மன அமைதி தரும் சாந்தியாசனம் (Santhiyasana)

 சாந்தி ஆசனம் (Santhiyasana) யோகாசனங்களிலேயே மிக மிக முக்கியமானது .யோகாசனம் செய்யும்போது, இடையிடையே இந்த சாந்தி ஆசனத்தில் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு,பிறகு அடுத்த ஆசனத்தைத் தொடருவது வழக்கம்.

இந்த ஆசனத்தில் இருக்கும்போது, நம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூளை ஓய்வுபெறும். மனம் அழுத்தம் நீங்கி ,மனம்  அமைதி அடையும்.

சாந்தியாசனம் (Santhiyasana) யோகா பயிற்சியினால் உண்டாகும் களைப்பையும், உடல் வலியையும் போக்குகிறது. உடல் உறுப்புகள் ஓய்வு பெறச் செய்கிறது. உடலெங்கும் ரத்த ஓட்டம் சீராக அமையும்.இதனை சவாசனம் என்றும் அழைப்பார்கள்.

செய்முறை

  • ஒரு விரிப்பின் (yoga mattress) மீது அமர்ந்து இடது புறமாக ஒருக்களித்துப்படுத்து பிறகு மல்லாந்து படுக்கவும்.

Check price

  • ஆங்கில எழுத்து ‘வி’ வடிவில் கால்களை விரித்து தளர்வாக்கவும்.கைகளையும் உடம்பின் இரு பக்கவாட்டுகளில் விரித்து தளர்த்திக்கொள்ளவும்.
  • கண்களை மூடி சீராக மூச்சு விட வேண்டும். மூச்சு இயல்பாக இருக்கட்டும்.
  • அப்படியே சில நிமிடங்கள் படுத்திருக்கவும்.
  • பிறகு கால்களைச் சேர்த்து கைகளையும் உடலோடு சேர்க்கவும்.
  • மீண்டும் இடதுபுறம் திரும்பி ஒருக்களித்துப் படுக்கவும்.
  • இடது கையைத் தலைக்கு மேலே நீட்டி, வலது கையை முன்புறம் வைத்து ஊன்றி எழ வேண்டும்.

எல்லா ஆசனங்களும் செய்து முடித்த பின், இறுதியாக சாந்தியாசனம் செய்து, அன்றைய யோகசனபயிற்சி நிறைவு செய்யப்படும்.

நவீன வாழ்வியல் போக்கால், மன அழுத்தம் ,டென்ஷன், கவலை, கோபம் எல்லாம்   சிறு குழந்தைகளுக்கு கூட வருவதாக நிறைய ஆய்வுகள் சொல்கின்றன.

பொதுவாக எல்லா வியாதிக்கும் அடிப்படைக் காரணம் மன அழுத்தம் தான்.இதனால் உடலின் அனைத்து மண்டலங்களிலும் ,அவற்றின் செயற்பாடுகளிலும், மாற்றங்கள் ஏற்படுகின்றன.காலப்போக்கில் அவை நோய்களாக  உருப்பெறும்.

இந்த மன அழுத்தத்தினால் தான் மனிதர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயத்தில் ஓட்டை, கழுத்து வலி, முதுகு வலி, நரம்பு பலவீனம், ஒற்றைத் தலைவலி போன்ற பல நோய்கள் வருகின்றன.

அனைவரும் சாந்தி ஆசனம் நிச்சயம் செய்ய வேண்டும். எல்லாராலும் செய்யக் கூடிய சுலபமான ஆசனம்.இதன் மூலம்  மன அழுத்தம் இல்லாமல், ரத்த அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published.