சலபாசனம் (Salabhasana ) இடுப்பு எலும்பு பலப்பட
சலபாசனம் (Salabhasana) வயிற்றுபகுதி இறுக்கமடைய…
சலபாசனம் வயிறு, குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கு வீரியத்தை தரும் அற்புதமான ஓர் ஆசனமாகும் (yoga).
பொதுவாக அனைத்து யோகாசனங்களும், முதுமையிலும் புத்துணர்ச்சியுடன் இளமையான மனநிலையை தருபவை.
சலபாசனம் (Salabhasana), சுவாசம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல பலன் அளிக்கும்.

வயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும்.
சலபாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு நரம்புகள் வலுப்பெறும். பிறப்புறுப்புகள் ஆரோக்கியத்தோடு இருக்கும். இந்த ஆசனம் செய்யும் முறையை பார்ப்போம்.
சலாபாசனம் (Salabhasana) செய்வதால் உண்டாகும் நன்மைகள்
- வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால் உடலின் கீழ்ப்பகுதிக்கு அதிகப்பலன்கள் கிடைக்கின்றன. பெரு வயிறு எனப்படும் தொந்தி கரையும்.
- கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும்.
- முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றை நெருங்க விடாது. முதுகெலும்பு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் முக்கிய ஆசனம்.
- நுரையீரல் நன்கு விரிவடைந்து பலமடைவதுடன், ஆஸ்துமா போன்ற நோய்களை நீக்கும்.
- இது இந்த ஆசனம் முதுகெலும்பை பின்னால் வளைக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால் சோம்பேறித்தனத்தை போக்குகிறது.இந்த ஆசனம் என்றும் இளமையுடன் இருக்க வைக்கும்.
- சலபாசனம் (Salabhasana) செய்வதால் வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் தீரும், . ஜீரணம், வயிற்று வலி நீங்கும்.
இந்த ஆசனம் செய்வதால் ஜீரண உறுப்புகள் நன்கு செயல்படும். பிறப்புறுப்புகள் ஆரோக்கியத்தோடு இருக்கும். நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கிறது.
பொதுவாக எல்லா யோகா ஆசனங்களையும் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.
- இடம் மிகவும் அமைதியாக இருத்தல் வேண்டும். மரங்கள், செடி, கொடிகள், நீர்நிலைகள் உள்ள இடங்களில் செய்வது மிகவும் சிறப்பு. கூடுதலான மன அமைதியைத் தரும்.
- யோகா (yoga) செய்யும் போது உடல் அசைவுகள் ஏற்படுவதால் தளர்வான ஆடைகளை (yoga dress) அணிவதே நல்லது.
- சுத்தமான விரிப்பை (Yoga mat) பயன்படுத்தவும்.
மிக நல்ல பயனைப் பெற ,எப்போதும் பொறுமையாக நிதானத்துடனும் படிப்படியாக யோகாசனங்களை செய்ய வேண்டும்.
சிறுநீரகத்தில்பிரச்சனை உள்ளோர், குடல்வாயு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.