சித்தர்களின் பெருமை (Pride of the Siddhars)

யோகா, தியானம், வான் ஆராய்ச்சி போன்றவையெல்லாம் சித்தர்களுக்கு (Siddhars) கைவந்த கலை. அவர்களை அடையாளம் கண்டு அங்கு வாழும் மக்கள் போற்றுகிறார்கள்.சித்தர்கள் (Siddhars) காலத்தின் கணக்கை கணித்தது போல, நவகிரகங்களின் திசைகளையும் மாற்றி, காலநிலைகளையும் மாற்றியிருப்பதாக வரலாறு கூறுகிறது.

சித்தர்களின் ஆயுட்காலத்தைக் கணக்கிட முடியாது. அவர்களாக ஜீவசமாதி அடைந்திருப்பதாக வரலாறு கூறுகிறது.

கூடுவிட்டுக் கூடுபாய்வது, ஆகாயத்தில் பறப்பது, மருத்துவம், ஜாலம், பூஜாவிதி, ஜோதிடம், சிமிழ்வித்தை, சூத்திரம், சிற்பநூல், மாந்திரீகம், சூட்சும ஞானம், தீட்சாவிதி, யோகஞானம், திருமந்திரம், ரசவாதக்கலை போன்றவையெல்லாம் சித்தர்களுக்கு (Siddhars) கைவந்த கலையாகும்.

நாழிகை ஒன்றுக்கு நம் சுவாசம் 360. அறுபது நாழிகைக்கு- அதாவது ஒரு நாளைக்கு நம் சுவாசம் 21,600 முறையாகும். இதன்படி கணக்கிட்டுப் பார்த்த போது 360 நாள்- 21,600 நாழிகை கொண்டது என்றும், அதுவே ஒரு வருடம் என்றும் சித்தர் பெருமக்கள் கூறுகிறார்கள்.

இதேபோல் யுகங்களின் கணக்கும் இப்படி கூறப்படுகிறது. 21,600-ஐ எண்பதால் பெருக்கினால் கிருத யுகமாம். அறுபதால் பெருக்க திரேதா யுகமாம். நாற்பதால் பெருக்க துவாபர யுகமாம். இருபதால் பெருக்க கலியுக மொத்த ஆண்டாகும் எனப்படுகிறது. 

பஞ்சாங்கத்தில் பார்த்தால், மேற்படி யுகங்களுக்குரிய வருடங்கள் சரியாக இருப்பதைக் காணலாம்.

சித்தர்கள் என்றால், மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமல்லாது மொழிக்கும் முதன்நிலை அளித்து ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள்.

மொழி இல்லாமல் எது நிலைக்கும்?

தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர் தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள். ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது.

மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும். மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ, செழிக்கவோ முடியாது. முக்காலத்தையும் அறிந்த சித்தர்கள் முத்தமிழையும் பெருமைப்படுத்தினார்கள்.

சித்தர்களின் பெருமை ,Pride of the Siddhars,அன்னைமடி,அகத்தியர் ,Chief Siddhar among the Siddhars,annaimadi.com,Chittharkal,Siddha medicine,சித்தமருத்துவம்

திருமூலர்

தமிழைப் பாடுவதற்காகவே என்னை இறைவன் படைத்திருக்கிறான் என்று புளங்காகிதம் அடைந்திருக்கும் திருமூலர் தமிழின் பெருமையும் இறைவனின் அருமையும் இரண்டறக் கலந்திருப்பது குறித்து மனம் குழைந்து கூறியிருக்கிறார்.

ஆம்… தமிழை அவர் வெறும் மொழியாக மட்டும் பார்க்கவில்லை. ஞானாமிர்தமாகப் பார்க்கிறார்.
அதுமட்டுமல்ல.. சித்தர்களின் சிறப்பை பற்றி சொல்ல வரும்போது,

“பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து
தென்தரை மீதிற் றெளிந்தவர் சித்தரே”

என்றும் பாராட்டுகின்றார். தங்களின் தொன்மமான பெருமைகளில் தோய்ந்தது மட்டுமல்லாமல், தமிழையும் உணர்ந்ததாலேயே சித்தர்கள் (Siddhars) சிறப்புப் பெற்றார்கள் என்கிறார்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..”

என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம்.

அகத்தியர் (Chief Siddhar among the Siddhars)

சித்தர்களுக்கெல்லாம் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும் “குறுமுனி” என்று போற்றப்படும் அகத்தியர், கயிலை மலையில் நடந்த சிவ- பார்வதி திருமணக்காட்சியை பொதிகை மலையில் இருந்தவாறு தரிசித்தவர்.

இவர் ஒருசமயம் திருக்குற்றாலத்திற்குச் சென்ற போது அங்கு அமைந்துள்ள வைணவத் திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது அவ்வாலயத்தில் இருந்தவர்கள், சிவச்சின்னங்களுடன் வந்த அகத்தியரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. திரும்பிச்சென்ற அகத்தியர் வைணவச் சின்னங்களை தரித்துக்கொண்டு, சில மூலிகைகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் பெருமாள் ஆலயம் வந்தார்.

வைணவர் என்றெண்ணி அவரை அனுமதித்தனர். உள்ளே சென்ற அகத்தியர் மூலிகைச் சாறை பெருமாள் தலையில் பிழிந்து, கைவைத்து அழுத்தி, “குறுகுக குறுகுக” என்றாராம். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பெருமாள் குறுகி சிவலிங்கமானாராம். அவரே குற்றாலீஸ்வரர். அகத்தியர், பெருமாள் தலையில் கைவைத்து அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளை இன்றும் குற்றாலநாதர் சிவலிங்கத்தில் தரிசிக்கலாம்.

அதுமட்டுமல்ல; அகத்தியர் தன் வலிமையைப் பயன்படுத்தி அழுத்தியதால் குற்றாலநாதருக்கு தலைவலி ஏற்பட்டதாம். அதனை நீக்குவதற்கு அரிய மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட தைலத்தை இன்றும் அபிஷேகம் செய்கிறார்கள்.

அகத்தியர் குற்றாலத்திற்கு வந்ததன் அடையாளமாக அவருக்கு ஒரு சந்நிதி, குற்றாலநாதர் கோவிலில் உள்ளது. அவரை வழிபட, நினைத்த காரியங்கள் வெற்றி பெறுமென்பது நம்பிக்கை. அகத்தியர், திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் வளாகத்தில் சமாதி அடைந்தாரென்றும், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் திருக்கோவிலில் சமாதி கொண்டதாகவும் இருவகையாக சொல்லப்படுகிறது.

இன்னும் சிலர் பொதிகை மலைப்பகுதியில் இன்றும் அகத்தியர் வாழ்ந்துவருகிறார் என்று கூறுவர். மக்கள் நடமாட்டமில்லாத பொதிகை மலைப்பகுதியில் அகத்தியருக்கு முழு உருவச் சிலையொன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.சித்தர்களின் பெருமை ,Pride of the Siddhars,அன்னைமடி,அகத்தியர் ,Chief Siddhar among the Siddhars,annaimadi.com,Chittharkal,Siddha medicine,சித்தமருத்துவம்

அழுகணிச் சித்தர் (Siddhars)

நவகிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர் அழுகணிச் சித்தர். இவரை வழிபட்டால் நாகதோஷம் அகலும். இவர் சித்தியடைந்த இடம் நாகப்பட்டினம். இவரைப்போலவே குதம்பை சித்தர் கேது தோஷம் நீக்கும் சக்திபெற்றவர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், “டென்ஷன்” பேர்வழிகளும் இவரை வழிபட்டு நலம் பெறுகிறார்கள். இவர் சித்தியடைந்த இடம் மயிலாடுதுறை. ராகு பகவானைப் பிரதிபலிக்கும்.

பாம்பாட்டிச் சித்தர்(Siddhars)

விருத்தாசலத்தில் சித்தியடைந்தார். திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது சிறுகனூர் திருப்பட்டூர் தலம். இங்குள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மன் சந்நிதிக்கு வலப்புறம் ஆதிசேஷன் அவதாரமான பதஞ்சலி முனிவரின் சமாதி உள்ளது. அங்கு சிறிதுநேரம் அமர்ந்து தியானம் செய்தால் கேதுவினால் ஏற்படும் தோஷம் மட்டுமல்ல,அனைத்து நாகதோஷங்களும் நீங்குமென்பர்.

இந்தக் கோவிலுக்கு வடபுறத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. அதன் புறவாசலின் முன்பகுதியில் புலிக்கால் முனிவர் என்னும் வியாக்ரபாத முனிவரின் பிருந்தாவனம் உள்ளது. அவரை பிரார்த்தனை செய்து வழிபட்டால் ராகுதோஷம் நீங்கும்.

இடைக்காடர்

நாட்டில் மழையின்றி மக்கள் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் காலகட்டத்தில், இடைக் காடர் என்ற சித்தர் மட்டும் பசியின்றி வாழ்ந்து வந்தார். இதைக்கண்ட நவகிரக நாயகர்கள் “இது எவ்வகையில் சாத்தியம்?” என்று வியந்து, காரணத்தையறிய சித்தரின் குடில் தேடி வந்தனர்.

அவர்களை அன்புடன் வரவேற்ற இடைக்காடர் அவர்களுக்கு வரகு ரொட்டியையும் ஆட்டுப்பாலையும் அளித்தார். அவர்களும் விருப்பமுடன் உண்டனர்.

ஆட்டுப்பாலில் எருக்கிலைகளின் சத்து மிகுந்திருந்ததால், அப்பாலை அருந்தியதும் நவகிரக நாயகர்கள் மயக்கமுற்று சாய்ந்தனர்.

உடனே இடைக் காட்டு சித்தர், நவகிரக நாயகர்கள் எந்த அமைப்பிலிருந்தால் மழை குறையின்றிப் பெய்யுமோ, அந்த அமைப்பில் மாற்றிப் படுக்க வைத்தார்.

வானத்தில் மேகமூட்டம் திரண்டது. மழைபொழியத் துவங்கியது. பூமி குளிர்ந்தது. ஆறு, குளங்கள் நிரம்பி வழிந்தன.

மயக்க நிலை தெளிந்த நவகிரக நாயகர்கள், தங்களை திசைமாற்றி இடைக்காடர் சாதித்துவிட்டதை அறிந்து வியந்தார்கள். நாடு செழிக்க சித்தர் செய்த அற்புதத்தை நினைத்து அவரைப் போற்றினார்கள்.

அவரை வணங்கி, வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இதேபோல, ஒவ்வொரு சித்தரும் பல கலைகளில் நிபுணத்துவம் பெற்று மக்கள் நலமுடன் வாழ அருள்புரிந்திருப்பதாக சித்தர்களின் வரலாறு கூறுகிறது. இன்றும் சித்தர்கள் உலகில் இருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் மனிதர்களின் கண்களுக்கு அவ்வளவு சீக்கிரம் புலப்படுவதில்லை என்கிறார்கள்.சித்தர்களின் பெருமை ,Pride of the Siddhars,அன்னைமடி,அகத்தியர் ,Chief Siddhar among the Siddhars,annaimadi.com,Chittharkal,Siddha medicine,சித்தமருத்துவம்

சித்தர்களின் வெளிப்பாடு பற்றிய வேடிக்கையான கதை

ஒரு ஞானி இதற்கொரு கதை சொல்கிறார். ஒரு துறவி தம்முடைய சில சீடர்களுடன் ஒரு நகரத்திற்கு வந்திருந்தார். அந்தத் துறவிக்கு ஒரு சக்தி இருந்தது. தம் உடலிலிருந்து ஒரு துளி ரத்தம் எடுத்து, அதன் மூலம் குழந்தைகளின் நோய்களை உடனுக்குடன் குணப்படுத்தும் ஆற்றல் அது.

