பணத்தை சேமிக்கும் வழிகள் (Save money)

பொதுவாக வீடு, வாகனம் இரண்டும் மிக பெரிய  செலவுகள். உங்களது தேவை சார்ந்த வீட்டினை, வாகனத்தினை வாங்குவது புத்திசாலித்தனம். இவை இரண்டையும்  சரியாக பாராமரித்தால் அதிக பணத்தை சேமிக்க (Save money) முடியும்.

உங்களுடைய பண அட்டையை (டெபிட்/ கிரடிட் கார்டு) பயன்படுத்தி விரும்பியதை இன்று வாங்கி கொள்ளலாம். ஆனால், மொத்த செலவை பார்க்கும் போது தான், எவ்வாறு ஒரு பெருந்தொகை செலவழிக்கப்பட்டுள்ளதை உணருவோம்.

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கின்ற பணத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை வங்கி கணக்கின் வரவு செலவு அறிக்கை (ஸ்டேட்மண்ட்) தெளிவாக சுட்டிக்காட்டும்.

இதனை அவ்வப்போது சோதித்து பார்த்தால், சில ஆச்சரியமூட்டும் கருத்துக்களை பெறலாம்.

இந்த செலவுகளில் எவற்றை குறைத்து கொள்ளலாம் என்று ஆலோசனை செய்வதற்கு இது நம்மை தூண்டும்.

இதனால் உங்கள் சம்பளம் செலவு செய்யப்படும் விபரங்களை, துல்லியமாக அறிந்து செலவு செய்வீர்கள்.

ஒரு ரூபாய் சேமிப்பது (Save money)என்பது ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்கு சமம். சம்பாதிப்பது கடினம். ஆனால், சம்பாதித்த பணத்தை சேமிப்பது என்பது எளிதான விஷயம் தான்.

அதனால் தான், சில சராசரியான சம்பளம் வாங்குபவர்கள் சிலர், சேமிப்பின் பழக்கத்தினாலும், முதலீட்டின் காரணமாகவும், அதிக சம்பளம் வாங்கி, சேமிக்காதவர்களை விட, நல்லதொரு தொகையை ஓய்வு காலத்திற்கு ஒதுக்கி, ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கிறார்கள்.

எனவே, ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது முக்கியம். ஆனால், சம்பாதித்த பணத்தில் எவ்வளவு சேமிக்கிறார் என்பது அதை விட முக்கியம் .

எந்த ஒரு பொருளினையும் வீணாக்காதீர்கள். வீணாகப்பட்ட பொருள் பணத்திற்கு சமம். உதாரணமாக, நீங்கள் உணவினை வீணாக்கினால், அது பணத்தை வீணாக்கியதற்கு சமம்.

எந்த ஒரு கெட்டுப் போகும் பொருளினையும் கெட்டு விடுதற்கு முன்பே உபயோகப்படுத்துங்கள்.

சிறிது பணத்தை செலவளித்து பெரும் தொகையை சம்பாதிக்கும் முறை (Save money)

நேரத்தை மிச்சப்படுத்த, பணத்தை செலவிடுங்கள். ஏனெனில் நேரத்திற்கு இணையான மூலப்பொருள் உலகில் எதுவுமில்லை.

போன நேரத்தை யாராலும் திரும்ப சம்பாதிக்க முடியாது.நேரத்தை எதற்கு செலவிடுகிறீர்களோ, அது அதுவாகவே மாறி விடுகிறது. படிக்க செலவிட்டால், அது கல்வி. தாய், தந்தைக்கு செலவிட்டால், பரிவு. பிள்ளைகளுக்கு செலவிட்டால், பாசம். பொதுமக்களுக்கு செலவிட்டால், தொண்டு. பயணத்திற்கு செலவிட்டால், அனுபவம். தொழிலுக்கு செலவிட்டால், அது வளர்ச்சி, வருமானம்.

இப்படிப்பட்ட அருமையான நேரத்தை, பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் செலவிடுவோரே உலகில் அதிகம்.’எனக்கு நேரமே போதவில்ல…’ என்று, யாரெல்லாம் சொல்கின்றனரோ, அவர்களுக்கு உதவும்  ரகசியங்கல் இதோ.

நமக்கு, நேரத்தை மிச்சப்படுத்த, நம்மை சுற்றி, ஏராளமானோர் உள்ளனர். ‘பர்சை’ இறுக்கி பிடிக்காமல், சற்றே திறந்தால் போதும்; நமக்கென சேவகம் செய்ய, ஒரு படையே தயாராகி விடும்.

வேலையில்லா பட்டதாரிகளை பிடியுங்கள். ‘வேலை கிடைக்கும் வரை, பகுதி நேர உதவியாளனாக இரு; வேலை கிடைத்ததும் புறப்படு. அதுவரை, என் நேரத்தை மிச்சப்படுத்தும் வேலைகளை செய்து தா…’ என்று சொல்லுங்கள்.

உதவிக்கு உதவி;சேவைக்கு சேவை.

திரையரங்க நீண்ட வரிசைகள், ரயில் மற்றும் பேருந்து நீண்ட வரிசைகளில் நேரம் செலவிடாதீர்கள். இதற்கு, இணையதளத்தை கூட, அதிகம் சார்ந்திராதீர்கள். இதில் வீணாகிற நேரம், கொஞ்ச நஞ்சமல்ல. இதற்கென உள்ள நிறுவனங்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். சில பத்துகள் – நூறுகளில் வேலை முடியும்.

மேற்கூறிய முறைகளில், காசு கொடுத்து, நேரம் வாங்குகிற கலையை பலர் அறியாதிருப்பதால் தான், இவர்கள் மட்டுமே செய்யக் கூடிய பணிகளை, கோட்டை விட்டு, ‘நேரமில்ல…’ என அங்கலாய்க்கின்றனர்.

யார் யாரோ செய்யக் கூடிய பணிகளை, நாம் பார்த்து கொண்டிருப்பதால் தான், நாம் மட்டுமே பார்க்க வேண்டிய பணிகளுக்கு, நேரமில்லாமல் போகிறது. ஏனெனில்  நேரம் என்பது பணம் ஆகும்.

இக்கலையை கற்றுக் கொண்டால், ‘பல குடும்ப புலம்பல்கள், பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அதோடு இந்த நிலைமை மாறி, ‘எனக்கு, என்னன்னாலும் உடனே வந்து நிற்பாரு…’ என்கிற பாராட்டும் குடும்ப மகிழ்ச்சியும் கிடைக்கும்.

காசு செலவழித்து, அதன் வழியே காரியமாற்றுகிற கலைக்கு மாறாத வரை, நம் மதிப்பு மிக்க நேரம், கசிந்து கொண்டே தான் இருக்கும்.

தினமும் வெளியில் உணவகத்தில் சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே உணவு தயாரித்து உண்ணலாம். அதேநேரம் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று சந்தோசமாக உணவகத்தில் களிக்கலாம். ஒரு உணவுக்கு கொடுக்கும் விலை மிக அதிகம் என்றாலும், குடும்ப சந்தோசம் அதை விட பெரிது.

சிறிய பணமானது தொடர்ந்து செலவாகும் போது, மிகவும் பெரியதாக மாறுகிறது. நாளும் சிறிய சேமிப்பு பெரிய முதலீடு ஆகின்றது.

இன்றைய சிறிய சேமிப்பு எதிர்காலத்தில் உங்கள்  கனவு வீடாக மாறலாம்.

