தாயைப் போன்றது தாய் மருத்துவம் (Siddha medicine)
தாயைப் போல தாய் மருத்துவம் (Siddha medicine) நம் எல்லோரையும் காக்கவல்லது.
மனிதன் தோன்றிய காலம் முதலே மருத்துவமும் இருந்து வந்துள்ளது. இயற்கையின் மாற்றங்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் ஏராளம். இதனால் ஆரம்ப காலங்களில் ஏராளமானோர் பலியாயினர்.
இப்படியான நோய்களை என்னவென்று அறியாது பேய், பிசாசு, தெய்வக்குற்றம் என இவர்களே அதற்கு ஒரு பெயரிட்டுக்கொண்டனர்.
நாட்கள் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு கொண்ட மக்கள் ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள் போன்றவர்களை நாடிச் சென்றனர்.
இவர்களின் அறியாமையையும், நோயின் தாக்கத்தால் அவர்கள் படும் வேதனைகளையும் கண்ட சித்தர்கள் தங்களின் தவப் பயனால் மனித உடல்கூறுகளை கண்டறிந்தனர். இவற்றின் செயல்பாடுகளை துல்லியமாக கணித்தனர்.
பிரபஞ்சத்திற்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்புகளைக் கண்டு கோள்களின் ஆதிக்கம் மிகும் போது மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொண்டனர். இதனால் புரியாத நோய்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்தனர்.
மனித உடம்பினுள் உள்ள எலும்பு, தசை, நரம்பு இரத்த நாளங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதனால் நாடியைப் பிடித்துப் பார்த்தவுடன் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சித்தர்கள் கண்டறிந்தனர்.
நோய்க்கு மருத்துவம் செய்வதை விட அந்த நோய் உருவாக காரணம் என்ன என்பதை அறிந்து அதனை வேரோடு அகற்ற மருத்துவம் செய்தனர். இதற்கு மூலிகைகளைப் பயன்படுத்தினர்.
இவ்வாறு ஆதி காலத்திலிருந்தே செய்யப்பட்டு வந்த மருத்துவம் தான் இந்திய மருத்துவ முறையான சித்தா (Siddha medicine), ஆயுர்வேதா, வர்மா, யுனானி, இயற்கை மற்றும் யோகா மருத்துவம்.
இந்திய மருத்துவமும், ஜெர்மானிய மருத்துவமான ஹோமியோபதி மருத்துவமும் ஆங்கில மருத்துவமான அல்லோபதி மருத்துவத்திற்கு இணையாகவே போற்றப்படுகிறது.
எச்.ஐ.வி.வைரஸை நேரடியாகக் கொல்லும் மருந்தை எடுக்க முடியுமா தெரியவில்லை. ஆனால், உடல் நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தி அந்த கிருமிகளைச் செயலிழக்க வைக்க முடியும் என்றே தோன்றுகிறது.
அதற்கான அணுகுமுறை பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு உள்ளது.
மனிதன் நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசையே மனிதனை கற்பம் யோகம் (Siddha medicine) போன்ற வழிகளை தோற்றுவித்தது எனலாம் சரி இக்காரணம் மட்டுமே கற்பம் கொள்ள காரானமாயிடுமா.
சித்த மருத்துவம் ஏன் ஒடுக்கப்படுகிறது (Siddha medicine)
வரலாற்றைப் பார்த்து சித்த மருத்துவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். இன்றல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்ட மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha medicine). இது மருத்துவம் மட்டுமல்ல. சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காகவே இருந்துவரும் ஓர் சேவை.
அதன் வீச்சு செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ. அன்று ஆசிவகமும் சாங்கியமும் பேசிய போது, வேதங்களுடன் மோதியது சித்த மருத்துவம்(Siddha medicine).
