சனி நீராடு ஔவை பாட்டி சொன்னதன் ரகசியம்(Saturday oil bath)
பூரண ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ சனி நீராடு (Saturday oil bath) ஔவை பாட்டி சொன்னதன் மூல ரகசியம்.இதில் உள்ள சூட்சமம் மிகவும் ஆழமானது.
இதை அறிவியல் பூர்வமாக விளக்கலாம். ஞான மார்க்கமாக விளக்கலாம். சூட்சமமாகவும் விளக்கலாம்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு அருகிவிட்டது. இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல. நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன.
சுற்றுச்சூழல் மாசு காரணமாக, வெளியில் இருந்து வந்து குவியும் தூசு தோலின் மீது படிந்துவிடும். இந்தத் தூசு எல்லாமே, தண்ணீரில் கரைவது இல்லை.
சோப்பு போட்டுக் குளிப்பது வெளிப்புற அழுக்கைப் போக்குமே தவிர, சருமத்தின் உள் ஊடுருவிய அழுக்கு, தூசியைப் போக்காது. அழுக்கு அப்படியே படிந்து, அழகைக் குலைத்து, சரும நோய்களை ஏற்படுத்திவிடும்.
இந்த வகை தூசுக்கள் கண்ணுக்குத் தெரியாது. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம், சருமத்தைப் பொலிவுடன் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். “சனி நீராடிய” அந்தக் காலத்தில் சருமநோய் என்பதே கிட்ட நெருங்காமல் இருந்தது.
அறிவியல் பூர்வமாக (Saturday oil bath)
சனி கிழமை எண்ணைய் தேய்த்து குளிக்க உடல் சூடு குறைகிறது. உலகின் அனைத்து நோய்க்கான மூலம் உடல் சூடே. அதே நேரத்தில் அந்த சூடு குறைந்தால் உயிர் இல்லை. இதை சமன் செய்யும் தொடர் நிகழ்வே சனி நீராடல்.இது அறிவியல் உண்மை.
ஞான மார்க்கமாக…..
மூலாதாரத்தின் நாயகன் முச்சந்தியின் முடிச்சே சனி கிரகமே !!!உயிர் இருக்கும் இடம் பிறக்கையிலே ஒரு இடம் வளரும் போது அவை மூலாதாரம் நோக்கி வந்து தங்கி விடுகிறது.
அதை எழுப்பவே உலகில் பல சாதனாக்கள்.அதற்கு தமிழன் கண்டுபிடித்த மகா சூட்சமமானதே சனி நீராடல் (Saturday oil bath).
இதில் சனி என்ற பிணி தோஷம் நீங்கும். ஆண்மகனுக்கு புதன்,சனிக்கிழமை. பெண்கள் செவ்வாய், வெள்ளி. ரத்தம் சம்பந்தமான விஷயங்களை சமன் செய்ய செவ்வாயும் ,மங்களகரமான சக்தி வளர்க்க வெள்ளியும் பெண்களுக்கு. ஞான மார்க்கமாக பார்த்தால் அதிகாலை எழுந்து நீராடுவதால் வாதம் பித்தம் கபம் சரியாகும்.
பிரம்ம முகூர்த்த நேரம் காலை 3 மணி முதல் 5 மணி நுரையீரலின் சக்தி சேகரிப்பு நேரமும் இதுவே….ஞான கிரகத்தின் உச்சம். இதுவே புதன் கிரகம். புதன் உச்சம் அடைபவர்கள் ஞானவான் ஆவார்கள்.
சனி என்றால் காரி என்ற பொருள் உண்டு. காரி என்றால் – அதிகாலை அதாவது விடியலுக்கு முன் உள்ள நிலை, இன்னும் சொல்ல வேண்டுமானால் விடிந்தும் விடியாத இரவு.
இந்நேரத்தில் நீராடு என்ற பொருளைத் தருகிறது. ஔவை சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். இதை ஆராய்வதில் ஒரு சுகம் வருகிறது ஏனோ தானாய் பஞ்சபூதங்களில் நீர்,நிலம்.
இதற்கு உள்ளேயே வாழும் மீன் நீர் நீங்கிடில் மடிந்து விடுகிறது . தரையில் மீன் உயிர் வாழ முடியாது. தரையில் வாழும் உயிரினம் நீர் அருந்தவில்லை என்றாலே மடிந்து விடும்.
நீரின்றி அமையாது உலகு என்பதை உறுதியாகிறது.அதாவது அதிகாலை மூன்று வருடங்கள் நீராடுபவனுக்கு அனைத்து பிணியும் போகும்.
எண்ணெய் தேய்த்து குளித்த அன்று மோர் சாதம் சாப்பிட கூடாது. அன்று பகல் தூங்க கூடாது. அன்று அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஆக உடலுக்கு ஏற்றது சைவ சாப்பாடு என்றாகிறது.முதலில் உலகில் தோன்றியது நீர். அதில் உயிர். பிறகு அனைத்தும். நீரில் மட்டுமே வாழும் மீன் மகத்துவம் வாய்ந்ததாக தான் இருக்கும்.
ஒமேகா 3 க்கும் இதயத்திற்கும் உள்ள அதிசய தொடர்பு போல. பகலில் துங்குபவனோடு அனைத்து தரித்திரியமும் அவரருகே வந்து ஆனந்தமாக படுக்கும்.
எண்ணெய்க் குளியல் தரும் பலன்கள் எண்ணில் அடங்காது. நமது சருமம் தான். உடலில் பெரிய அளவிலான உறுப்பு.
பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் உஷ்ணமானாலும், குளிர்ச்சியானாலும் தோல் தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். தோல், எண்ணெயை உறிஞ்சும் தன்மைகொண்டது.
எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள் (Benefits of saturday oil bath)
(1)இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் நாற்றம், முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை நீங்கும்.
(2)ஐம்புலன்களுக்கும் பலம், தெளிவு உண்டாகும்.
(3)தலை, முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளரும்.முன்னந்தலையில் வழுக்கை விழாது
(4)தலைவலி, பல்வலி நீங்கும்.
(5)வேர்க்குரு, தேமல், படை, சிரங்கு போன்ற சருமப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்.வாரம் இருமுறை குளிப்பதன் மூலம் சருமம் நல்ல பொலிவைப் பெறும்.
(6)உடல் பலமாகும்.
(7)சோம்பல் நீங்கும்.எப்போதும் ஒருவிதப் புத்துணர்ச்சி இருக்கும்.
(8)நல்ல குரல் வளம் உண்டாகும்.
(9)சுவையின்மை நீங்கும்.
(10)பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.
(11)மன அமைதி கிடைக்கும். கண்ணும் உடலும் குளிர்ச்சியடையும்.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்
தூசு, அதிக உஷ்ணம் இவற்றால் உடல் பாதிக்காமல் இருக்க, தினமுமே கூட, உடலிலும் தலையிலும் எண்ணெய் தேய்த்து, தலைக்குக் குளிப்பது அவசியமாகிவிட்டது.மனம் லேசாகும்.
சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால் தான் சூரியனிலிருந்து வரும் விற்றமின் டி சத்தை உடல் கிரகிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
அதிலும், எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும் போது நிணநீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகச் செயல்படும். மன அழுத்தம் குறையும். நீர்க்கடுப்பைப் போக்கும்.
முடிந்தவரை சனி நீராடி ஆரோக்கியமுடன் ஆனந்த வாழ்வு வாழ்வோம்!