கட்டணங்கள் குறைய எளிய மாற்றங்கள்

 • உபகரணங்களை நன்றாக பராமரியுங்கள். நன்றாக பராமரிக்கப்பட்ட உபகரணங்கள், பழுதாவதற்கு வாய்ப்பு குறைவு. பழுது சரிபார்க்க, செலவிடும் தொகை மிச்சமாகும்.
 • தேவையற்ற சந்தாக்களிலிருந்து வெளியே வாருங்கள். உதாரணமாக, நீங்கள் ஏதேனும் ஒரு மாத, வார பத்திரிகை சந்தா வைத்திருக்கலாம். அதனை நீங்கள் படிக்க நேரமில்லாத பட்சத்தில் அதனை ரத்து செய்யுங்கள்.
 • இதற்கு பதிலாக, இணையத்தில் நீங்கள் செய்திகளைப் படிக்கலாம்.
 • யாருக்காவது நீங்கள் கொடுக்கும் பரிசுப் பொருளினை, பரிசு அட்டையினை, நீங்களே தயாரித்துக் கொடுக்க முடியும் என்றால், அதனை செய்யுங்கள் , அதில் பணம் சேமிப்பது மட்டுமன்றி, அவர்கள் மீது உங்களது தனிப்பட்ட அக்கறையும் வெளிப்படும்.
 • விழா சார்ந்த பொருட்களை, கடைசி நாட்களில்  வாங்கலாம். உதாரணமாக, பட்டாசு மொத்தமாக முன்கூட்டியே வாங்காமல், தீபாவளி அன்று, அதற்கு முதல்நாளில் விலைக் குறைவில் வாங்க முடியும்.
 • விதிவிலக்கு சமயங்களைத் தவிர, யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.
 • தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்காத, கட்டணம் சார்ந்த சேனல்களை நீக்கி விடுங்கள்.
 • சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் போது, அதன் பிரத்யேக சீசனில் செல்லாமல், அதற்கு கொஞ்சம் முன்போ, கொஞ்சம் பிந்தியோ செல்லுங்கள். லாட்ஜ் தங்கும் செலவு குறையும்.
 • கடன்களை சீக்கிரம் கட்டி முடியுங்கள். கடனிற்கு வட்டிக்கு செலுத்தும் தொகையினை சேமிக்க முடியும்.
 • நகரின் மையத்தில், பணக்காரப் பகுதிகளில் குடியிருக்காமல், புறநகர் பகுதிகளில் குடியிருங்கள். புறநகர் பகுதிகளில் வாடகை, பொருட்களின் விலைகள் குறைவு.
 • வீட்டிலேயே தோட்டம் அமைத்து காய்கறிகள் வளர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான காய்கறிகளை பெறுவதோடு, பணமும் சேமிக்கப்படும்.
 • பிராயணங்களின் போது, உணவினை வீட்டிலேயே தயாரித்துக் கொண்டு செல்வதன் மூலம், பணத்தினை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சேமிக்கலாம் (Save money).
 • அதிக பணம் வசூலிக்காமல், சேவை மனப்பான்மை உள்ள கல்வி நிறுவனங்களில் குழந்தைகளை படிக்க வையுங்கள்.
 • காப்பீட்டுத் திட்டங்களில், தனித்தனியாக குடும்ப நபர்களுக்கு (Individual Plan) எடுப்பதற்கு பதிலாக, குடும்பம் சார்ந்த குறைவான காப்பீட்டுத்திட்டங்களுக்கு(Floating Plan) மாறி, பணம் சேமியுங்கள்.
 • ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை(Life Insurance) விட, காலவரை சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களை(Term Insurance) பயன்படுத்து வதனால், பணம் சேமிக்கலாம்.
 • பங்கு சந்தை, பரஸ்பர நிதி முதலீடுகளில் குறைந்த தரகர் கட்டணம் வாங்கும் நிறுவனங்களில் இணைந்து பணம் சேமியுங்கள்.
 • மிகப் பெரிய மருத்துவமனை என்று செல்லாமல், உங்களது வீட்டின் அருகிலுள்ள நல்ல ஒரு மருத்துமனைக்கு செல்ல, மிக அதிக பணச் செலவு தவிர்க்கப்படும்.