இந்த செய்தி மெல்ல மெல்ல நகரம் முழுவதும் பரவிவிட்டது. தமக்கு தேவியின் அருள் கிட்டியிருப்பதாகவும் அந்த சித்தியின் மூலம் தான் தம்முடைய ரத்தத்தில் மருந்துக்குணம் இருப்பதாகவும் துறவி தெரிவித்தார். அன்று முதல்,துறவியின் இருப்பிடத்தில் பொன்,வெள்ளிக்காசுகளும் பழங்களும் மலர்களும் பூஜைக்கான பொருள்களும் வந்து குவியலாயின.

ஏகப்பட்ட பெற்றோர்கள், நோய்வாய்ப்பட்ட தமது குழந்தைகளுடன் துறவியின் ஆசிரமத்தை முற்றுகையிடலானார்கள். நோயால் வருந்திய சின்னஞ்சிறு குழந்தைகளின் திரளான கூட்டத்தைக் கண்ட துறவியின் மனதில் கருணை பொங்கித் ததும்பியது.

மறுகணமே துறவி தம் ஆள்காட்டி விரலொன்றைத் திரிசூலத்தில் அழுத்தினார். குபுகுபுவென்று ரத்தம் வெளிப்பட்டது.ரத்தத் துளிகளின் மகிமையால் குழந்தைகளின் நிலைமையில் அப்போதே முன்னேற்றம் ஏற்பட்டது. பெற்றோர்களின் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கியது.

சித்தர்களின் பெருமை

துறவியின் பத்து விரல்களிலிருந்தும் ரத்தம் வெளியேறி முடிந்தாயிற்று. அதற்கு மேல் ரத்தம் நின்று விட்டது. ஆயினும், நோயாளிகளின் வருகைக்கு ஒரு முடிவு இருப்பதாகவே தெரியவில்லை. அக்கம் பக்கத்து ஊரின் மக்களும் அங்கே வரத் தொடங்கி விட்டார்கள்.

காரணம், கடைசி கட்டம் முழுக் கதையையும் விளக்கி விடுகிறது. அகதிகள் சிலர் இந்த விவரம் தங்களுக்கு எட்டியதும் அந்தத் துறவியின் குடிசைக்கு விரைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி – ஐயகோ!கால்கள் ஒரு மரக்கிளையில் கட்டப்பட்டு துறவி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

திரிசூலத்தால் குத்தப்பட்டு உடல் முழுவதும் சல்லடைக்கண்களாகி வெளுத்துப் போய் விட்டிருக்கிறது. துறவியின் அருகில், கையில் ஒரு நோயாளிக் குழந்தையுடன் நின்ற ஒரு தம்பதியர் சுவாமி! ஒரு துளி ரத்தம் மட்டும் எங்களுக்குத் தாருங்கள்.

எங்களுடைய ஒரே குழந்தை இது. தங்கள் சந்நிதியிலிருந்து நம்பிக்கை இழந்து திரும்ப வேண்டிய அளவுக்கு எங்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துர்பாக்கியம்? என்றுமன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய மனிதர்கள், அந்த நகரத்தின் அந்நாளைய மனிதர்களிலிருந்து வேறுபட்டுவிட்டனரா? இல்லை! என்பது தான், மனிதனின் இயற்கை குணங்களை ஆராய்ந்தறிந்த உளவியல் அறிஞர்களின் கூற்று!

இந்த சம்பவத்துக்குப் பிறகு இறைவனும் இறைவியும் கொஞ்சம் உஷாராகி விட்டனர். இந்தத் துறவியைப் போன்ற வரம் பெற்ற சித்தர்கள் இன்று கூட இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால், அவர்கள் இப்படி வெளிப்படையாக மனிதர்களிடையே செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சிந்தியுங்கள் ஏன் என்று

“தாரமும் குருவும் தலை விதிப்படி” 

 மூலிகையைச் சொன்னாலும், முக்தி பற்றிச் சொன்னாலும், முத்தமிழில் குழைத்தே சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

சித்தர்கள் சித்தத் தெளிவு மட்டுமல்ல, செந்தமிழ்த் தெளிவும் கொண்டவர்கள்!

Leave a Reply

Your email address will not be published.