பல்வலிக்கு நல்ல தீர்வு (remedy for toothache)

பல்வலி (toothache ) என்பது அடிக்கடி ஏற்படும் ஒரு வலி.இதனால் சாப்பிட முடியாது,கன்னம் வீங்கும்.தாங்க முடியாத வலி ஏற்படும்.எப்படி இந்த பல்வலியை தடுக்கலாம் (remedy for toothache) என்பதைப் பற்றி பார்க்கலாம். பழக்கவழக்கங்கள், உணவு முறைகள்போன்ற காரணங்களினால் பல் பிரச்சனை ஏற்பட்டு  பெரிய அளவில் தொல்லை தருகிறது.

பல்வலி,பற்சொத்தை, ஈறுகளில் இரத்தம் கசிதல், பற்கறை,பற்களில் இடைவெளி,பற்சிதைவு, பல் உடைதல், எனாமல் தேய்தல், முறையற்ற வகையில் கடுமயாகப் பற்களைத் தேய்ப்பதால் பல் வேர்கள் வெளியே தெரிவது என பல பிரச்சனைகள் பற்களில் அடிக்கடி  ஏற்படும்.

இவற்றில் இருந்து கவனமாக  நாம் பற்களைப் பாதுகாக்க வேண்டும். 

பற்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.உண்ணும் உணவு சரியாக சமிபாடு அடைய , பற்களால் உணவினை நன்கு அரைத்து விழுங்க வேண்டும். இதற்கு ஆரோக்கியமான,உறுதியான பற்கள் அவசியம்.

ஏன் ,முக அழகிற்கும் ,கதைப்பதற்கும் கூட பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது ,மிக அவசியம்தேவை.

பல்லுப் போனால் சொல்லுப் போச்சு

பல்லில் வரும் சிறு பிரச்சனை என்றால் கூட ,கருத்தில் கொண்டு உடனே தீர்வு காணுங்கள்.

வருமுன் காப்பது அவசியம்.சரியான முறையில் பல்லை நாளும் துப்பரவு செய்து கொள்ள வேண்டும்.அதற்கு இந்த முறையில் இயற்கை பல்பொடி தயார் செய்து பயன்படுத்தி பார்க்கலாம்.

கெடுதல் ஏதும் இல்லை.நன்மைகள் பல  கிடைக்கும்.

பல்சார்ந்த அனைத்து பிரச்சனைக்கும் ஒரு சிறந்த தீர்வு.

பல்வலிக்கு சிறந்த பற்பொடி (remedy for toothache)

எப்படி தயார் செய்வது என பாருங்கள்.

இந்த முறையில் இயற்கை பற்பொடி (Herbal tooth powder) தயாரித்து பயன்படுத்த முடியாதவர்களுக்கு

இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட  மூலிகை பற்பொடிகள் (Readymade natrural toothpowders)  இங்கே கிடைக்கின்றன.

உப்பு நீரில் கொப்பளிப்பது மிக மிக நல்லதாகும்.இதனால் பற்களில் அமில-காரத்தன்மை சமபடுத்தபடும். உப்பு பக்டீரியாக்களை அழிக்கும். ஈறுகளை பலப்படுத்தும். ரத்தக் கசிவிற்கு உப்பு நீரில் கொப்பளித்தால் நல்ல பலன் பெறலாம்.

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருப்பதும்  பற்களின் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. மேலும் கொஞ்சம் புதினா இலையை எடுத்து அதை நிழலில் நன்றாக காய வைத்து,அரைத்த  உப்புதூளுடன் சேர்த்து பல் துலக்கினால் இரெண்டே நாட்களில் பல் கூச்சம் இருந்த இடம்  தெரியாமல் போய் விடும்.

Leave a Reply

Your email address will not be published.