பொருட்கள் வாங்கும் போது

 • தரமான பொருட்களை வாங்குங்கள். தரமற்றப் பொருட்கள் அடிக்கடி பழுது பார்க்க அல்லது புதிதாக மாற்ற வந்தால் அதிக பணத்தை இழக்க நேரிடும்.
 • எந்த ஒரு பெரிய பொருள் செலவையும் இணையத்தில் அலசி, ஆராய்ந்து, சலுகை சார்ந்த குறைந்த பணத்தில் வாங்கப் பழகுங்கள்.
 •  புதிதாக ஒரு கைபேசி வருகிறது. எல்லாரும் அதனை வாங்குகிறார்கள் என்று உணர்ச்சிவயப்பட்டு வாங்காதீர்கள். உங்களது தேவை சார்ந்து வாங்குங்கள்.
 • எந்த ஒரு பொருளினையும், முதலாவது இடத்தில் உள்ள நிறுவனத்தில் அதிக பணம் கொடுத்து வாங்குவதை விட, தரமான பொருளை அளிக்கும் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ள நிறுவனத்தில் வாங்குங்கள்.
 • பழைய புத்தக கடை, நூலகங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மிகவும் பிடித்த, அடிக்கடி படிக்க நினைக்கும் புத்தகங்களை மட்டும் வாங்குவதன் மூலம், புத்தகங்களுக்கான பணத்தினை சேமிக்கலாம்.
 • கைபேசி, தொலைக்காட்சி போன்ற சந்தாக்களை மொத்தமாக கட்டுவதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும். மாத சந்தாவை விட, ஆண்டு சந்தா பணம் குறைவு.
 • புதிதாக பொருள் வாங்குவதற்கு பதிலாக, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருளை வாங்குவதன் மூலம், பணம் சேமிக்கலாம்.

அன்றாடம் கவனிக்க வேண்டியவை

எங்கு சென்றாலும், ஒரு தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்லுங்கள். வெளியே தண்ணீர், பானங்கள் வாங்குவதை அது தவிர்க்கும்.

அடிக்கடி வெளியில் காபி அருந்துவது, அடிக்கடி சஞ்சிகை வாங்குவது, சிகரெட், பாக்கு என்று எந்த ஒரு பழக்கமாகவும் இருக்கலாம். இதனால் பணம் மட்டுமன்றி, உடல் நலத்தையும் பேணுகின்றீர்கள்.

எனவே, மதிய உணவு எடுத்து செல்வதைபோல, ஒரு ஃபிளாஸ்கில் தேனீர் அல்லது காபி எடுத்து சென்றால் அதிக தொகையை சேமிக்கலாம்.

மின்சாரம், தண்ணீர், எரிவாயு ஆகியவற்றை பயன்படுத்தும் போது, சிக்கனமாக இருந்து கொள்வது அவற்றுக்கும் நாம் கொடுக்கும் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்

மின்சாரத்தினை சேமிக்க வழிமுறைகளைப் பாருங்கள். மின்சார சேமிப்பு, மின்சார கட்டண சேமிப்பு மட்டுமல்ல. நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையினையும் சீர் செய்ய, உங்களால் முடிந்த ஒரு பங்கினை ஆற்ற முடியும்.

செலவில்லாத பொழுதுபோக்குகளை கைகொள்ளுங்கள். சினிமா, உணவகம் சென்றால் தான் பொழுதுபோக்கு அல்ல. கடற்கரை, கோயில், வீட்டின் தொலைகாட்சியின் சினிமா, நூலகம் என்று செலவில்லாத பொழுது போக்கிற்கான வழிகளை தேர்ந்தெடுங்கள்.

மளிகைப் பொருட்களை வாங்கும் போது, எந்தக் கடையில் தரமான, விலைக் குறைவான பொருட்கள் கிடைக்கின்றன என்று கண்டு, சில்லறையாக வாங்குவதை விட, மொத்தமாக வாங்குவதால் சேமிக்கமுடியும்.

அதோடு அடிக்கடி கடைக்கு ஓட வேண்டிய தேவையும் இல்லை.நேரமும் மிச்சமாகும்.

நடந்து செல்லக் கூடிய இடங்களுக்கு நடந்து செல்லுங்கள். முடிந்த அளவு பொது போக்குவரத்தினை பயன்படுத்துங்கள். தனிப்பட்ட போக்குவரத்திற்கு, அதிகம் பணம் செலவாகும்.

