வறுத்த பூண்டு தரும் அதிஅற்புத பயன்கள் (Roasted garlic)
வறுத்த பூண்டு (Roasted garlic) உடலுக்கு சென்ற சில மணி நேரத்தில் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. பிறகு கெட்ட கொழுப்புகளை கரைத்து அதை வெளியேற்றும் பணிகளில் விரைவாக செயல்படுகிறது.
தமனிகளை சுத்தம் செய்து இரத்த அளவை சீராக்க உதவுகிறது. இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் தடைபடாமல் இதயத்துக்கும் உடல் முழுவதும் துடிப்பாக செல்கிறது. இதனால் இதயமும் பாதுகாக்கப்படுகிறது.
பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப்பொருள் என்பது அனைவருக்கும் தெரியும்.பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
பூண்டுபற்கள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தியைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை கட்டுப்படுத்தப்படும்.
வறுத்த பூண்டுபற்களை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.
மணிநேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
மணிநேரத்தில் முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.
கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.இரத்த அழுத்தத்தை சீராக்கும்.உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.
பூண்டு மணம் பிடிக்காதவர்கள் பலர் உண்டு. அவர்கள் இந்த விதத்தில் பூண்டை சேர்த்து வரலாம். பூண்டின் பயனையும் பெறலாம்.
அஞ்சறை பெட்டியில் அடங்கியிருக்கும் மசாலா மணம் மிக்க பூண்டில் எண்ணிலடங்காக மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.
இதில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி பங்கல் தன்மை கொண்டது என்பதால் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கவும் செய்யும். பூண்டில் பைட்டோ கெமிக்கல்,விற்றமின் சி, பி 6 சத்தும், குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை உள்ளடக்கியது.
உடலில் வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது என்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் இயல்பாகவே அதிகரிக்கிறது.
உடல் செரிமானம், வாயு நீக்கி என்று சகல விஷயங்களில் துணைபோகும் பூண்டை தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள் என்று இன்றைய மருத்துவர்கள் சொன்னாலும் அன்றே இதை செயல்படுத்தி வந்தவர்கள் நம் முன்னோர்கள்.
பூண்டை எப்படி சாப்பிடலாம்
பூண்டை பச்சையாக வெறும் வாயில் தின்றால் நல்லது அதிலும் காலை வேளையில் என்று சொல்வார்கள். தினமும் பச்சையாக சாப்பிடாமல் மாற்றி மாற்றி எடுத்துகொள்ளலாம்.
வேகவைத்து வறுத்து சுட்டு சாப்பிடலாம்.ஆனால் வறுத்து சாப்பிடும் போது இன்னும் பலன்களும் கிடைக்கிறது.
வறுத்து தயாரித்து தருவது அதிகரித்துவருகிறது. இவை பூண்டின் நாற்றத்தை நீக்கி நாவுக்கு சுவை அளிப்ப தால் யாரும் பூண்டு வெறுப்பதில்லை.
பூண்டை வறுத்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்(Benefits of eating roasted garlic)
பூண்டின் தோலை உரித்து சுத்தம் செய்து வாணலியில் மிதமான தீயில் வைத்து வறுத்து எடுங்கள். தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை வறுங்கள். முதலில் பூண்டிலிருந்து நாற்றமடிக்கும் மணம் வெளியேறும்.
இதை அப்படியே சாப்பிடலாம். நாற்றமில்லாதது என்பதால் எளிதாக சாப்பிட முடியும். எனினும் சுவை விரும்பிகள் பூண்டை வறுக்கும் போது கால் டீஸ்பூன் வென்ணெய், தேவையான அளவுக்கு மிளகுத்தூள் உப்பு சேர்த்து வறுக்கலாம். ருசி பிரமாதமாக இருக்கும்.
குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள். இதனால் அவர்கள் வளரும் பருவத்தில் உடலில் அனைத்து சத்துகளையும் நிறைவாக பெறுவார்கள்.
தினமும் 5 பல் வறுத்த பூண்டை (Roasted garlic) சாப்பிடுவதால் அதிசயத்தக்க வகையில் உடலின் ஆரோக்கியமும் வேகமாக அதிகரிக்கிறது.
உடலுக்கு தேவையான ஊட்டசத்து
உடலுக்கு மாங்கனீசு சக்தி தேவை. உடலில் ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட இந்த சத்து அவசியம் தேவை. அன்றாட உடலுக்கு தேவையான மாங்கனீசு சக்தியில் பூண்டில் 3 கிராம் கிடைத்துவிடுகிறது. பூண்டில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
விற்றமின் சி சத்து தான் உடலில் இரத்த நாளங்கள். தசைகள், எலும்புகளின் வலுவை உறுதி செய்கிறது. பூண்டில் இருக்கும் செலினியம் உடலில் நன்மை செய்யும் நொதிகளை தூண்டுகிறது.
உடலில் இரும்புசத்து, ஜிங்க் போன்றவை சிறப்பாக இயங்க பூண்டு உதவுகிறது என்பதை உணவு குறித்த வேதியியல் இதழ் ஒன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வளரும் பிள்ளைகளுக்கு பூண்டில் சற்று கூடுதலாக வெண்ணெய் சேர்த்து கொடுங்கள். ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக இருக்கும்.
இதயத்தை பாதுகாக்கிறது