கங்கைக்கரை அதிசயங்கள் (River Ganga)

கங்கைக்கரை (River Ganga)தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே ……

இறைத்தன்மை கொண்ட கங்கை நதி (River Ganga). பாரதத்தின் பெரும்பான்மையான மக்கள் வழிபடும் ஒரு புனிதமான தெய்வீகத்தன்மை கொண்டதாக விளங்குகிறது.
ஆதிமனிதனாக இருந்த காலத்திலேயே உலகின் பல பகுதிகளிலும் நதிகளின் ஓரத்திலேயே தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான்.
இன்று உலகின் பல நாடுகளிலிருந்த மிகப் பழமையான நாகரீகங்கள் அனைத்துமே நதிக்கரையோரம் தோன்றியதாகும்.
அப்படி உலகில் பல நதிகளிருந்தாலும் நமது நாட்டின் வட பகுதியில் ஓடும் “கங்கை நதிக்கு” இருக்கும் ஆன்மிகப் பெருமை போல் உலகின் எந்த ஒரு நதிக்கும் இல்லை.
river ganga,annaimadi.com,gangai.கங்கை நதி,கங்கைக்கரை அதிசயங்கள்.

கங்கைக்கரை சிறப்புகள் (River Ganga)

 •  காசியில் பல்லி சப்தம் எழுப்பாது.
  காசியில் பெரிய அளவில் பல்லிகள் உண்டு. ஆனால் அவை சப்தம் எழுப்புவதில்லை.நம் மக்கள் பல்லியின் சப்தத்தை சகுனமாக எடுப்பவர்கள்.காசியில் அதற்கு இடமில்லை.

 • பிணம் நாற்றம் எடுக்காது. பிணத்தின் கேசமும், இரத்தம், சதை மற்றும் தோல் எரியும் பொழுது அதிலிருந்து வரும் வாடை வார்த்தையால் விளக்க முடியாது. இதைத்தான் பிண வாடை என சொல்வழக்கில் கூறுவார்கள்.
  ஆனால், இங்கே…
  பிணம் எரியும் பொழுது அருகில் நின்றால் எந்த விதமான நாற்றமும் இருக்காது!
 • கருடன் வட்டமிடாது.
  காசியில் கங்கை கரையில் பிணங்கள் எரிக்கபட்டாலும்,  உணவுகள் சிதறிக்கிடந்தாலும் இறைக்காக கருடன் (வெண்கழுத்து கழுகு)  வட்டமிடுவதில்லை. கருடன் அங்கே பறந்து செல்லும்….
  ஆனால், வட்டமிடாது!
  காசியில் காக்கையும் கிடையாது!
 • பூ மணக்காது.
  தென்நாட்டில் கிடைக்கும் பூக்கள் வடநாட்டில் கிடைக்காது.
  முக்கியமாக மல்லி, முல்லை இவைகள் கிடைக்காது. ஆனால் சாமந்தி பூ அதிகமாக கிடைக்கும். சாமந்திப்பூவில் ஒருவிதமான நெடி இருக்கும். பலருக்கு இந்த பூவின் வாசம் பிடிக்காது.
  தென்நாட்டில் சாமந்திபூவை மலர்வளையத்தில் மட்டுமே வைப்பார்கள்.
  அதனாலேயே நம் ஊரில் பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள்.
  ஆனால் காசியில் இந்த பூக்கள் அதிகம் கிடைக்கிறது.
  ஆனாலும் அவை வாசம் இல்லாமல் காகிதப்பூ போல இருக்கிறது.
 • river ganga,annaimadi.com,gangai.கங்கை நதி,கங்கைக்கரை அதிசயங்கள். பால் வற்றாது.
  இங்கே பசுக்கள் இறைவனைவிட அதிகமாக மதிக்கப்படுகிறது.
  பசுக்கள் கட்டப்படுவதில்லை.
  பசுவிடம் தேவையான பால் கிடைத்தவுடன் அவற்றை விட்டுவிடுகிறார்கள்.
  பசுக்கள் யாரையும் முட்டுவதோ உதைப்பதோ இல்லை.
  மனிதனை கண்டு மிரளுவதில்லை. இங்கே யாரும் பசுவை துன்புறுத்துவதில்லை!
  பல வருடங்களாகவும்,  இன்றும்…இயற்கையாகவே இந்த விஷயங்கள் நடந்து கொண்து தாந இருக்கிறது.
இந்த நதி இமய மலைத்தொடரில் தொடங்கி பல நூறு கிலோமீட்டர்கள் கடந்து இறுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. இமய மலையில் “கோமுக்” என்ற மலை இந்த கங்கை நதியின் தோற்றுவாய் என்று கூறினாலும், இந்த கங்கை நதியின் உண்மையான தோற்றுவாய் விண்ணில் இருப்பதாக சித்தர்களும், ஞானிகளும் கூறுகின்றனர்.
 
 புராணங்களில் கூட “பாகிரதன்” எனும் அரசன், தனது முன்னோர்கள் நற்கதியடைய சிவபெருமானை குறித்து தவமிருந்து சொர்கத்திலிருந்த இந்த நதியை பூமிக்கு கொண்டுவந்ததாக நாம் அறிகிறோம்.
அதன் காரணமாகவே இந்த கங்கை நதியின் (River Ganga) நீர் நாட்டின் மற்ற நதிகளின் நீரிலிருந்து வேறுபடுகிறது.
 
ஏனெனில் மற்ற நதிகளின் நீரை ஒரு செம்புக்குடுவையில் அடைத்து வைத்தோமென்றால் சில காலத்திலேயே அந்த நீர் பாசி பிடித்து அசுத்தமாக மாறிவிடும். ஆனால் இந்த கங்கை நதியின் நீரை எத்தனையாண்டுகள் ஒரு செம்பு குடுவையில் அடைத்து வைத்தாலும் அந்த நீர் கெடுவதில்லை.
மேலும் இந்த கங்கை நதியின் நீருக்கு உயிரினங்களின் எலும்புகளைக் கரைத்து விடக்கூடிய சக்தியிருப்பதாக கூறுகிறார்கள்.
இதன் காரணமாகவே காசி நகரத்தில் இந்த கங்கை (River Ganga) நதிக்கரையோரம் இறந்தவர்களின் ஈமைக்கிரியைகள் செய்யப்பட்டு அந்த எறிந்த உடல்களின் சாம்பல்களும், எலும்புகளும் இந்த நதியில் கரைக்கப்படுகின்றன.இந்தக் கங்கையைத் தலையில் தாங்கிய ஈசனே கங்காதரர் எனப்பட்டார்.
river ganga,annaimadi.com,gangai.கங்கை நதி,கங்கைக்கரை அதிசயங்கள்.

கங்கை பற்றிய சுவாரசியமான விடயங்கள்

1. தென் இமாலயத்தில் உள்ள கங்கோத்திரி என்கிற பனிக்கட்டிப் பாளத்திலிருந்து உற்பத்தியாகிறது கங்கை நதி.

2. கங்கையின் நுழைவாயிலில்தான் உலகத்தின் பெரிய கழிமுக நிலமான (டெல்டா) சுந்தரவனம் இருக்கிறது

3. ஃபராக்கா –  ஹரித்துவார் போன்ற இரண்டு பெரிய அணைக்கட்டுகள் கங்கை ஆற்றின் மேல் தான் கட்டப்பட்டுள்ளன.

4. கங்கை என்றும், கங்கை நதிகள் என்றும் இந்த நதி அழைக்கப்படுகிறது.

5. பிரம்மபுத்திராவுடன் இணைந்த கங்கை நதிப் பகுதி டால்பின்களின் இருப்பிடமாகும். உலகில் மாசுபடாத நீரில் காணப்படும் நான்கு வகை டால்பின் வகைகளில் இதுவும் ஒன்று. இந்த டால்பின்கள் புதுமையானவை. ஏனென்றால் இவைகளுக்கு கண் தெரியாது. பார்வைக்கு அவசியமான விழி லென்ஸ்சுகள் அவைகளுக்குக் கிடையாது.

6. கங்கை நதி மிகவும் மாசு படிந்துள்ளது. இந்த நதி உற்பத்தியாகும் இடத்திலேயே மனிதர்களால் அசுத்தமடைகிறது

7. இந்த நதிக்கு வழக்கத்திற்கு மாறாக ஆக்ஸிஜனை தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. இதனால் தன்னைத்தானே சுத்தம் செய்து கொண்டு பாக்டீரியாக்களை அழிக்கவும் செய்ய முடிகிறது..

8. மாசுபடிந்த கங்கையை சுத்தம் செய்ய பல செயல்திட்டங்களை உருவாக்கினாலும் இது வரை அவ்விஷயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

9.  உண்மையில் அறிவு பூர்வமாகப் பார்க்கும் பொழுது,   இந்த நதி பாயும் பல இடங்களில் உள்ள தண்ணீர் குளிப்பதற்கு ஏற்றதல்ல. எனினும் மக்களால் இது ஒரு புனித நதியாகக் கருதப்படுகிறது. ஆகையால், இந்த நதியில் ஒவ்வொரு நாளும் மக்கள் பலரும் நீராடுகிறார்கள்.

10. கங்கை குளிப்பதற்கு மட்டும் புனிதாமானது அல்ல. அதன் சில பகுதிகளில் `ராஃப்டிங்’ (Rafting) விளையாட்டிற்கும் புகழ் பெற்றது.

11. இந்த நதி இதன் கிளை நதிகளுடன் இந்தியா மற்றும் பங்களாதேஷின் விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானவைகளாக இருக்கின்றன.

கங்கை ஆற்றிலே ஈரக்காற்றிலே கண்ணனோடு …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *