மறுபிறவி இருக்கா? (Reincarnation)

இறந்தபின் என்ன நடக்கும்? அடுத்த பிறவி (Reincarnation)  இருக்கா ? இல்லையா?

இது எல்லோருக்கும் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. பல விடைகள் கிடைத்தாலும் திருப்தியில்லை.சந்தேகம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

உயிருடன் இருக்கும் வரை சரி.இல்லாமல் போகும் போது எங்களுக்கு என்ன நடக்கும்? என அறிய யாருக்கு தான் ஆவல் இருக்காது.

கருட புராணத்தில் மறுபிறப்பு  (Reincarnation) குறித்த சில தகவல்கள் உள்ளன. பொதுவாக ஒரு ஆத்மா இந்த பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்துக் கர்மவினைகளையும் அனுபவித்து முடித்துவிட்டால் அந்த ஆத்மாவிற்கு மறுபிறவி ஏற்படாது.

தனக்கென்ன எந்த ஒரு ஆசையும் இல்லாமல் பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சமமாகி கர்மவினைகள் ஏதும் இல்லாதவருக்கு மறுபிறவி  (Reincarnation) ஏற்படுவதில்லை.

 மறுபிறப்பு (Reincarnation) பற்றி  இவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்.

இறைவனை மனதில் நிறுத்திக் கொண்டு, பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு எப்பொழுதும் இறைவனின் எண்ணத்தோடு வாழும் உண்மையான பக்தர்களுக்கும் மறுபிறவி ஏற்படுவதில்லை.

எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, நீண்ட ஆயுள் இல்லாது   குறுகிய காலத்தில் இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள்.

அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை சரி

நமது சாஸ்திரத்தின்படி இவ்வுலகில் வாழும் அனைவரும் பிரமாத்மாவில் இருந்து வந்த ஜீவன்கள் தான். நிச்சயம் ஒருநாள் இந்த ஜீவன்கள் பரமாத்மாவை அடைந்தே தீர வேண்டும்.

அது ஒரு பிறவியிலும் நடக்கலாம் அல்லது ஓராயிரம் பிறவியிலும் நடக்கலாம். ஆனால் நிச்சயம் ஒரு நாள் அது நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

Reincarnation ,annaimadi.com ,மறு பிறவி,மறுபிறப்பு, after death,what happens after death,

போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தானோ? இந்த பிறவியில் மனிதனாக பிறந்து இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கிறான்!.’ இதை பலர் கூற கேட்டிரு[போம்.
ஆனால் மனிதப் பிறவி எடுப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.
 
முதலில் தாவரமாக பிறந்து, இரண்டாவதாக நீர்வாழ் உயிரின பிறவி எடுத்து, மூன்றாவதாக ஊர்வன இனத்தில் பிறப்பெடுக்கிறது.
நான்காவதாக பறவையாக பிறந்து, ஐந்தாவது ஜென்மத்தில் விலங்காக பிறந்து, இப்படியாக ஐந்து பிறவிகளை எடுத்து பிறருக்கு உதவி செய்ததன் மூலம் தான் நம்மால் மனிதப் பிறவியை எடுக்க முடியும் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
 
மனிதப் பிறவி எடுப்பது என்பதில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கின்றது என்பதை இதன் மூலம் நாம் ப்புரிந்து கொள்ளலாம்.
மனிதப் பிறவியில் நாம் செய்யும் பாவங்கள் கணக்கிடப்பட்டு தான், அடுத்த பிறவியானது நமக்கு தரப்படுகிறது என்று கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *