மாரடைப்பிற்கான அபாயம் இள வயதிலேயா?(Risk of heart attack at a young age)

மாரடைப்பு வருவதற்கு (Risk of heart attack) அடிப்படைக் காரணம் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவது தான். அவ்வாறு படிவதை மருத்துவத்தில் atherosclerosis என்கிறார்கள். இதைத் தமனித் தடிப்பு அல்லது நாடித் தடிப்பு என்பார்கள்.

மாரடைப்பிற்கான அத்திவாரம் இளவயதிலே?

காலக் கிரமத்தில் கொழுப்பு படிவது மோசமாகி இருதயத்திற்கு இரத்தத்தைப் பாய்ச்சும் நாடிகளில் அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பு (Risk of heart attack) வரும். மூளைக்கான இரத்தக் குழாய்களில் அவ்வாறு நடந்தால் பக்கவாதம் வரும்.

இந்தக் கொழுப்புப் படிவது இள வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது.அதனால் மாரடைப்பு வருவதற்கான (Risk of heart attack) மாற்றங்கள் இளவயதிலேயே தோன்றுகின்றன.Is the risk of heart attack at a young age?,மாரடைப்பிற்கான அபாயம் இள வயதிலேயா,annaimadi.com,அன்னைமடி,மாரடைப்பிற்கான காரணிகள் எவை? ,மாரடைப்பு அபாயத்தை  தவிர்க்க செய்ய வேண்டியது என்ன?, atherosclerosis , தமனித் தடிப்பு , நாடித் தடிப்பு

அண்மையில் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளிடையே ஒரு ஆய்வு செய்யப்பட்டபோது அவர்களது இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்திருப்பது தெளிவாகக் காணப்பட்டது.

முக்கியமான விடயம் என்னவென்றால் இவர்கள் நல்ல ஆரோக்கியமானவர்கள். குருதிக் குழாய்களில் கொழுப்புப் படிவதற்கான ஆபத்தான அடிப்படை காரணங்கள் (Risk factors) எதுவும் இல்லாதவர்கள்.

அதாவது நீரிழிவு,உயர் இரத்த அழுத்தம்,புகைத்தல் பழக்கம்,இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்பு,பரம்பரையில் இளவயதிலேயே மாரமடைப்பு வருவது போன்ற எந்த ஆபத்து காரணிகள் எதுவும் அற்றவர்கள். 

நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான இடர் காரணிகள் என இதுவரை காலமும் நம்பியிருந்தவை எதுவும் இல்லாதபோதும் ஏன் அவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொலஸ்டரோல் படிந்தது?

மாரடைப்பிற்கான புதிய காரணிகள் எவை? (New risk factors for heart attacks)

காரணம் இவர்களில் நலக்கேட்டிற்கான வேறு விடயங்கள் காரணிகளாக இருந்தன. இவைதான் நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான புதிய காரணிகள். அவை என்ன?

  • அவர்களின் வயிற்றறையின் சுற்றளவு அதிகமாக இருந்தது. வயிற்றில் உள்ள உள்ளுறுப்புகளில் கொழுப்பு அதிகமாகப் படிந்தமைதான் வயிறு பருத்ததற்குக் காரணமாகும்.
  • அதேபோல நெஞ்சறையின் உள்ளுறுப்புளிலும் கொழுப்புப் படியலாம்.

யுத்தத்திலும், விபத்துகளிலும் இறந்த இளவயதினரிடையே செய்யப்பட்ட பரிசோதனைகளில் அவர்களில் 80 சதவிகிதமானோருக்கு நாடித் துடிப்பு இருந்ததை முன்பு ஓர் ஆய்வு சுட்டிக் காட்டியது. எனவே அவர்கள் வெளிப்படையாக ஆரோக்கியமானவர்களாக இருந்தபோதும் எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான அத்திவாரம் போடப்பட்டமை உறுதியாகியது.

Is the risk of heart attack at a young age?,மாரடைப்பிற்கான அபாயம் இள வயதிலேயா,annaimadi.com,அன்னைமடி,மாரடைப்பிற்கான காரணிகள் எவை? ,மாரடைப்பு அபாயத்தை  தவிர்க்க செய்ய வேண்டியது என்ன?, atherosclerosis , தமனித் தடிப்பு , நாடித் தடிப்பு

ஆபத்தைக் கணிப்பது எப்படி?

ஒருவரின் ஆரோக்கியத்தை அறிவதற்காக உயரம் (Height)> எடை (Weight), உடற்திணிவுக் குறியீடு ஆகியவற்றை மட்டும் அளந்து பார்ப்பது போதுமானதல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வயிற்றறையின் சுற்றளவை அளப்பது முக்கியமானது.

  • ஆண்களில் இது 102 செ.மி ஆகவும்,
  • பெண்களில் 88 செ.மி ஆகவும் இருக்க வேண்டும்.

வயிற்றின் சுற்றளவை விட, வயிற்று சுற்றளவிற்கும், இடுப்புச் சுற்றளவிற்கும் இடையோயன சதவிகிதம் முக்கியமானது என நம்பப்படுகிறது.

  • இது பெண்களில் 0.8ற்று குறைவானவும்,
  • ஆண்களில் 0.9 க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.

செய்ய வேண்டியது என்ன?

எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் போன்றவை வருவதற்கான அடித்தளம் ஏற்கனவே உங்களுக்கும் போடப்பட்டிருக்கலாம்.

ஆயினும் காலம் கடந்துவிடவில்லை. உங்களுக்கு ஆபத்தைக் கொண்டுவரக் கூடிய இடர் காரணிகளைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பருத்த வயிறு முக்கியமான பிரச்சனை என்பதை மறக்காதீர்கள்.

ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *