அல்சரைக் குணப்படுத்தும் ரெசிபிகள் (Recipes to cure ulcer)
உணவின் மூலமே அல்சருக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அல்சரைக் குறைக்க கூடிய பொருட்களை வைத்து உணவு தயாரித்து (Recipes to cure ulcer) சுவையான முறையில் உண்ணலாம். அதேசமயம் அல்சரும் குறைந்து விடும். சாப்பிட்ட பிறகு ஏற்படும் எரிச்சலும் இருக்காது. பயமின்றி உணவை உட்கொள்ளலாம்.
வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதி தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில்முக்கியமானது அல்சர் (ulcer).
பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள கண்ணில் படும் மருந்துகள், வலி நிவாரணிகளை வாங்கி பாவிப்பது ,அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல… பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரிப்பதற்கு அந்த வலி நிவாரணிகளே கூட ஒரு காரணியாகிவிடும்.
காரம், புளிப்பு, உப்பு போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுவது.மற்றும் பால்,பாற்பொருட்கள்,சோடா,அதிக மசாலா கலந்த உணவுகள், சிவப்பு இறைச்சி போன்றவற்றை அல்சர் உள்ளவர்கள் தவிர்த்தால் நல்ல பலனை பெறலாம்.
கடுகு-தேங்காய் பச்சடி (Recipes to cure ulcer)
தேவையான பொருட்கள்
கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – அரை மூடி
தயிர் – ஒரு கப் (100 மில்லி)
சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை
சின்ன வெங்காயம் – 2,
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை (Recipes to cure ulcer)
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், கடுகு, சுக்குப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
இந்த விழுதில், நன்றாக அடித்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இதை வெறுமனே சாப்பிடலாம். இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
வெஜிடபிள் அவியல் கூட்டு (Recipes to cure ulcer)
தேவையானவை
பொடியாக நறுக்கி கரட், சௌசௌ, சுரைககாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்தது – ஒரு கப், தயிர் – அரை கப் (50 மில்லி), சர்க்கரை – ஒரு டீஸ்பூன் (5 கிராம்), தேங்காய் – கால் கப் (25 கிராம்), பயத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – 5 மில்லி.
செய்முறை (Recipes to cure ulcer)
வெங்காயத்தைத் தவிர அனைத்து காய்கறிகளையும் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும். பயத்தம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேக வைத்த காய்கறி கலவையைப் போட்டுக் கொதிக்க விடவும்.
அரைத்த தேங்காயைச் சேர்த்து, கொதித்ததும் பருப்பு, உப்பு சேர்த்து இறக்கவும். கடைசியில் தயிர் சேர்த்துக் கிளறவும். இதை சாதத்துடன் சேர்த்துஉண்ணலாம்.இட்லி,அப்பம்,தோசை,இடியப்பத்துடன் காலி,இரவு உணவுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.
இரண்டு செய்முறைகளிலும் மே தயிர் மற்றும் தேங்காய் சேர்க்கப்பட்டிருப்பதால், உடலில் நன்மை செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு உதவியாக இருக்கும். வீரியமிக்க புண்களையும் ஆற்றக்கூடிய அருமருந்தான தேங்காய் எண்ணெயும் சேர்க்கப்படுவதால், வயிற்று எரிச்சல் குணமாகும்.
அதோடு உணவு எளிதாக ஜீரணமும் ஆகிவிடும்.