சுறுசுறுப்பாக இருக்க சில ரகசியங்கள் (Secrets to be active)
ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக இருக்க (Secrets to be active) எல்லோருக்கும் ஆசை.அது எவ்வளவு நல்லாக இருக்கும். திட்டமிட்டபடி அன்றைய வேலைகள் அனைத்தையும் முடித்துவிடலாம். அதோடு அடுத்தநாள் கடமைகளையும் சரிவர திட்டம் இடலாம்.
இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்து வேலை பார்ப்பது நல்லது.
எந்த முன்னேற்பாடும் இன்றி நாளை தொடங்குவது தான் நேர விரயத்தை உண்டு பண்ணும்.பல சிக்கல்களை உண்டாக்கும். மற்றும் இதன் கூடுதல் விளைவாக உடல்நல கேடுகளும் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு நாளையும் புதிதாக தொடங்குங்கள்.
இதனால் வேலைப்பளு இருக்காது. அவதி, பரபரப்பு இல்லாமல் அமைதியாக இருக்கமுடியும்.
கோபம் ,டென்ஷன் இல்லாமல் இருக்கலாமுங்க. எப்படியா?
வீடியோவைப் பாருங்கள்.
தியானம் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த உதவும். உங்கள் மனம் ஒருநிலை ஆகும் போது, நாம் செய்யும் எந்த ஒரு விடயத்திலும் தெளிவான முடிவை எடுக்க முடியும். இது வெற்றியை பரிசளிக்கும்.
தியானம் உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுவது போல, உடற்பயிற்சி உங்கள் உடல்நிலையை மேம்படுத்த உதவும். மனதும், உடலும் மேம்படும் போது உங்கள் வாழ்க்கை மேம்படும்.
மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க (Secrets to be active)
காலை வேளைகளில் புத்தகம் அல்லது பத்திரிகைகளை படிப்பது நல்ல பழக்கம் ஆகும். இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்.
விடிந்தும் விடியாது உங்களது நாளை விரைவாக நகர்த்தாமல் கொஞ்சம் பொறுமையுடன் ஆரம்பியுங்கள். பொறுமையும், நிதானமும் மிக முக்கியம். இவை இரண்டும் இல்லாவிடில் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஏற்படுகிறது.
எனவே நாம் துரிதமாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டுமானால் மூளையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு மூளை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்.
மூளை சுறுசுறுப்பாக செயல்பட முதலில் அதிகாலையில் எழ வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து சுமார் 15 நிமிடம் காற்றை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். மூச்சுப்பயிற்சி பெற்றவர்களிடம் பயிற்சி பெற்று செய்வது சிறந்த பலன் தரும்.
மேலும் “ட்ரெட்மில்”லில் ஓடுவது, ஜாக்கிங் செய்வது, ஓட்டம் போன்ற உடற்பயிற்சிகளை செய்தாலும் மூளையின் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.
இரண்டாவதாக, சத்துள்ள சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய்கறிகள், பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதே வேளையில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம். கண்ட கண்ட வேளைகளில் சாப்பிடுவதும், அளவை மீறிச் சாப்பிடுவதும் மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒழுங்கற்ற உணவுமுறை மந்தத்தன்மையையும், சில நோய்களையும் உருவாக்கி விடும்.