சர்க்கரைநோயால் அரிப்பு,வறட்சி (Skin diseases)
சர்க்கரை நோயால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் (Skin diseases by effects of diabetes)
கொப்பளம்
கறுப்புத் திட்டு
காயங்கள்
மருக்கள்
அதீத வறட்சி
நீரிழிவுநோய் உள்ளவர்கள் தோலினை பராமரிக்கும் முறை (Skincare for Diabetes)
சர்க்கரைநோய் உள்ளவர்கள் தோலினை பராமரிப்பது மிக அவசியம். இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் போது தோலில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகளின் பெருக்கம் அதிகரிக்கிறது.
தோல் பகுதிக்கு செல்லும் நோய் எதிர்க்கும் செல்களின் அளவும் குறைவதால், உடலைப்பாதிக்கும் பாக்டீரியாவை தடுத்து நிறுத்த முடிவதில்லை.
அதிகளவு குளுக்கோஸ் இருக்கும் போது உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, தோல் வறட்சி (Skin Diseases) மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.
பொதுவாக சருமத்தைப் பராமரிக்கும் முறைகள் (Skin care to reduce Skin Diseases)
-
எப்போதும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
-
வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, அதிக சூடுள்ள நீரில் குளிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
-
குளித்த பின் உடல் பாகங்களை, குறிப்பாக இடுக்குகள் மற்றும் மடிப்புகளைசுத்தமான துணியால் நன்கு துடைக்கவேண்டும்.
-
வறண்ட சருமத்தை சொறிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், வறண்ட சருமத்தை சொறியும் போது ஏற்படும் காயத்தின் மூலம், பாக்டீரியாக்கள் உள்நுழைந்து நோயினை ஏற்படுத்தும்.
-
தோலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்
- தோல் வறட்சி (Dry skin)யைக் கட்டுப்படுத்த தோலுக்குத் தேங்காய் எண்ணெய்,ஒலிவ் எண்ணெய் பூச வேண்டும்.
நீரிழிவுநோயினைக் கையாளுதல் (Control Diabetes to Reduce Skin Diseases)
உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தனி நபர் சுத்தம் சுகாதாரம் மற்றும் மருத்துவரின் அறிவுரைப்படி மாத்திரை எடுத்துக் கொள்வது சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுத்து நிறுத்தும்.
உடற்பயிற்சி செய்வது இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது மற்றும் உடலில் உள்ள செல்கள் குளுக்கோஸ்-யை உபயோகிப்பதனை அதிகப்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகள் தினசரி காலை 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது அல்லது 1 மணி நேர நடைபயிற்சி செய்யும் போது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.
இது நீரழிவு நோயாளியின்உணவு அவரது உடற்தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். அதேவளை ,மாவு பொருட்கள்,சர்க்கரை உள்ளடக்கிய தானியம் போன்றவற்றின் அளவை மிகக்குறைவான அளவே சேர்க்க வேண்டும்.
சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்தால் இந்த அரிப்பு,தோல் காய்ந்து போவது (Skin Diseases) ஏற்படாது. சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைப்பது எப்படி ?
-
சர்க்கரைச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகம் உள்ளதாகவும் உள்ள உணவு மட்டுமே சரியான நேரப்படி உண்ணவேண்டும்.(அதாவது மரக்கறிகள்,கீரைகள்,பருப்புகள்,அளவுடன் பழங்கள்)
-
போதிய நீர் அருந்தவேண்டும்.
-
தினசரி உடற்பயிற்சி அவசியம்.
-
மருத்துவர் அறிவுறுத்திய மருந்துகளைத் தவறாமல் சரியான நேரத்திற்கு சாப்பிடவேண்டும்.