சுவையான சேமியா கேசரி (Semiya Kesari)
கேசரி மிக இலகுவாக செய்யக் கூடிய இனிப்பு பலகாரம். சுவையானதும் கூட. திருமணம், தீபாவளி, நவராத்திரி போன்றவற்றிற்கு அதிகமாக செய்வார்கள். அதிகமாக ரவையில் தான் செய்வார்கள்.
அன்னாசிப்பழம், மாம்பழம், பீட்ரூட், கரட், என பல பொருட்களில் விதம் விதமாக கேசரி செய்யலாம். இங்கு ரவைக்கு பதிலாக சேமியாவில் கேசரி (Semiya Kesari) செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். சேமியா கேசரி (Semiya Kesari) எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
சேமியவில் பாயாசம், உப்புமா, கிச்சடி,
சேமியா கேசரி (Semiya Kesari)செய்ய தேவையான பொருட்கள்
சேமியா – 500 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
தண்ணீர் – 400 மி.லி.
நெய் – தேவையான அளவு
முந்திரி பருப்பு – தேவையான அளவு
திராட்சை – தேவையான அளவு
ஏலக்காய் – 3
கேசரி பவுடர் – சிறிதளவு
செய்யும் முறை
- சேமியா, முந்திரிப்பருப்பு, திராட்சையை தனித்தனியாக நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.
- கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேகவிடவும். கட்டி விழாமல் இருக்க கைவிடாமல் கிளற வேண்டும்.
- சேமியா வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
- எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது கடைசியாக முந்திரிபருப்பு, திராட்சை, மீதியுள்ள நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
- பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும்.
ஒரு காலத்தில் சேமியா பாயாசம் எனும் இனிப்பாக பயன்பட்டது. இன்று அது உப்புமா போல் காரம் சேர்த்து காலை / மாலை உணவாக பயன்படுகிறது. பயாசம் இல்லாத விருந்தே கிடையாது. எனவே நல்ல மார்க்கெட் சேமியாவுக்கு தமிழ்நாட்டில் உறுதியாய் உண்டு.
சேமியா மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இது மிகவும் கடினமான கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அது வெறுமனே மைதா, தண்ணீர், மற்றும் ஒரு சிறிய உப்பு. சேமியா ஒரு பிரபலமான உடனடி உணவு தயாரிப்பு ஆகும். இது கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
சேமியா எதிலிருந்து செய்யப்படுகிறது?
மக்ரோணி கோதுமை மாவு, மரவள்ளிக்கிழங்கு மாவு, தண்ணீர் ஆகியவை மூலப்பொருட்கள். கோதுமை 3 பங்கு என்றால், 1 பங்கு மரவள்ளிக்கிழங்கு மாவுடன் நல்ல தண்ணீர் சேர்த்து கலக்கி இயந்தரம் மூலம் மிக்ஸ் செய்து பின் ‘எக்ஸ்ரூஷன் பிரஸ்’ மூலம் சேமியா தயாரிக்கலாம்.