னைமடி,GoodParenting

குழந்தை வளர்ப்பில் செய்யும்  பெரிய தவறு (The biggest mistake in Raising a child) 

இன்றைய பெற்றோர் குழந்தை வளர்ப்பில் செய்யும் ஆகப் பெரிய தவறு என்ன தெரியுமா?
குழந்தைகளுக்கு எதற்கெடுத்தாலும் பொருள்களை கிஃப்ட்டாக வாங்கிக்கொடுத்து ஊக்குவிப்பது.

‘முதல் மார்க் வாங்கினா சைக்கிள் வாங்கித்தர்றேன்’, ‘சமர்த்தா சாப்பிட்டா கார் பொம்மை வாங்கித் தர்றேன்’ – இப்படி ஒவ்வொரு விஷயத்தை நிறைவேற்றவும் பொருள்களை லஞ்சமாகக் கொடுப்பது குழந்தைகளுக்கு நீங்கள் பணத்தை சம்பாதிக்க எவ்வளவு கஸ்ரப்படுகிறீர்கள் என்பதை   உணரமுடியாமல் போய்விடும்.

அதுமட்டுமல்ல, ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்து ஒரு வேலையை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்கிற தவறான பாடத்தை அவர்கள் இதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.
‘அம்மூ… மேத்ஸ்-ல போன தடவையைவிட இந்தத் தடவை அதிகமா மார்க்ஸ் வாங்கியிருக்க. அதனால, இன்னைக்கு அம்மா உனக்குப் பிடிச்ச வெங்காய பக்கோடா செய்து தர்றேன்’, ‘நீ இன்னைக்கு ரன்னிங்ல ஃபர்ஸ்ட் வந்ததை செலிபிரேட் பண்ண, நாம இன்னைக்கு மொட்டை மாடில நிலாச்சோறு சாப்பிடலாமா?’ – குழந்தைளை இப்படி உற்சாகப்படுத்தலாம். பாராட்டலாம்.
இதனால், பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான புரிதல் பலப்படும். பணத்தின் பெறுமதி தெரிய வரும்.இதன் மூலம் பதின்பருவக் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் கம்ஃபர்ட்டாக உணர்வார்கள்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்  இணைந்து செயற்பட வேண்டும்.உங்களுக்குள் குழந்தை வளர்ப்பில் கருது ஒற்றுமை அவசியம் இருக்க வேண்டும்.

உங்களுக்குள் முரண்பாடு இருந்தால் ,குழந்தைக்கு யார் சொல்வது சரி என்பதில் குழப்பம் ஏற்படும்.இதனால் குழந்தை தனக்கான வழியை தானே தேர்ந்தெடுக்கலாம். அல்லது அதிக இலாபம் கிடைக்கும் பெற்றோர் பக்கம் சாய நேரிடலாம்.

இதையெல்லாம் ஓரளவு செயல்படுத்த ஆரம்பித்தால் போதும், நீங்களே உணர்வீர்கள் குழந்தை வளர்ப்பு அவ்வளவு கடினமானதில்லை என்று.

எந்த குழந்தையும் நல்ல குழந்தையே மண்ணில் பிறக்கையிலே…

Leave a Reply

Your email address will not be published.