சமணம் பேசிய போது பக்தி மார்க்கத்தில் வேறு போராட்டம். நாட்டு மருத்துவமாய் இருந்தபோது ஆங்கிலேயத்துடன் போராட்டம். இன்றோ பன்னாட்டு மருந்துச் சந்தையுடன் இறுதிப் போராட்டம்.
இந்த இறுதிப் போராட்டத்தில் காப்பாற்றப்பட வேண்டியது மருத்துவர்கள் அல்ல. நம் நாட்டு சாமானிய மனிதர்கள். அதற்கு, இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட வேண்டும். சமூக அக்கறையுள்ள இரு துறை மருத்துவருக்குமான இணக்கம் காலத்தின் கட்டாயம்.
நம் நாட்டைப் பீடித்திருக்கும் பன்னாட்டு மருந்துச் சந்தை கலாச்சாரத்தின் பிடியிலிருந்து விலக்க இருதுறை மருத்துவரும் நம் எளியவர் வறியவர் நலம் காக்க இணைந்து செயலாற்ற வேண்டும்.
பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியைச் சொல்லும் அதே நேரத்தில், ஷ்கிமிக் அமிலம் நிறைந்த தக்கோலத்தை தேநீராக்கிச் சாப்பிடச் சொல்லவும் தயங்கக் கூடாது.
ஏனென்றால், மருத்துவரிடையே உள்ள ’நானே கடவுள்!’ என்ற இந்த போட்டி தெரியாமல், நலம் தேடி அப்பாவியாய்க் காத்து நிற்கின்றனர் எட்டு கோடி தமிழக பக்தகோடிகள்.
இந்திய மருத்துவமும், ஜெர்மானிய மருத்துவமான ஹோமியோபதி மருத்துவமும் ஆங்கில மருத்துவமான அல்லோபதி மருத்துவத்திற்கு இணையாகவே போற்றப்படுகிறது.
நாட்டை ஆளும் மன்னர்களுக்கு என தனியாக ராஜ வைத்தியர்கள் நியமிக்கப் பட்டனர். சாதாரண மக்களுக்காக பல வைத்திய சாலைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு மருத்துவம் செய்யப்பட்டு வந்தது.
பின்னாளில் நம் நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கீழ் வந்ததால் அவர்கள் அல்லோபதி மருத்துவத்தை நம்நாட்டில் புகுத்தினர். அதோடு எப்பேர்ப்பட்ட நோயையும் குணப்படுத்தும் சித்தா, ஆயுர்வேதா மருத்துவ முறைகளில் சிலவற்றை களவாடி ஆங்கில மருத்துவத்தில் இணைத்துக்கொண்டனர்.
இதனால் ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும் பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே செய்யும் நிலை உருவாகியது. மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
குறிப்பாக கேரளாவில் ஆயுர்வேத மருத்துவம் இன்றும் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே சித்த மருத்துவம் செழித்து வளர்ந்துள்ளது.
ஆனால் ஆங்கில மருத்துவத்தின் தாக்கத்தால் இந்திய மருத்துவ முறையின் சிறப்புகள் எல்லா மக்களையும் சென்றடையவில்லை. மேலும் பல மருத்துவச் சுவடிகள் சுயநலவாதிகள் சிலரிடம் சிக்கி வெளியேறாமல் அழிந்து வருகிறது.
மேலும் இந்திய மருத்துவத்திற்கென சரியான பாடசாலைகள், கல்லூரிகள் இல்லாமல் குருகுலக் கல்வியாக மட்டுமே இருந்து வந்தது.
இதனால் இடைப்பட்ட காலத்தில் இந்திய மருத்துவத்தின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வில்லை.
இந்திய மருத்துவம் கற்றவர்களும் சுயநலவாதிகளாக செயல்பட்டதும் இந்திய மருத்துவம் வளராததற்கு முக்கிய காரணம்.
நம் தாய் மருத்துவமான சித்தர் வழி வந்த சித்த மருத்துவத்தின் பயனை பெறுவோம். பாதுகாப்போம்.