பெருமாள் கோவில் எள்ளு சாதம் (Sesame rice)
எள்ளு சாதம் (Sesame rice) பெருமாள் கோவில் முறையில்!
சாதாரணமாக வீடுகளில் செய்வதைக் காட்டிலும் பெருமாளுக்கு நைவேத்தியமாக படை க்கும் எள்ளு சாதம் (Sesame rice) அதிக சுவையானது.எள்ளு லேசான கசப்பு, துவர்ப்புடன் கூடிய இனிப்பு சுவையானது.
எள்ளு உடலுக்கு சூடு தரக் கூடியது.உடலை கனக்கச் செய்யும்.தோலுக்கும் பற்களுக்கும் கேசங்களுக்கும் உறுதி தரக்கூடியது. உறுப்புகளுக்குப் பலமும் சுறுசுறுப்பும் தரும்.
வேக்காளத்தைக் குறைத்து அசதியைப்போக்கித் தசைகளுக்குப் புத்துயிர் ஊட்டவல்லது. மூளைக்குத் தெளிவைத் தரும்.
வயது வந்தும் பூப்படையாத பெண்களும், மாத விடாய் சரியாக ஆகாமல் கடும் வயிற்று வலியால் அவதியுறும் பெண்களுக்கும், தாய்ப்பால் குறைவாக உள்ளவர்களுக்கும் எள்ளுடன் கூடிய உணவால் நன்மை பெறுவர். உதிரச் சிக்கலை போக்க எள் ஊற வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்.பனை வெல்லம் எள்ளு கருஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திய வலி கடுப்பு உதிரச் சிக்கலை நீக்க பெறும் உதவி செய்கின்றன.
எள்ளு நல்ல பசியைத் தூண்டுவதால் உணவின் அளவு அதிகரித்து மெலிந்தவர்கள் உடற்பருமன் அடைகிறார்கள்.
இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழி,இதைத் தான் குறிப்பிடுகின்றது.
மலக்கட்டை ஏற்படுத்தும். வாயுவால் ஏற்படும் திமிர்ப்பு, விறைப்பு, வலி முதலியவைகளைக் குறைக்கும். பெண்களின் கர்ப்பப்பையைச் சார்ந்த வறட்சியைப் போக்கி வலியைநீக்கக் கூடியது.
எள்ளை வாயிலிட்டு குதப்பிக் கொண்டிருந்தால், பலமற்ற பல் ஈறுகள், தாடை உள்ளோர்நன்மை பெறுகிறார்கள். மூளைக் களைப்புள்ளவர்கள் எள்ளை அதிகமாக உணவில் சேர்ப்பது நல்லது.
இப்படி பல நன்மைகளை தரும் எள்ளில் எள்ளுசாதம் (Sesame rice) எப்படி செய்வது என பார்ப்போம்.குறைந்த நேரத்தில் செய்யக் கூடியது.
இதில், ‘ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3’ கொழுப்பு அமிலங்கள், கல்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின், ‘ஏ, பி’ போன்றவை உள்ளன. இதை சரியான அளவில் எடுத்துக் கொண்டால், பலன் முழுமையாக கிடைக்கும்.அதிக எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், ‘ஏ, பி’ ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். மேலும், முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் தீரும்.
எள்ளை பயன்படுத்தி எள்ளுபாகு,எள்ளுமா,எள்ளுசாதம், எள்ளு உருண்டை செய்து கொடுத்து மெலிந்த குழந்தைகளை சிறிது உடற் பருமன் பெற செய்வோம்.
சிறுநீரை சுண்டச் செய்வதால் அதிக அளவில் சிறுநீர் வெளியாகும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் எள் கலந்த உணவு நன்மை தரும். பலத்தையும் தருகிறது.