ஆரோக்கியத்தை சீராக்கும் சீரகம் (Regulate health with cumin)
சீரகம் (Regulate health with cumin) உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, கலோரிகளை எரிக்கும்.சீரகத்தில், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.
சீரகத்தை அன்றாட உணவில் எடுத்து வந்தால் தொப்பையைக் குறைக்கலாம்.
- தினமும் சீரகத்தை நீரில் , இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
- அதை வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து விடவும்.
- இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடிக்க வேண்டும்.
இதன் மூலம் விரைவில் உடல் எடை குறைந்திருப்பதை உணரலாம்.
மேலும் மாரடைப்பைத் தடுக்க , ஞாபக சக்தியை அதிகரிக்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த, இரத்த சோகையை சரிசெய்ய, செரிமானத்தை மேம்படுத்த, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்க சீரகம் (Regulate health with cumin) பயன்படுகிறது.
வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாய்வு போன்ற பிற அஜீரண பிரச்சனைகளை தடுக்கிறது.சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
சீரகத்தில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்பு ,பாக்டீரியா எதிர்ப்பு பண்பு நமக்கு ஏற்படக்கூடிய சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்துகிறது.
அடிக்கடி சீரணக் கோளாறு இருந்தால், சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள்.
சீரகத் தண்ணீரானது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சீரகத் தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.எடை குறைக்க சீரகத் தண்ணீர் ஆரோக்கியமான வழியாகும்.இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
நீங்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், இந்த சீரகத் தண்ணீரை அருந்துவது ஆழமான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
கொழுப்பின் அளவைக் குறைக்கிறது மற்றும் ஆரோக்கியமான மற்றும் தெளிவான சருமத்தைப் பெற சிறந்த பானமாக இது பயன்படுகிறது
வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடித்தால், சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றை சமபங்கு எடுத்து நன்கு மையாகப் பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர் 2 சிட்டிகை அளவு தேனில் குழைத்துக் கொடுக்க பசியை தூண்டும்.
”அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி உப்பி விட்டது,” என வருத்தப்படுபவருக்கு சீரகம் (Regulate health with cumin) ஒரு அருமையான மருந்து.ஒரு தே.க சீரகபொடியை வாயில் போட்டு இளஞ்சூடான நீரை குடியுங்கள்.உடனே சரியாகிடும்.
நீங்களே வீட்டில் பொடி பண்ணி ஒரு போத்தலில் வைத்திருக்கலாம்.அல்லது நல்ல தயாரிப்புகளை கடைகளிலும் வாங்கி பாவிக்கலாம்.
சீரக கஷாயம்
சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சீரகத்தில் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை நீராக மாற்றிக் குடிக்கும்போது உங்கள் உயர் ரத்த அழுத்தமானது கட்டுக்குள் வருகிறது. ரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்த தீர்வாக சீரகத் தண்ணீர் இருக்கிறது.