எள்ளு உருண்டை செய்வோம் (Sesame balls)

 “எள் உருண்டை” (Sesame balls) ஆரோக்கியமான நொறுக்குத்தீனி

நமது அன்றாட உணவுகளை சாப்பிட்டது போக அவ்வப்போது சிறு நொறுக்குத்தீனிகள் , சிற்றுண்டிகளை சாப்பிடுவது பலருக்கும் வழக்கம்.அப்படியான சமயங்களில் துரித உணவுகள் ,பக்கெட்டுகளில் அடைத்து வரும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை உண்டு உடல் நலத்தை கெடுத்துக்கொள்வது நல்லதல்.

உடலுக்கு நன்மையை செய்யும் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை உண்ணவேண்டும். அவ்வாறான ஒரு உணவு வகை தான் “எள் உருண்டை” (Sesame balls).

எள், இரும்புச்சத்து, துத்தநாக சத்து அதிக கொண்டது.

இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்ளவது சிறந்தது. மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் உருண்டை சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும்.

இதோ நினைத்த உடனேயே விரைவாக செய்யக் கூடிய எள்ளுருண்டை(Sesame balls)!

தேவையானவை எள்ளும் சீனியுமே.

எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும்.எள்ளில் செம்பு அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகரிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.

மேலும் எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள்ளை தொடர்ந்து உணவில் எள்ளுசாதம்,எள்ளு உருண்டை (Sesame balls) என சேர்ப்பதன் மூலம் போக்க முடியும்.

மனிதர்களின் தலையில் இருக்கும் தலைமுடி அவர்களுக்கு நல்ல தோற்றத்தை தருவதோடு இல்லாமல், உச்சந்தலையை வெப்பம் மற்றும் காயங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கின்றது. எள் உருண்டையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்வு குறைந்து விடும். முடி நல்ல பளபளப்பை பெறும்.

ஒவ்வாமை, சுற்று சூழல் மாசு மற்றும் பிற காரணங்களாலும் சிலருக்கு ஆஸ்துமா ஏற்படுகிறது நோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு காற்றை சுவாசிக்கும் போது சிரமத்திற்குள்ளாவார்கள்.

ஆஸ்த்மாவாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.

 Iron rich esameballs,annaimadi.com

எள் புரதத்தை தன்னகத்தே அதிகம் கொண்டது. உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் எள்ளு உருண்டையை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும்.

இது உடல் இளைத்தவர்களுக்கு  சரியான உடல் எடையை பெற உதவும்.உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.

 எள் கொண்டிருக்கும் சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது.மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு நீங்க உதவுகிறது.

மது, சிகரட் போன்ற போதை பழக்கத்தை விட்டொழிக்க நினைப்பவர்கள் தினந்தோறும் ஒரு எள் உருண்டையை சாப்பிட அவர்கள் உடலில் ஏறியிருக்கும் போதை இறங்கி, உடல் தூய்மையடையும்.

சிலர் எப்போதும் ஒருவித படபப்புத்தன்மையுடன் இருப்பார்கள். எள் மெக்னீசியம் மற்றும் கல்சியம் சத்துக்களை அதிகம் கொண்டது.

இப்படி படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் ஒரு எள் உணவை சாப்பிட்டு வந்தால், மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடலும் மனமும் அமைதியடையும்.

படபடப்பு தன்மை மறையும்.

எள்ளில் நிறைந்துள்ள மேலதிக ஆற்றல்கள்

  • எள், நோய் எதிர்ப்பு, கிருமி நாசினி தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் அதிகம் கொண்டது.
  • எள் உருண்டையை குறிப்பாக குழந்தைகள் சாப்பிட்டு வருவார்களேயானால், அவர்கள் அடிக்கடி நோய் பாதிப்புகளுக்கு ஆளாவது குறையும்.
  • ஜுரம், சளி போன்ற பாதிப்புகள் விரைவில் நீங்கும்.
  • எள் உருண்டையை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது.
  • எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலின் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது.
  • தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி சிரங்கு படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு.

ஒரு சிறு எள்ளுருண்டை (Sesame balls) பலவிதமான நன்மைகளை கொண்டுள்ளது.நாளும் ஒரு எள்ளுருண்டையை மறக்காமல் உண்போம்!

Leave a Reply

Your email address will not be published.