மொறுமொறுப்பான சவ்வரிசி வடை (sago vadai)
சவ்வரிசி (Sago) என்றால் தித்திப்பான பாயாசம் தான் எல்லோருக்கும் நினைவில் வரும். ஆனால் இங்கு சவ்வரிசியில் வடை எப்படி செய்வது என பார்க்கலாம்.
சவ்வரிசி (Sago) ,சின்ன சின்ன முத்துக்களாக பார்க்கவே அழகாக இருக்கும்.சமைக்கும் முன் வெண்ணிறத்தில் பளிச்சிடும் இது சமைத்த பின் கிட்டத்தட்ட ஒளி ஊடுருவும் வடிவத்தை பெற்றுவிடும்.பொதுவாக விரதம் இருக்கும் போது எடுத்து கொள்ளும் உணவு வகைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனை பல வகை உணவு தயாரிப்பின் போது பயன்படுத்தப்படுகிறது.
இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகையான பலகாரங்களிலும் இது சேர்க்கப்படுகிறது.தித்திப்பான சவ்வரிசி லட்டு (Sago laddu), சுவையான பாயாசம்,கஞ்சி என பல வடிவில் சமைக்கப்படுகின்றது.
சவ்வரிசி வடை – தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3 நடுத்தர அளவு
பொடித்த வேர்கடலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிக்க
செய்முறை
1.வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஜவ்வரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
2.உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
3.ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
4.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
வீடியோவை பார்த்தும் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.
ஜவ்வரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அளவில் கொழுப்பு உள்ளது. ஆகவே எடை மீது அதிக அக்கறை உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம்.
இயற்கையான முறையில் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு மிகச்சிறந்தது சவ்வரிசி தான்.
பாலுக்கு அடுத்ததாக குழந்தைகளுக்கான சிறந்த உணவு ஆக இதனை பயன்படுத்துகின்றனர்.
மரவள்ளிக் கிழங்கில் எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து செய்யப்படுவதே சவ்வரிசி (Sago). இதனை சாகோ, சகுடானா, சபுடானா, சௌவாரி என்றும் அழைக்கின்றனர்.
ஸ்டார்ச்சால் (Stratch) நிறைந்துள்ள ஜவ்வரிசியில் செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் என எதுவும் இல்லாததால், இதனை பரவலாக அனைவரும் விரும்புகின்றனர்.
உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்றவும், இதனை உணவாக அளிக்கலாம். ஏனென்றால் இது உடனடி ஆற்றலையும், செரிமான சக்தியையும் அளிக்கும்.இதனால் உள்ளவர்களுக்கு, சவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது
உடலின் எலும்புகளை ஆரோக்கியமாக்கும், மூட்டுவலியைக் குறைக்கும். பதட்டத்தைக் குறைக்கும். உடற்பயிற்சிக்கு முன், பின் என எப்போதும் இதை சாப்பிடலாம்.
சவ்வரிசியில் அதிக புரதம் உள்ளதால் அது தசைகளை வலுவூட்டுகின்றது.செல்களைப் புதுப்பிக்கின்றது.
இரத்ததா ஓட்டத்தை சீர் செய்கின்றது.
மேலும் உடல் குளிர்ச்சி அடையவும் செய்கின்றது.