சங்குப்பூவின் சிறந்த மருத்துவ பண்புகள் (Sangu poo)
சங்குப் பூ (Sangu poo) கொடி முழுவதும் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன.
மூச்சுத் திணறல், இருதய சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. உலர்ந்த மலர்கள், புளூ டீ எனும் நீல நிற டீ தயாரிக்கவே பிரத்யேகமாக விலைக்கொடுத்து பல நாடுகளில் வாங்கப்படுகின்றன.
சங்குப் பூ(Sangu poo) கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இதன் பூக்கள் நீல நிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும்.
பூ மட்டுமல்ல இதனுடைய இலை, வேர் மற்றும் விதை முதலியனவும் பயன் தருகின்றன.
நீல மலருடையதைக் கறுப்புக் காக்கரட்டான் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.
இது கூட்டிலைகளையுடைய ஏறு கொடி. அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது. தட்டையான காய்களையுடையது.
பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிறப் பூவை உடைய வெண் காக்கட்டானே பயன்படுத்தப் படுகின்றது. இது சிறந்த மருத்துவப் பயன் உடையது.
இதன் பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது. காக்கண விதைகள் நறுமணம் உடையதாகவும் புளிப்புச் சுவை கொண்டதாகவும் இருக்கும்.
சங்கு பூவின் இலைச்சாற்றைக் கொண்டு புடமிட தங்கம் பஸ்பமாகும்.
சங்குப்பூவின் மருத்துவப் பயன்கள்(Medicinal value of Sangu poo)


சங்குப்பூ கொடிஆன்மீகரீதியாக
மகா விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமான இந்த செடியை நம் வீட்டில் நட்டு வளர்ப்பதால் அன்னை லட்சுமி தேவியின் அருட் பார்வை கிடைக்கும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு என பல வண்ணங்களில் இருக்கக்கூடிய சங்குப் பூ தாவரம் நம் வீட்டில் வளர்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், நேர்மறை ஆற்றலையும் உருவாக்கும்.
நீலி அபராஜிதா என அழைக்கப்படும் இந்த கொடி வளர வளர, வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் வளரும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சங்குப்பூ செடி வளர்த்தால் எதிர்மறை சக்தி நீங்கி நேர்மறை ஆற்றல் வீட்டில் தங்கும்.
புத்தி கூர்மை ஏற்படும்.
நீல சங்குப் பூ(Sangu poo) கொடியை நம் வீட்டில் வளர்ப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். இந்த பூவை மகாவிஷ்ணுவிற்குச் சமர்ப்பித்து வழிபட்டால் குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் அதிகரிக்கும்.
கிருஷ்ண காண்டத்தின் அழகிய நீல மலர்களைக் கொண்ட சங்குப் பூக்களை சனி தேவருக்கு சமர்ப்பித்து வழிபடுவதன் மூலம், சனி பகவான் தரக்கூடிய துன்பங்கள் குறையும்.
சனி தோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
வாஸ்து படி, நீல சங்குப்பூ (Sangu poo) கொடியை வீட்டில் வடக்கு திசையில் நட வேண்டும்.