திடீரென உடல் மெலிவதற்கு காரணங்கள் (Reason for Weight loss)
உடல் எடையை குறைப்பதற்கு பலர் தினமும் பல முயற்சி மேற்கொள்ளும் அதே வேளையில் உடல் எடை குறைகிறதே (Reason for Weight loss) என கவலைப்படுபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
எந்த காரணமும் இல்லாமல் ஒருவரது உடல் எடையானது குறைய ஆரம்பிப்பது நல்லதல்ல.ஏனெனில் பொதுவாக உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு, உடல் எடை குறைவு (Reason for Weight loss) ஒரு பெரிய அறிகுறி.
பத்திய உணவு எடுத்து கொண்டிருப்பது, அதிகமாக உண்ணா நோன்பு இருப்பது, ஒழுங்கற்ற உணவு பழக்கம், அதிக வேலைப்பளு, அதிக உடற்பயிற்சி ஆகியன காரணமாக எடை குறைதல் நேரலாம்.
உதாரணமாக, சிறுநீரக செயலிழப்பதற்கு ஆரம்பித்தால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ஆகவே உடல் எடையானது திடீரென்று குறைய ஆரம்பித்தால், தாமதப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது.
என்னென்ன காரணங்களுக்காக உடல் எடையானது குறையும்? (Reason for Weight loss)
பட்டினியும் பசியின்மையும்
உடல் எடை குறைவதற்கு முக்கிய காரணம் பட்டினி இருப்பது தான். அதிலும் பெண்கள் குண்டாக இருக்கிறோம் என்று சரியாக சாப்பிடாமல், டயட் என்ற பெயரில் பட்டினி இருக்கிறார்கள்.
பசியின்மையினால், உடலுக்கு அன்றாடம் வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உடல் எடையானது குறைய ஆரம்பிக்கும். உண்மையில் எடையைக் குறைக்க வேண்டுமெனில் சரியான உணவுகளை உட்கொண்டு எடையை குறைக்க வேண்டும். இல்லையேல், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
நல்ல தூக்கம்
சரியான தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டாலும், உடல் எடையானது குறையும்.
பொதுவாக, உடல் நலனுக்கு தூக்கம் அவசியம். அதிலும் உடல் எடையை கூட்டும் சமயத்தில் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. தூக்கத்தின் இயல்புகள், உடல் எடையை குறைக்கும் வாதத்தின் போக்கை கட்டுப்படுத்தும்.
நமது உடலுக்கு எவ்வளவு நேரத்தூக்கம் அவசியம் என்பதை புரிந்து கொண்டு அத்தனை நேரம் தூங்குவது நல்லது. குறித்த நேரத்தில் தூங்குவதும், எழுவதும் மிகவும் அவசியம்.
செரிமான மண்டலப் பிரச்சனை
செரிமான மண்டலத்தில் பிரச்சனை இருந்தாலும், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு உணவானது சரியாக செரிமானமாகாமல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்பட்டு, உடல் எடை குறைந்து காணப்படும்.
வயிற்றில் புண் அல்லது பூச்சிகள் போன்றவை இருந்தாலும், உடல் எடை குறையும். கட்டிகள் கட்டிகள் உடலில் புற்றுநோய் கட்டிகள் அல்லது வயிற்றில் ஏதேனும் கட்டிகள் இருந்தாலும், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.
நோய்கள்
தைராய்டு பிரச்சனையும் உடல் எடையை குறைப்பதில் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதயத்தில் ஏதாவது கோளாறு இருந்தால், அந்த கோளாறானது திடீர் உடல் எடை குறைவின் மூலம் தென்படும்.
தொண்டையில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும், உணவை விழுங்குவதற்கு சிரமம் ஏற்பட்டு, உணவை சாப்பிட முடியாமல், உடல் எடையானது குறையும்.
உடலில் சர்க்கரை நோய்/நீரிழிவு வந்திருப்பதை, உடல் திடீரென்று மெலிவடைவதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
காசநோய் பிரச்சனை இருந்தால், உடலானது மெலிய ஆரம்பிக்கும். இரத்தத்தில் தொற்று இரத்தத்தில் தொற்று இரத்தத்தில் ஏதேனும் பிரச்சனைகளோ அல்லது நாள்பட்ட மலேரியா போன்றவை கூட உடல் எடையைக் குறைக்கும்.
உளவியல் ரீதியான பாதிப்புகள்
அதிக மன வருத்தம், மன உளைச்சல், அதிகப்படிப்பு, மூளையை பயன்படுத்தி அதிக வேலை செய்தல் ஆகியவற்றாலும் எடை குறையலாம்.
மனச்சோர்வு, மன அழுத்தம், சோகம், கவலை, மன உளைச்சல் போன்றவை அதிகம் இருந்தாலும், உடல் எடையானது குறையலாம். எனவே தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை அவ்வப்போது மேற்கொண்டு, மனதை அமைதியாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
வாத, பித்த, கபதோஷங்களின் நிலை மாறுபாட்டால், உடல் நலம் பாதிக்கப்படுகிறதா என அறிந்து, அவற்றை சீர்படுத்தவும் முயல வேண்டும்.
வாத உடம்பு
இன்றைய உலகில், ஒழுங்கான இடைவெளியில் உணவு உண்பதில்லை. அவசரமாக உண்கிறோம். அல்லது வேறு காரணங்களால், வேறு வேலைகளுக்காக உணவை ஒதுக்குகிறோம்.
இது வாதத்தை அதிகரித்து, உடல் போஷாக்கை உறிஞ்சுவதை தடுக்கும். வாததோஷம், மனதையும், உடலில் சக்தி பயணிக்கும் பாதைகளையும் பாதிக்கும். இக்காரணங்களால் உடல் போஷாக்கினை கிரகிப்பதில் தடை நேரிடுகிறது.
ஆகவே திட்டமிட்ட நேரங்களில் உணவை எடுத்து கொண்டாலே உடலுக்கு தேவையான சக்தி, தொடர்ந்து கிடைத்து கொண்டிருக்கும்.
பித்தத்தின் காரணமாக வரும் உடல் எடை குறைவு (Reason for Weight loss)
பித்த தோஷம் அதிகமாவதன் காரணமாக உடல் எடை குறையலாம்.
பித்த தோஷம் அதிகமாகும் போது அவை தம்மைத் தாமே எரித்து கொள்ளும், இதனால் அந்நேரத்தில் மன அளவில் அதிக எழுச்சியும், அதிகப்படியான சிந்தனையும் இருக்கும்.
மசாலாப் பொருட்களை முழுதும் தவிர்க்க வேண்டும். கோதுமை, அரிசி, பச்சைப் பயிறு ஆகியவை சிறந்த உணவுகளாகும். நெய் மிக சிறந்த உணவு. சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை அளவோடு எடுக்கலாம்.
சோற்றுக் கற்றாழை, சதாவரி, சீந்தில் கொடி ஆகிய மூலிகைகள் நல்ல பலன் தரும்.
நீர்ச்சத்துக்குறைபாடு
எண்ணெய்க்குறைபாடு போலவே தண்ணீர் குறைவதும் உடலின் அடிப்போஸ் திசுக்களை (கொழுப்பு) இழக்கச் செய்யும்.
அதிக அளவில் வெதுவெதுப்பான நீரை அருந்துவது, காபின் தவிர்த்து, மூலிகை தேநீர், மற்ற திரவநிலை உணவுகளை 3 வேளை உணவுக்கிடையே எடுப்பது போதுமான நீர்ச்சத்து உடலில் இருக்க உதவும்.
அப்போது தான் சக்தியை கிரகிப்பது சரியாக நடக்கும். வளர்ச்சிதை மாற்றங்கள் நடைபெறும் பாதைகள் நன்கு செயல்பட முடியும். செரிமான மண்டலம் மட்டுமல்லாமல் உடல் முழுவதும் உள்ள ஒவ்வொரு திசுவின் செயல் மேம்பாட்டுக்கும் உதவும். இது கழிவு , நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவும்.
உடற்பயிற்சியும் தியானமும்
இயற்கையாக உடற்பயிற்சி, வாதத்தினை அதிகரிக்கும். கவனமாகத் தேர்ந்தெடுத்து செய்யாவிட்டால் கொழுப்புச்சத்தை கரைத்து உடல் எடையை குறைத்து விடும்.
சரியாகத் தேர்வு செய்து உடற்பயிற்சியை முறையாக செய்தால் மனஅழுத்தம் குறையும். அக்னி தூண்டப்பெறும், ரத்த ஓட்டம் சீராகும். செரிமானம் சரியாக நடக்கும்.
கழிவு முறையாக வெளியேற்றப்படும், தூக்கம் நன்கு வரும். உடல் இறுக்கம் குறையும். இதன் காரணமாக உடல் போஷாக்கு பெறும்.