பணத்தை சேமிக்க சில சிறந்த வழிகள்(Save money)

உங்கள் செலவைப் பதிவு செய்வது பணத்தைச் சேமிக்க (Save money) நீங்கள் செய்ய வேண்டிய முதல் அடிப்படை படியாகும்.
ஒரு மாதத்திற்கு, நீங்கள் செய்த அனைத்து வகையான செலவுகளையும் பதிவு செய்யுங்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்.
அதில் உங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது பற்றிய ஒரு யோசனை உங்களுக்கு ஏற்படும்.
முதல் படியைப் பின்பற்றுவது உங்களை இரண்டாவது படிக்கு கொண்டு செல்லும். உங்கள் செலவுகளுக்கு ஏற்ப இறுக்கமான மாதாந்த பட்ஜெட்டை உருவாக்குங்கள். வரவு செலவு கணக்கு மிக முக்கியம். இறுக்கமான பட்ஜெட்டை உருவாக்குவதற்கான முக்கிய காரணம் உங்கள் தேவையற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கே ஆகும்.

சம்பளத் தொகையை தெளிவான செலவுத் தலைகளாகப் பிரிப்பது.

எடுத்துக்காட்டாக, இதை 4 பெரிய  பிரிவுகளாக / பகுதிகளாகப் பிரிக்கலாம்.
வீடு மற்றும் உணவு செலவில் 30%, வாழ்க்கை முறைக்கு 30%, சேமிப்புக்கு 20% மற்றும் கடன்கள்  போன்றவற்றுக்கு 20%.

குறைவாக செலவழித்தல்.

சேமிப்பு = வருமானம் – செலவுகள்.
இந்த மதிப்பீடு உங்களுக்கு சேமிக்கவும் செலவழிக்கவும் மிக எளிய மற்றும் எளிதான வழியை வழங்கும். ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், அவர்களின் வருவாயை திறம்பட பயன்படுத்த வேண்டும்.
உங்கள் கூடுதல் மற்றும் தேவையற்ற செலவுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துங்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் விரும்பும் அனைத்தையும் காட்சிப்படுத்துங்கள். வீடு அல்லது வாகனமாக இருக்கலாம்? அதன்படி, ஒரு இறுதி நோக்கமாக அதை சேமிக்கத் தொடங்குங்கள்.

குறைந்த செலவில் நல்ல சேவை வழங்குநரை நாடுதல்.

நம்முடைய அன்றாட வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய பல சேவை வழங்குநர்களின் சேவைகளை பயன்படுத்தி கொண்டிருப்போம்.

மலிவாக விலையில் தரமான பொருட்களை விற்கின்ற கடைகளை தேடி கண்டுபிடியுங்கள். இணையம், செல்பேசி சேவை நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

ஏற்கெனவே நீங்கள் சேவை பெற்று வருகின்றவர் மேலதிக சிறந்த சேவையை குறைந்த செலவில் வங்குவார்களா என்று பேசி பார்த்துவிட்டு, மாற்று வழிகளை தேடிக் கொள்ளலாம்.

சிறிய பழுதுகளை வீட்டிலேயே  சரி செய்தல்.

உதாரணத்திற்கு துணியை நீங்களே இஸ்திரி செய்வதன் மூலம், வெளியே இஸ்திரி செய்வதற்கான செலவைத் தவிர்க்கலாம்.

தெரியாதவற்றை செய்து கொள்ளும் வழிமுறையை இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிந்து அவற்றை நீங்களே செய்ய தொடங்குங்கள். இயன்ற வரை சரி செய்து மீண்டும் பயன்படுத்த முயலுங்கள்.

 மாத முடிவில் பெரும் சேமிப்பு உங்கள் வசமாகியிருக்கும்.

முதலீடு செய்யத் தொடங்குதல்.

பணத்தை சேமிப்பதற்கான அடுத்த அணுகுமுறை முதலீடு!
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வருமானத்தை ஈட்டுவதே முதலீட்டின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம்.
காலப்போக்கில், உங்கள் முதலீடு வளரும்.அதேபோல் உங்கள் பணமும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *