சவ்ரிசி பாயாசம் என்றால் எல்லோருக்குமே சாப்பிட பிடிக்கும். அதே போல் சவ்வரிசியில் செய்யப்படும் இந்த லட்டும் (Sago Laddu) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்.
சவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகமுள்ளது. அரிசி உணவை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை சவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கிறது.
சவ்வரிசியில் பாயாசம், சவ்வரிசி வடை,கஞ்சி, லட்டு என பலவிதமான இனிப்பு உணவுகள் செய்யப்படுகின்றன.
சுவையான சவ்வரிசி லட்டு செய்வது எப்படியென பார்ப்போம்.
சவ்வரிசி லட்டு (Sago Laddu) சுவையானது.குறைந்த பொருட்களுடன் விரைவாக செய்திட முடியும்.
சவ்வரிசி மரவள்ளிக்கிழங்கைபதப்படுத்தி செய்யப்படும் ஒரு பதப்படுத்தப்பட்ட, சைவ வகை உணவாகும். அதனால் தான் இதனை விரதத்தின் போது பயன்படுத்துகின்றனர்.அனைவராலும் ரசித்து ருசித்து உண்ணப்படும் பொருளாகவும் இது விளங்குகிறது.
குறிப்பாக விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் சவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் அவர்களின் உடலில் இழந்த சத்துக்களை விரைவில் ஈடு செய்து, தசைகளுக்கு வலிமையை பெறுகிறார்கள். அதோடு சவ்வரிசி உணவு உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
நோயாளிகளுக்கும் சவ்வரிசியில் கஞ்சி காய்ச்சி கொடுப்பது, அவர்களுக்கு உடற் திறன் அதிகரிக்கவே.
இதை நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஒரு சரியான மாற்று உணவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
சவ்வரிசியின் பயன்கள்
சீதபேதி நிற்க
நாம் சாப்பிடும் உணவுகளில் மிக ஆபத்தான கிருமிகள் நமக்கு சிலநேரங்களில் சீதபேதியை ஏற்படுகிறது.
இந்த சீதபேதி ஏற்பட்டவர்கள் உடலில் நீர் சத்திழப்பு அதிகளவில் ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்து விடுவார்கள். சீதபேதி நிற்பதற்கு ஒரு எளிய இயற்கை மருத்துவ பொருளாக சவ்வரிசி இருக்கிறது.
அல்சர் குணமாக
அல்சர் புண்களை ஆற்றுவதில் சவ்வரிசி மிக சிறப்பாக செயல்படுகிறது.
சவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுபொருட்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால், அவை குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் அல்சர் புண்களை ஆற்ருகிறது.
அதோடு உணவுக்குழாயில் செரிமானம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் சுலபமாக கடந்து செல்ல ,குடற்சுவற்றில் வழுவழுப்புத் தன்மையை உண்டாக்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
பெரும்பாலான பழங்களைப் போலவே சவ்வரிசியில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன.
இந்த இரண்டு வைட்டமின் சத்துக்களும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய உதவுகிறது.
அவ்வப்போது சவ்வரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் சத்துகள் கிடைக்கப் பெற்று நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. சுலபத்தில் ஜுரம், தொற்று நோய்கள் நம்மை அணுகாமல் காக்கிறது!