ஆரோக்கியத்திற்கு ஆபத்தான கடல் உணவுகள்! (Seafood Dangerous to Health)
கடல் உணவுகளில் ஆரோக்கியமான கொழுப்புகளும், புரோட்டீனும் உள்ளன. இப்படி ஆரோக்கியமான உணவுகள் பல இருக்கும் அதே வேளை நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் சில கடல் உணவுகளும் (Seafood Dangerous to Health) இருக்கின்றன.
ஏனெனில் கடல் உணவுகள் மிக எளிதாக பாக்டீாியாக்களினாலும் மற்றும் பலவிதமான வேதியல் பொருள்களினாலும் விரைவில் பாதிப்படைகின்றன.
இன்னும் சில கடல் உணவுகளில் பாதரசம் அதிகமாக இருக்கும். அதனால் பாதரசம் அதிகம் உள்ள கடல் உணவுகள் (Seafood Dangerous to Health) நமது ஆரோக்கியத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும்.
கானாங்கெளுத்தியில் (Mackerel) அதிகமான அளவு பாதரசம் உள்ளது. இந்த பாதரசம் நமது நரம்பு மண்டலத்தில் மிக எளிதாக பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது.
ஆகவே கருவுற்றிருக்கும் பெண்களும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களும் கானாங்கெளுத்தி மீனை உண்ணாமல் இருப்பது நல்லது.
ஆபத்தான க டல் உணவுகளில் சிப்பிகள் (Oyster) முக்கியமானவை ஆகும். கடல் சிப்பிகள் தண்ணீாில் இருக்கும் நச்சுகள், பாக்டீாியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்றவற்றால் மிக எளிதாக பாதிப்படையக்கூடியவை.
கெட்டுப் போய் இருக்கும் சிப்பிகளை சாப்பிட்டால் ,குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் பலவீனம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.
வைரஸ் தொற்று விஷம், இரைப்பை குடல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இன்னும், அசுத்தமான கடல் உணவுகள் நீரிழப்பு, காய்ச்சல், ஹெபடைடிஸ், நோர்போக் தொற்று மற்றும் போட்கின் நோயை ஏற்படுத்தும்.
அதனால் சில நேரங்களில் சிப்பிகள் நமக்கு விஷமாகி விடுகின்றன.
விற்றமின் பி சத்துகள் உணவு சீராக சொிமானம் ஆகுவதற்கும் சிறுநீரகங்கள் சாியாக இயங்குவதற்கும் அவசியம் தேவை.
மட்டிகளை (Shellfish) நாம் அதிகம் சாப்பிட்டால் , அவை நமது உடலில் உள்ள வைட்டமின் பி1 சத்தை குறைத்துவிடும். மட்டிகளை சாியாக சமைப்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
இறால்கள் (Shrimp) பொதுவாக ஒட்டுண்ணிகள் மற்றும் இறந்த விலங்குகளின் தோல்களை சாப்பிட்டு வாழ்கின்றன. இதனால் தான் இறால்களை அதிகம் சாப்பிட்டால் உடலில் அரிப்பு ஏற்படுகின்றது.
அதோடு மிக எளிதில் அலா்ஜி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இறால்கள் பியூாின் என்ற காிமச் சோ்மத்தை(An organic compound called purine) அதிகம் சாப்பிடுகின்றன.பியூாின் மிக எளிதாக நமது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
கடல் உணவில் கடல் நீரில் வாழும் உயிரினங்களுக்குள் நுழையும் நச்சுகள் மற்றும் விஷங்கள் இருக்கலாம்.
எப்படி சரியான கடல் உணவை தெரிவு செய்வது ?
- உடன் மீன்களை வாங்கி பாவிப்பது எப்பவும் நல்லது.
- ஐஸ்களில் உறைய வைக்கப்பட்டு (Frozen ) விற்கப்படும் கடல் உணவுகள் தேர்ந்தெடுக்கும்போது, உற்பத்தி தேதி, உணவின் தோற்றம் ஆகியவற்றில் மிக கவனம் செலுத்துங்கள். உணவுகளில் இருந்து விரும்பத்தகாத வாசனை வரக்க்கூடாது.
- உயர்தர இறால்கள் சமமான மற்றும் மென்மையான நிறத்தைக் கொண்டிருக்கும்.இறால் உறைவதற்கு முன்பு இறந்திருந்தால் அதன் வால் சுருண்டு அல்லது வால் திறந்திருக்கும்.
- நல்ல சிப்பியினம் ஒளி பழுப்பு நிறத்தில் இருக்கும்.
- கடல் உணவை வாங்கும் போது நல்ல பொருளின் அடையாளம் ,அவற்றின் விலை.மலிவான உணவுகளை வாங்க முன்வந்தால், பெரும்பாலும் தயாரிப்புகளில் ஏதோ தவறு இருக்கலாம்.
- சுற்றுச்சூழல் ரீதியாக சுத்தமான பகுதிகளில் இருந்து கிடைக்கும் கடல் உணவை சாப்பிடுவது முக்கியம்.