சிறுநீரக கோளாறுகளுக்கு மருந்தாகும் முள்ளங்கி (Remedy for kidney disorders)
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இயங்க செய்வதில் முள்ளங்கி கீரை சிறப்பாக (Remedy for kidney disorders) செயல்படுகிறது.
எனவே இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர சிறுநீரக சம்பந்தமான நோய்கள் நம்மை நெருங்காது.
சிறுநீரக கோளாறுகலைத் தீர்க்கும் முள்ளங்கி (Remedy for kidney disorders)
முள்ளங்கிக் கீரையின் சாற்றை 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் (Remedy for kidney disorders) கரைந்துவிடும்.
சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் கீரை சாப்பிட விரும்பினால், முள்ளங்கிக் கீரையை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
முள்ளங்கி கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
மற்ற எல்லா கீரை வகைகள் போலவே முள்ளங்கி கீரையிலும் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன.
முள்ளங்கி கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடலின் ஆரோக்கியத்திற்கும், சீரான செயல்பாட்டிற்கும் தேவையான இரும்புசத்து, விற்றமின்கள், தாதுக்கள் போன்றவை இதில் ஏராளம் உள்ளன.
எனவே இக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் உடலின் ஊட்டச்சத்து தேவையை நிறைவு செய்து கொள்ளலாம்.
முள்ளங்கி கிழங்குப் பகுதியில் இருப்பதை விட ஆறு மடங்கு ‘விற்றமின் C’ இதன் கீரைகளில் இருக்கிறது. புரோட்டீன், கல்சியம் மற்றும் இரும்புச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.
முள்ளங்கி கீரையின் ஏனைய மருத்துவ குணங்கள்
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்தஉணவாக மருந்தாக உள்ளது.
முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். விற்றமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.
உடல் எடை கூடுவது என்பது பின்னாட்களில் பல நோய்கள் வர வைப்பதற்கு காரணமாகிவிடும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கி கீரையை அதிகம் சாப்பிடுவது நல்லது.
இதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் கொழுப்பு படிவதை தடுத்து உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கண் பார்வை கூர்மையாகவும் இருக்க புரதம் குறைந்த, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். முள்ளங்கி கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்களில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
உடலில் மண்ணீரல், கல்லீரல் போன்றவைகளின் செயல்பாடுகளிலும் ஏற்படும் சிக்கல்கள் தீர்ப்பதில் முள்ளங்கி கீரை சிறப்பாக செயல்படுகிறது.
தினம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முள்ளங்கி கீரை சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.
ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை உண்டு வர நீர் அடைப்பு தொல்லை தீரும்.
அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது.
முள்ளங்கி கீரையை பக்குவப்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு சுவாசம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும்நீங்கிவிடும்.
நாம் சாப்பிடும் உணவை உடலுக்கு தேவையான சத்தாக மாற்றும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை முள்ளங்கி கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் விரைவில் தீரும்.
மலச்சிக்கல் தீர்க்கும் முள்ளங்கி
அன்றாடம் இரண்டு முறை அல்லது ஒரு முறையாவது மலம் கழிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லதுஉடலில் கழிவுகள் தேங்கினால் உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
நீண்ட நாள் மலச்சிக்கலை போக்கவும், செரிமானம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரவும் முள்ளங்கி கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவது நல்லது.
தொடர்ந்து மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.
இதயம் நலமாக இருந்தால் உடலில் பலமும், ஆரோக்கியமும் தானாகவே வந்துவிடும். இதயத்தை பலப்படுத்துவதற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாக முள்ளங்கிக்கீரை இருக்கிறது.
எனவே வாரம் குறைந்தபட்சம் ஒருமுறையாவது முள்ளங்கிக்கீரையை பக்குவப்படுத்தி சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.