அழகு தரும் சந்தனம் (Sandalwood)
இயற்கையாகவே அதிக நறுமணம் கொண்டது சந்தனம் (Sandalwood). இது சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை தக்கவைத்து வறட்சியை போக்கும். சருமத்துக்கு பொலிவை கொடுக்கும். எந்த பொருளும் சேர்க்காமல் சந்தனத்தை மட்டுமே குழைத்து முகத்துக்கு பூசினாலே மொத்த அழகையும் பெற்றுவிடலாம்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்தது சந்தனம். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க சருமத்தின் நிறமும் மாறிவிடும்.
இதற்கு காரணம் சருமத்தில் இருக்கும் மெலனின் சுரப்பு அதிகமாவது தான். இதை சரிசெய்யவும் முகத்தை எப்போதும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இயற்கை கொடுத்திருக்கும் பொருள் சந்தனம் (Coolness of sandalwood).
சந்தனம் (Coolness of sandalwood) பயன்படுத்துவது குளிர்ச்சியாக இருப்பதற்கு தான் என்பது அனைவருக்கும் தெரியும்.அதுமட்டுமல்லாமல் ஒரிஜினல் சந்தனத்தை பயன்படுத்துவதன் மூலம் அழகையும் பெறமுடியும்.

வைரம் பாய்ந்த சந்தன மரக்கட்டைகளில், எண்ணெய் வளம் மிகுதியாக இருக்கு. இதிலிருந்து எடுக்கப்படும், சந்தன எண்ணெய் அல்லது அத்தர், வெப்பத்தை தனித்து, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் மருத்துவ பயன்கள் கொண்டது
சரும அழகிற்கு சந்தனம் (Sandalwood)
வெயிலால் கறுத்த முகத்தின் கருமையை நீக்கவும், பருக்களை வரவிடாமல் செய்யவும் வியர்க்குரு, வேனல் கட்டிகள் வரவிடாமல் செய்யவும் இயற்கை தரும் நிரந்தர தீர்வு ஒரிஜினல் சந்தனம் தான்.
சருமத்தை (Sandalwood) மேம்படுத்த பல அழகு சாதனப் பொருட்களில் சந்தனம் பயன்படுத்தப்படுகிறது.
சந்தனத்தைப் பயன்படுத்துவது குளிர்ச்சியை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வீக்கத்தையும் குறைக்கலாம். கூடுதலாக, இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
சந்தனத்தில் (Sandalwood) இயற்கையான தோல் ஒளிரும் தன்மையைக் கொண்டுள்ளது.அதனால் தான் பல அழகு சாதன பொருள்களில் சந்தனம் சேர்க்கப்படுகிறது.
அன்றாட சரும பராமரிப்புக்கு உகந்தது.மேலும் இது சரும சுருக்கங்களை நீக்குகிறது. கறைகளை கரும்புள்ளிகளை மறையச் செய்கிறது.
சந்தன எண்ணெயின் பயன்கள் (Sandalwood)
சந்தனத்தின் மருத்துவ பண்புகள் (Medicinal Properties of Sandalwood)

சந்தனத்தின் நன்மைகள் – Benefits of Sandalwood
1. வீக்கம், தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு சந்தன பேஸ்ட் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
2. லேசான காயம் அல்லது ரத்த காயங்களுக்கு சந்தனத்தை பயன்படுத்தலாம். உண்மையில், சந்தனத்தில் கிருமி நாசினிகள் உள்ளன, இது காயத்திற்கு நன்மை பயக்கும்.
3.சந்தனத்தை மருதாணி விதைகளில் கலந்து, சாம்பிராணி போட்டுவர, வீடுகளில், காற்று தூய்மையாகி, மனம் தெளிவுறும்.
4.சந்தனக்கட்டை எண்ணெய் போல, சந்தன விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயும் உடல் நலனுக்கு பயனாகிறது.
5..சந்தன எண்ணெய், பக்க வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற வாத வியாதிகளுக்கு வெளிப்பூச்சு எண்ணையாகவும் உள் மருந்தாகவும் பயன் தருகிறது.
6.உணவு செரிக்காமையால் ஏற்படும் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்கு நலம் பயக்கும், இல்லற வாழ்வில் நாட்டம் கொள்ள வைக்கும்.
7..சந்தனக்கட்டைகள் மூலம் செய்யப்படும் வாசனைமிக்க கலைவண்ணம் கொண்ட கதவுகள் பெரிய நிறுவனங்களில், வர்த்தக மையங்களில் அலங்காரத்திற்கு வைக்கப்படுகின்றன. மேலும், கலைநயம் மிக்க புகைப்பட பிரேம்கள், டேபிள் பேப்பர் வெயிட்கள் போன்ற பொருட்கள் தயாரிப்பில் சந்தனக்கட்டைகள் பயனாகின்றன.

8. சந்தனமானது சரும ஒவ்வாமைக்கும் நன்மை பயக்கும். தடிப்புத் தோல் அழற்சி (ஒரு வகை தோல் பிரச்சினை) ஆகியவற்றுக்கும் இது நன்மை பயக்கும்.
சந்தனத்தை (Sandalwood) எவ்வாறு பயன்படுத்துவது?
சந்தனத்தை பல்வேறு வழிகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் .
- ஒளிரும் சருமத்திற்கு சந்தன மாஸ்க் பயன்படுத்தலாம்.
- காயம் அல்லது சிராய்ப்புகள் மீது மருந்தாக பயன்படுத்தலாம்.
- சந்தன எண்ணெயுடன் அரோமாதெரபியை எடுத்துக் கொள்ளலாம்.
- உடலின் துர்நாற்றத்தை நீக்க, குளியல் நீரில் சந்தன பேஸ்ட் அல்லது சந்தன எண்ணெயை சேர்த்து குளிக்கலாம்.
- சந்தன சோப்பை பயன்படுத்தலாம்.
ஆலயங்களில் மங்கள விழாக்களில் சந்தனம் ஏன் பயன்படுத்தப்படுகின்றது என்பது இப்போது விளங்குகின்றதல்லவா!!