இன்சுலினை சுரக்க வைக்கும் உமிழ்நீர் (Saliva & insulin)

சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர் (Saliva & insulin) தான். எனவே,நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.

உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். வாழ்வதற்காக உண்டனர்.

அதனால் தான் பொறுமையுடனும் அமைதியுடனும் பொறுப்புடனும் உணவருந்தினர்.அதாவது ,உணவை சரியான முறைப்படி உண்டனர்.

அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.

நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப்பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.  இன்சுலின் சுரக்க வைக்கும் உமிழ்நீர் (Saliva & insulin),annaimadi.com,அன்னைமடி,உமிழ்நீர் பற்றி சித்தர்கள் கூறுவன என்ன?,உணவு உண்ணும் முறை,Saliva which secretes insulin What do the Siddhas say about saliva?,The way of eating

அதேபோல் உணவு உண்பதற்கு 30 நிமிடம் முன்னதாகவும் உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும் நாம் கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.

தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது. ஆனால் இன்று நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.

உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது. வாழ்வதற்காக சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு ‘வேலை’தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.

உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம். நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் (Saliva & insulin) இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.

நாளடைவில் அது சர்க்கரைநோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது.இன்சுலின் சுரக்க வைக்கும் உமிழ்நீர் (Saliva & insulin),annaimadi.com,அன்னைமடி,உமிழ்நீர் பற்றி சித்தர்கள் கூறுவன என்ன?,உணவு உண்ணும் முறை,Saliva which secretes insulin What do the Siddhas say about saliva?,The way of eating

உமிழ்நீர் பற்றி சித்தர்கள் கூறுவன என்ன?(Saliva & insulin)

சித்தர்கள் உமிழ்நீரை “காயப்பால்” என்று சொல்வார்கள். எச்சில் வேறு  உமிழ்நீர் வேறு. எச்சிலானது நாறும். உமிழ்நீர் நாற்றமடிக்காது. இது எப்பொழுதாவது நமக்கு வாயில் ஊறும்.
 
வெட்டவெளியாகிய சிரசில் ஊறுவது, தன்னை உண்பவரின் பசியை போக்குவது. ஆட்டுப்பால், மாட்டுப்பால் போல காயப்பால் நாற்றமடிக்காது, என்று சித்தர்கள்  சொல்லி இருக்கிறார்கள்.
 
தேவலோகத்திலும் இதைப்போல் பாலில்லை. இது நம்மை இறவாமல் காக்கும் அமிர்தமாகும். யோகிகள் இதை நாள்தோறும் உண்டிருப்பர்
சாதாரணமாக இது  தொண்டை வழியாக உள்ளே சென்று அக்னியில் விழுந்து போகும். அவ்வாறு விடாமல் நாக்கை மடித்து வாயால் நன்கு சுவைத்து நெடுநேரம் இருத்தி  உண்ணவேண்டும்.
அப்படி உண்பவர்களுக்கு காயசித்தி ஏற்படும். உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். நீண்டநாள் வாழலாம்.
 
தாவரங்கள் இந்த ஸ்டார்ச் மூலமாகத்தான் தேவையான உணவை தயாரித்துக் கொள்கின்றன. அதற்க்குச் சூரிய ஒளியும் நீரும் இருந்தால் போதும். சித்தர்களும்  இந்த வழிமுறையையே பின்பற்றி இருக்கிறார்கள்.
உமிழ்நீரில் இருந்து ஸ்டார்ச்சை பெற்ற உடல் அதன் உதவியோடு சூரிய ஒளியில் இருந்து உடலுக்குத் தேவையான சக்தியை தயாரித்துக் கொள்ளும். ப்ராணாயாமம் செய்தால் காயப்பால் அதிகம் சுரக்கும்.
இன்சுலின் சுரக்க வைக்கும் உமிழ்நீர் Saliva & insulin,annaimadi.com,அன்னைமடி,உமிழ்நீர் பற்றி சித்தர்கள் கூறுவன என்ன?,உணவு உண்ணும் முறை,Saliva which secretes insulin What do the Siddhas say about saliva?,The way of eating
 
எப்பொழுதும் துப்பிக் கொண்டே இருப்பவர்களுக்கு எப்பொழுதாவது சுரக்கும் இந்த உமிழ்நீரின் சக்தி கிடைக்காமலே போய்விடுகிறது.
சித்தர்கள் உணவை நன்றாக மென்று அரைத்து நீர்போலாக்கி சாப்பிடச் சொன்னார்கள். அப்படிச் சாப்பிடும் போது உமிழ்நீர் சுரந்து உணவுடன் கலந்து நமக்கு பலம் கிடைக்கும்.

நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்து தான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும். நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *