வறட்டு இருமல் நீங்க (Relieve dry cough)

வறட்டு இருமல் (Relieve dry cough) என்பது ஒரு வைரஸ் தொற்று. இது அதிகமாக குழந்தைகளை பாதிக்கிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று அதிக சத்தத்துடன் இருமுவார்கள்.

இருமும் பொழுது தொண்டையில் எரிச்சல் அதிகமாக ஏற்படும். குறிப்பாக படுத்தவுடன் இருமல் அதிகமாக ஏற்படும். தொண்டை கட்டினாற்போல் பேசுவார்கள்.

வறட்டு இருமல் உட்பட அனைத்து வித நோய்களுக்கும் நம் முன்னோர் சொன்ன சித்த மருத்துவ குறிப்புகள் ஏராளம்.

இருமலை நிரந்தரமாக குணப்படுத்த  நமது இந்திய பாரம்பரியத்தில் பலவகை சித்த வைத்தியங்கள் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

வறட்டு இருமல் ஏற்படக் காரணம்

வறட்டு இருமல் வர முக்கியமான காரணமாக கருதப்படுவது தூசு மற்றும் புகை. புகை பிடிப்பவகளை மட்டுமின்றி அவர்கள் அருகில் இருப்பவர்களையும் இது பாதிக்கிறது. அசுத்தமான தண்ணீரினால் கூட இந்த நோய் ஏற்படலாம்.

பெயருக்கு ஏற்றாற்போல்  இந்த வறட்டு இருமல் சளி இல்லாமல் நம்மை தாக்கும். இதன் மற்றொரு காரணமாக ஒவ்வாமை கூறப்படுகிறது. சிலருக்குநாய்,பூனை போன்ற விலங்குகளின் முடியினாலும் வறட்டு இருமல் ஏற்படலாம்.

நாள்பட்ட ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் வறட்டு இருமல் வரும். 

annaimadi.com,relief dry cough,home medicine for dry cough,sidha medicine for dry cough,giner for dry cough,mint for dry cough

வறட்டு இருமல் நீங்க (Relieve dry cough)

கொள்ளுப்பொடி,மிளகு, சுக்கு, பூண்டு  கசாயம்

கொள்ளுப்பயறு 50கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் மிளகு, சுக்கு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு இந்த கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை இரண்டு நாட்கள், நாளுக்கு இரு வேளை குடித்தாலே போதும் வறட்டு இருமல் மட்டுமின்றி எந்த விதமான இருமலும் காணாமல் போகும்.

எலுமிச்சை, தேன்

annaimadi.com,relief dry cough,home medicine for dry cough,sidha medicine for dry cough,giner for dry cough,mint for dry cough

 இருமல் ஜலதோஷம் அதிகம் உள்ளவர்கள் விற்றமின் c அதிகமாக உட்கொள்ள வேண்டும். காரணம் விட்டமின் சி சளி யை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. எலுமிச்சை,ஆரஞ்சு, கொய்யா,போன்றவற்றில்  விட்டமின் சிஅதிக அளவில் உள்ளது.

இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எழுமிச்சை சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் மற்றும் அதன் காரணமான சளியும் காணாமல் போகும்.

உலர் திராட்சை

குழந்தைகளால்  உலர் திராட்சை அதிகம் விரும்பப்படும் ஓர் உணவு. 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக வரும் வரை விட வேண்டும். இதனை கலவையை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும்.

இதன் சுவையும் நன்றாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். வறட்டு இருமல் குழந்தைகளுக்கு வந்திருந்தால் இந்த மருந்தை தாரளமாக கொடுக்கலாம்.

தேன், இஞ்சியுடன் மாதுளம்பழம்

annaimadi.com,relief dry cough,home medicine for dry cough,sidha medicine for dry cough,giner for dry cough,mint for dry cough

மாதுளம் பழத்தை தோல் இல்லாமல் மாதுளம் பழ முத்துக்களை மட்டும் எடுத்து பழச்சாறு ஆக்கி கொள்ள வேண்டும்.  மாதுளம் பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

 இஞ்சி, தேன்

annaimadi.com,relief dry cough,home medicine for dry cough,sidha medicine for dry cough,giner for dry cough,mint for dry cough

அரை விரல் அளவிற்கு இஞ்சியை எடுத்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும் (Relieve dry cough).

வறட்டு இருமல் நீங்க இலகுவான வீட்டு வைத்தியம் (Relieve dry cough)

மாதுளம் பழசாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

தூதுவளை

annaimadi.com,relief dry cough,home medicine for dry cough,sidha medicine for dry cough,giner for dry cough,mint for dry cough

சளி, இருமலுக்கு தூதுவளை சிறந்த மருத்துவ உணவு. தூதுவளை இலைகளை காயவைத்து பொடியாக்கி வைத்து கொள்ளலாம். ஒரு ஸ்பூன் தூதுவளை  பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.  

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றை மிதமான சூட்டு நீரில் கலந்து, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும்.

எலுமிச்சையில் விற்றமின் சி மிகுதியாக உள்ளது, சளி தொல்லை இருக்கும்போது உடலுக்கு விற்றமின் சி மிகவும் அத்தியாவசியம்

புதினா

annaimadi.com,relief dry cough,home medicine for dry cough,sidha medicine for dry cough,giner for dry cough,mint for dry cough

வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவில் தேநீர் , புதினாதுவையல் , புதினா சூப் செய்தோ சேர்த்துக்கொள்வதால் வறட்டு இருமலில் இருந்து எளிதில் விடுபடலாம்

திப்பிலி

நாட்டு மருந்து கடைகளில் திப்பிலி கிடைக்கும். இதனை வறுத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல்  குணமாகும்.

திப்பிலியை பொடியாக்கி அதில் சிறிதளவு எடுத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், சளி, வரட்டு இருமல் மற்றும் தொண்டை கமறல் குணமாகும்.  

மஞ்சள் பால்

இளஞ்சூடான பாலில் மஞ்சள் மற்றும் மிளகு பொடியை கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக போய்விடும்.  வறட்டு இருமலும் குறையும். இது இருமலுக்கு கைகொடுக்கும்  வீட்டு வைத்தியம்.

சீரகம்

10 கிராம் பொடி செய்த சீரகத்துடன் பொடி செய்த பனங்கற்கண்டை சேர்த்து இரண்டும் சம அளவில் கலந்து காலை, மாலை என இருவேளை சூடான நீரில்  கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *