இராஜ ராஜசோழனின் கப்பற்படை(Raja Raja Cholan)

சோழர்கள் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் மற்றும் உலகப்புகழ் பெற்றவர் சோழப்பேரரசர், மும்முடி சோழர் கோப்பரகேசரிவர்மர் முதலாம் இராஜராஜ சோழன் (Raja Raja Cholan).

கி.பி 985 முதல் கி.பி 1014 ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகள் இவர் சோழப்பேரரசராக ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலம் சோழகளின் பொற்காலம் என்று புகழப்படுகிறது.

இராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழிவர்மன். விஜயாலய சோழன் நிறுவிய சோழப்பேரரசு இவர் காலத்திலும் மற்றும் இவர் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்த நிலையை எட்டியது.

பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே இராஜராஜ சோழனின் காலம் ஒரு பொற்காலமாகும்.

இராஜராஜ சோழனின் சிறப்பான ஆட்சி

தஞ்சாவூரில் உள்ள பெரியகோவில் அல்லது இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது.

நிலவரியை நிர்ணயிக்க வேண்டி நாடெங்கும் நிலங்களை அளந்து, நிலத்திற்கேற்ப வரி விதித்து, இப்போதைய நிர்வாகத்தில் உள்ளது போல் செயலாளர்களைக் கொண்ட மத்திய அரசை இராஜராஜ சோழன் நன்கு அமைத்தார்.

மேலும் நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆங்காங்கு மேற்பார்வைக்காக அமர்த்தி, கிராம சபைகளையும் மற்றப் பொதுக் குழுக்களையும் தணிக்கையின் மூலம் கட்டுப் படுத்தினார்.

அதனால் நிறைந்த நிலப்படையை உருவாக்கி, மேலும் பல வெற்றிகளை அடைந்து, பெரும் கப்பற்படையை நிறுவி, தென் இந்தியாவின் வரலாற்றிலேயே இராச்சியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவனாகத் இராஜராஜ சோழன் (Raja Raja Cholan) திகழ்ந்தார்.

இராஜராஜ சோழன் கால போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, ‘முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்’ எனப்படும் மாலதீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும்.

கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை.

எனினும் இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜ சோழன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது.

அன்னைமடி,இராஜராஜ சோழனின் கப்பற்படை,தஞ்சை பெரிய கோவில்,annaimadi.com,Rajarja solan,Rajarakja cholan

ராஜ ராஜசோழனின் (Raja Raja Cholan) கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் !

உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை அது.

கப்பல் படையை நிறுவி, தன் மகன் தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த ராஜ ராஜசோழனின் (Raja Raja Cholan) படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம்

இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டு, “திருநெல்வேலி அருங்காட்சியகத்தில்” பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது.

கப்பல் படைபிரிவுகள்

இந்த கப்பல் படை நிறைய குழுக்களை கொண்டிருந்தது. அனைத்து குழுவிற்கும் தலைவர் “அரசர்”.
இதில் “கனம்” (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு) என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது.இதை நிர்வகிப்பவர் “கனாதிபதி”.

“கனம்” (நிரந்தர பிரிவு ) 100 முதல் 150 கப்பல்கள் கொண்ட பிரிவு, மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம்! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது!

கன்னி” (போர் நேர / சிறப்பு பணிக்காக குழுமுதல்), இதை நிர்வகிப்பவர் உயரிய “கலபதி”, “கன்னி” என்பது  “பொறி” என்று கூட பொருள்படும்.

இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து (எலி பொறியில் சிக்குவதைப்போல)  ,அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைப்பது ஆகும். இதோடு இவர்கள் பணி முடிந்து விடும்.

அடுத்து “ஜதளம்” சுருக்கமாக “தளம்” (நிரந்தரப்போர் பிரிவு) இதை நிர்வகிப்பவர் “ஜலதலதிபதி”. இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது.

மண்டலம்” (பாதி நிரந்தர போர்ப்பிரிவு) இதை நிர்வகிப்பவர் “மண்டலாதிபதி” இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும்.இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள்!

“அணி” இதை நிர்வகிப்பவர் “அணிபதி” மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது.

பிரிவு” மிக முக்கியமான பிரிவு இது. இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர்.

அன்னைமடி,இராஜராஜ சோழனின் கப்பற்படை,தஞ்சை பெரிய கோவில்,annaimadi.com,Rajarja solan,Rajarakja cholan

உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால் “கீழ்பிரிவு-அதிபதி / தேவர்” என்று அழைத்தனர். இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது.உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்று.
இந்த கப்பல் படையை வைத்து தான் “இலங்கை”, “இந்தோனேசியா”, “ஜாவா”, “மாலைதீவு”, “மலேசியா”, “சிங்கப்பூர்” போன்ற அனைத்து நாடுகளையும் நம் மன்னன் கைப்பற்றினான்!

இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன்! இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளனவா என்பது சந்தேகமே!!
இன்னொரு ஆச்சரியமான செய்தி, இன்று புழக்கத்தில் இருக்கும் “NAVY” என்ற ஆங்கில வார்த்தை “நாவாய்” என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும்!!

இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு  தமிழர்களாகிய நமக்கே தெரியாமல் இருப்பது தான் பெரும் துயரம்.

நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும் ? சிந்தியுங்கள்.செயற்படுங்கள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *