அல்சர் நோய்க்கு அரிய தீர்வு (Remedy for ulcer)
அல்சர் நோய்லிருந்து விடுபடுவதற்கு (Remedy for ulcer) நேரம் தவறாமல் உணவினை உட்கொள்ள வேண்டும்.இது மிக அவசியம்.
அல்சர் நோயால்
- வயிறு, நெஞ்சு போன்ற பகுதிகளில் அவ்வப்போது வலி ஏற்படுதல்,
- சாப்பிட்ட உடனேயோ சற்று நேரம் கழித்தோ வயிற்று வலி உண்டாதல்,
- வாந்தி எடுத்தல், இரத்தத்துடன் மலம் கழிதல்,
- பசியினால் சாப்பிட வேண்டும் என்றிருந்தாலும் சாப்பிட முடியாமல் இருத்தல்,
- வாயில் அடிக்கடி துர்நாற்றம் வீசுதல்,
- உடலின் எடை குறைந்து வருதல்,
- வயிற்று எரிச்சல்,
- வயிறு உப்பிசம்,
- புளிப்பு ஏப்பம் வருதல் போன்ற உபாதைகள் ஏற்படும்.
‘கேஸ்டிரிக் அல்சர்’ பெப்டிக் அல்சர்’ என இருவகையான அல்சர்’ ஏற்படுகிறது.
கேஸ்ட்ரிக் அல்சரால் உணவு சாப்பிட்டவுடன் வயிற்றுவலி அதிகமாகும். பசி இருந்தும் ,சாப்பிட பயந்து சாப்பிடாமல் இருப்பதால் உடல் ஆரோக்கியம் குன்றும்.உடல் எடை குறைந்து கொண்டே போகும். உடல் மெலியும்.
பசி எடுக்கும் நேரத்தில் காலம் தவறாமல் ஏதாவது பழங்கள் அல்லது பழச்சாறுகள் உட்கொண்டு பசியை தணிக்க வேண்டும்.பீற்றூட் ஜூஸ் அடிக்கடி குடித்துவர அல்சர் குறையும் (Remedy for ulcer).
அல்சர்நோய்க்கு பீற்றூட் ஜூஸ் மிக நல்ல தீர்வாக இருக்கின்றது.
வீட்டு வைத்தியத்தால்,அதாவது வீட்டிலிலுள்ள பொருட்களால் எப்படி அல்சரை விரட்டுவது என வீடியோவைப் பார்த்து அறிந்து கொள்வோம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 50 மிலி அளவுக்கு வெண்பூசணிச் சாறினை அருந்திவர வேண்டும். சிலருக்கு இச்சாறு பிடிக்காது.சளி ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்டவர்கள் உணவாக சமைத்து சாப்பிடலாம்.
அல்சர் நோயாளிகள் உணவில் பால் சாதம், தயிர் சாதம், மோர்சாதம், இளநீர், புடலங்காய், காரட், முட்டைகோஸ், வாழைப்பழம், மணத்தக்காளிப்பழம், மணத்தக்காளி கீரை, கீரைவகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை உணவாக கொள்ள வேண்டும்.
நாவல்பழம், சப்போட்டா பழம், மாதுளம் பழம், சுண்டைக்காய், அத்திப்பழம் போன்ற துவர்ப்பு சுவையுள்ளவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.
உணவில் உப்பு, புளி, காரத்தை குறைப்பது மிக நல்லது.போதைபொருள்,மது அருந்துவது போன்ற பழக்கங்களை அறவே விட்டுவிட வேண்டும்.
உணவு உண்ணும்போது பற்களால் நன்கு மென்று அரைத்து உமிழ்நீர் கலக்கும்படி செய்து விழுங்க வேண்டும்.
ஒரு கப் தண்ணீர் குடித்தாலும் கூட கொஞ்சம் கொஞ்சமாக நாவால் நன்கு கலக்கி உமிழ்நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.