ஆகவே நமது உடலுக்குப் பொருத்தமான பயிற்சி செய்யும் நேரம் ஆகியவற்றை தெரிந்து செய்வது நல்லது. பொதுவாக 30 நிமிட பயிற்சி அன்றாடம் செய்வது பயன்தரும்.
உடல் எடையை பேணும் முயற்சியில் தியானம் உதவுகின்றது. இது மன அழுத்தம், படபடப்பு மற்றும் பிற உளவியல் பிரச்சினைகள், உணர்ச்சிகளின் தலையீடு ஆகியன இருப்பின் அவற்றை தீர்த்து, உடலை கட்டமைக்க வழி செய்கிறது.
பிராணாயாமம்
பிராணன் என்பது உயிர்மூச்சு, உயிர் சக்தி, நமக்கு வாழ்வாதாரமாக இருப்பது. அது சுவாசத்தின் மூலம் பெறப்பட்டு உடலின் ஒவ்வொரு திசுவுக்கும், செல்லுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
வாதத்தின் நிலைப்பாடுகளை குறைக்க உதவும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்கும்.
உயிர்ச்சக்தி காக்கப்படும். உடலின் ஆழத்திலுள்ள திசுக்களுக்கு உயிர்சக்தி போய்ச்சேரும்.நாளும் 15 நிமிட பிராணாயாமம் போதுமானது.
எண்ணெய் குளியல்
எண்ணெய் தேய்த்துக் கொள்வது உடலுக்கு மட்டுமின்றி, சூட்சுமமான விழிப்புணர்வுக்கும் நன்மை பயக்கும்.
மன அழுத்தத்துடன் இருக்கும் போதும், மிகவும் அதிக வேலைப்பளுவுடன் இருக்கும் போதும், போஷாக்கு குறைவாக இருக்கும் போதும் நல்ல மாற்றங்களை தரக்கூடியது.
காலையில் குளிக்கும் முன் வெதுவெதுப்பான எண்ணெயை உடலில் தேய்து குளிக்கலாம். எண்ணெய் நமது உடலுக்கு பொருத்தமானதா என்று மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.நல்ல சக்தியை தரும், நரம்பு மணடலத்தை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும்.
உணவு உண்ணும் முறை
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை போலவே எப்போது சாப்பிடுகிறோம், எவ்வாறு சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது.
குறிப்பிட்ட நேரத்தில் கவனம் முழுவதும் சிதறாமல், உணவின் மீது இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். உணவினால் நாம் போஷாக்கை பெறுகிறோம் என்ற எண்ணத்தோடு உண்ண வேண்டும்.
இதைத்தான் நமது கலாச்சாரமும் அன்னம் கடவுள் என்று வணங்குகிறது. அதற்குரிய மரியாதை தர வேண்டும் என்கிறது. நமது உடலில் அக்னி உணவை செரிக்கிறது.
உணவை உடல் கிரகிக்கும் அளவுக்கு மாற்றி உடலின் ஒவ்வொரு திசுவுக்கும் செல்கிறது என்பதை மனக்கண்ணால் காண வேண்டும். உணவு திருப்தியாக இருந்தது என்பதைக்காட்டும் ஆழமான, நீண்ட மூச்சுக்களை எடுக்க வேண்டும்.
வாதத்தைக் குறைக்க எண்ணெய் நல்ல உணவு, நல்லெண்ணெய், ஒலிவ் எண்ணெய், நெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியன நன்மை தரும்.
இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவையுள்ள உணவுகள் நலம் தரும். இயற்கையிலேயே இனிப்பான பழங்கள், கொட்டைகள், தானியங்கள், பால், தயிர், முட்டை, நெய், வேர்க்காய்கறிகள் ஆகியன ஏற்றது.
பேரீச்சை, பாதாம், உலர் பழங்கள் அளவோடு எடுக்கலாம்.
உணவுகளுக்கிடையே சாப்பிடும் நொறுக்குத்தீனிகள் சர்க்கரையால் ஆன பொருட்களாகவோ, துரித உணவுகளாகவோ இல்லாமல் சத்து நிறைந்ததாக இருப்பது அவசியம்.
உடல் எடை குறைவு (Reason for Weight loss) ஏற்படும்போது உடல் எடையை கூட்டுவதை மட்டும் கருத்தில் கொண்டு சிகிச்சை எடுக்காமல், உடல்நலம் மேம்படவும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.