எலும்பு,பற்களுக்கு பலம் தரும் திராட்சை (Raisins)
உலர் திராட்சையில் (Raisins) கல்சியம் அதாவது சுண்ணாம்புச்சத்து (Calsium) அதிகம் நிறைந்துள்ளது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளர, பற்கள் வலுப்பெற மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்து கல்சியம் தான்.அதனால் தான் குழந்தைகளுக்கு இது அதிகம் தரப்படுகின்றது.அதோடு,
கேக்,லட்டுகள்,கேசரி போன்ற இனிப்பு உணவுகளில் உலர் திராட்சை, அதிகம் சேர்க்கப்படுகின்றது.
இன்னும் என்னென்ன மருத்துவ குணங்களை உலர் திராட்சை (Raisins) கொண்ண்டுள்ளது என அறிய வீடியோவைப் பாருங்கள்.
அத்துடன் எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு உலர் திராட்சை (Raisins) மிகவும் உதவுகிறது.
சிறிய அளவில் உள்ள இந்த திராட்சை சக்தி நிறைந்தது.மேலும் நார்ச்சத்து,விட்டமின்கள்,தாதுக்களைக் கொண்டுள்ளது.
இயற்கையாகவே திராட்சை இனிப்பு மற்றும் கலோரிகள் அதிகம் கொண்டிருக்கின்றது.ஆனால் அவற்றை அளவோடு
சாப்பிடும் போது நம்ஆரோக்கியம் மேம்படும்.திராட்சையில் நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு உதவும்.
இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு குதப்பி கொஞ்சம் கொஞ்சமாக சாற்றை விழுங்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம் அதிக ம் சுரக்கும்.மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வையும் கொடுக்கும்.
உயர்ந்த ரக திராட்சையை தரம்பிரித்து காய வைத்து உலர் திராட்சை தயாரிக்கப்படுகிறது.
உலர் திராட்சையில் கல்சியம், இரும்புச் சத்து, நார் சத்து , மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, போன்ற பல்வேறு சத்துக்களும் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன.
உலர்திராட்சையில் இரும்புச்சத்து உள்ளதால் முடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். பெண்கள் உலர்திராட்சையை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொண்டால், மாதவிடாய்க் கால வலி நீங்கும்; ஆரோக்கியம் கூடும்; ரத்தசோகை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம்.
விற்றமின் ஏ சத்து இருப்பதால், பார்வைக்குறைபாடு நீங்கும்; பார்வைத்திறன் மேம்படும்.
பொட்டாசியம் சத்து ,இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்கு தேவை. உலர்திராட்சையை சாப்பிடுவதால், நமக்கு பொட்டாசியம் சத்து கிடைக்கும்.இதயத்திற்கு நல்ல பலன் தரும்.
இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவும். எனவே சர்க்கரை நோயாளிகளும், உலர்திராட்சையை அளவோடு சாப்பிடலாம்.
குழந்தைக்கு பால் காய்ச்சும் போது, அதில் இரண்டு பழத்தை துண்டு செய்து போட்டு, காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், குழந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.