சிறுதானியங்களை பயன்படுத்துவதால் என்ன பயன்கள்?(Benefits of using small grains)

இயற்கை வாழ்வியல் உணவு முறைகளில் சிறுதானியங்கள் (Small grains) மிக முக்கியத்துவம் பெறுகின்றன. சிறுதானியங்கள் குறித்துப் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம்.

கேழ்வரகு, கம்பு, நாட்டுச்சோளம் வரகு, திணை, சாமை, குதிரைவாலி மற்றும் பனிவரகு முதலான பல  சிறுதானிய வகைககள் (Small grains) உள்ளன. இவை அனைத்தும் நமது தாத்தா பாட்டியினரின் இளம்பருவம் வரை, அவர்களின் முக்கிய உணவாக இருந்தது.

பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டதும், மெதுமெதுவாக சிறுதானியங்கள் (Small grains) உற்பத்தி ஓரம் கட்டப்பட்டு, வெள்ளை அரிசி மற்றும் கோதுமைகளின் உற்பத்தி, இன்றைக்கு தவிர்க்க முடியாத அளவுக்கு ஆக்கிரமித்து விட்டது.

இவ்வாறாக மக்கள், ஆரோக்கியம் தருகின்ற, விலை மலிவான, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மற்றும் தமது வசிப்பிடத்திற்கு அருகிலேயே விளையக்கூடிய சிறுதானியங்களை முழுவதுமாக மறந்து விட்டனர்.

ஒரு முக்கியமான விசயத்தை, நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். உலகம் முழுவதிலும் வெவ்வேறு வகையான சிறுதானியங்கள் விளைகின்றன. எனவே உங்கள் பகுதிகளில் விளையும் வகைகளை உண்பதே சிறந்தது.

வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதை உடனடியாக முற்றாக விடுவது சிரமமே.

சிறுதானியங்களை பயன்படுத்துவதால் என்ன பயன்கள்?,Benefits of using small grains,annaimadi.com,அன்னைமடி,  சிறுதானியங்கள் என்றால் என்ன?what is Small grains,ஏன் சிறுதானியங்களை உண்ண வேண்டும்?,Why Eat Small Grains?,millets

எனவே  சிறுதானியங்களை (Small grains) ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வரலாம். போகப்போக முற்றாக நிறுத்திவிடுவது சிறந்தது.ஆரோக்கியமானது. ஏனெனில் வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதில் எந்த விதமான நன்மையும் இல்லை.

புதிதாக சிறுதானியங்கள் (Small grains) வாங்குபவர்கள், பட்டைத் தீட்டப்படாத தானியங்களை மட்டுமே வாங்கவும். இது எனது பணிவான வேண்டுகோள். இத்தகைய பட்டைத் தீட்டப்பட்ட சிறுதானியங்கள் பெரிய கடைகள் மற்றும் ஒரு சில இயற்கை அங்காடிகளிலும் விற்கப்படுகிறது.

 பட்டை தீட்டப்பட்ட தானியங்களை உண்பது, அதே போன்ற வெள்ளை அரிசி சாப்பிடுவதற்கு சமம். எந்த பலனும் கிடைக்காது.

ஏன் சிறுதானியங்களை உண்ண வேண்டும்?(Why Eat Small Grains?

ஊட்டச்சத்துக்கள்

இவை அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. குளுட்டன் தன்மை அற்றவை. அமிலத்தன்மை அற்றவை. இவை எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை.

இவற்றில், வெறும் கலோரிகளை மட்டும் அள்ளிக் கொடுக்கும் சர்க்கரை சத்து மட்டும் அல்லாது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன.

பட்டைதீட்டப்பட்ட அரிசியைப் போல் அல்லாமல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் சீராக வெளியிடுவதால், சர்க்கரை நோய் உண்டாவதை குறைக்கிறது.

அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதைக் காட்டிலும், பத்து மடங்கு அதிக அளவு கல்சியம் ராகியில் உள்ளது.சிறுதானியங்களை பயன்படுத்துவதால் என்ன பயன்கள்?,Benefits of using small grains,annaimadi.com,அன்னைமடி,  சிறுதானியங்கள் என்றால் என்ன?what is Small grains,ஏன் சிறுதானியங்களை உண்ண வேண்டும்?,Why Eat Small Grains?,millets

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு

சாகுபடிக்கு மிக குறைந்த நீராதாரமே போதுமானது. வறண்ட நிலங்களில் வளரக்கூடியது. விளைவிக்க எவ்விதமான பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் தேவையில்லை. எனவே மண்ணும், உண்ணும் உடலும் மலடாவதில்லை.

பலவிதமான சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மண்ணின் பன்மயத்தன்மை (Bio-diversity) பாதுகாக்கப்படும். அரிசி, கோதுமை போன்ற பயிர்களை வலுக்கட்டாயமாக எல்லாவிதமான நிலத்திலும், காலநிலையிலும் பயிரிடத் தேவையில்லை.

சிறுதானியங்களை பயன்படுத்துவதால் என்ன பயன்கள்?

அதிக அளவு விற்றமின் ‘பி’

சிறுதானியங்களில் உள்ள விற்றமின் ‘பி’ கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் திறமையாக உடைத்து அதனை ஆற்றலாக மாற்றுகின்றது.

மேலும் நல்ல கொழுப்பு எனப்படும் உயரடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பின் அளவினை இரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. இது இரத்த நாளங்களின் தடிப்பு மற்றும் இரத்தக் கசிவு  ஏற்படுவதிலிருந்தும் இதயத்தைப் பாதுகாக்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைத்தல்

தமனிகளில் உள்ள‌ உட்சுவரினை தளர்த்துவதற்கு சிறுதானியங்களில் உள்ள‌ மக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகின்றது.

மேலும் இது மூச்சுத்தடை நோய் ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுவதன் அளவினைக் குறைக்கின்றது.

சிறுதானியங்களை பயன்படுத்துவதால் என்ன பயன்கள்?,Benefits of using small grains,annaimadi.com,அன்னைமடி,  சிறுதானியங்கள் என்றால் என்ன?what is Small grains,ஏன் சிறுதானியங்களை உண்ண வேண்டும்?,Why Eat Small Grains?,millets

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது

சிறுதானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதனால் செரிமானத்திற்கான செயல்முறைகள் குறைந்த அளவில் மெதுவாக நடைபெறுகின்றது.

இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை ஒரு நிலையான விகிதத்தில் வைத்துக் கொள்ள உதவுகிறது. சிறுதானியங்கள் நீரிழிவுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.

மேலும் நீரிழிவு அல்லாத சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதிலும் குறிப்பாக வகை-2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

சிறுதானியங்கள் அதிகப் புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் குறைபாட்டைக் குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது.

தூக்கமின்மையால் அல்லல்படுபவர்கள் இரவில் சிறுதானியங்களால் செய்த உணவுகளை உண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *