சமூக ஊடகங்களை எப்படி பயன்படுத்துவது (How to use social media)

பேஸ்புக் (Facebook) இன்று உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக ஊடகமாக (Social media) காணப்படுகின்றது.

ஆனால்  பேஸ்புக்கிற்கு மட்டுமல்ல. டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உட்பட நீங்கள் பயன்படுத்தும் எந்த சமூக ஊடகத்திலும் (Social media) எதையும் இடுகையிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பு இந்த விடயங்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் மிகவும் தனிப்பட்ட தகவல்களை பதிவது நல்லதல்ல ( Don’t Posting personal information on social media)

சிலர் மிகவும் முக்கியமான தரவுகளையும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் கூட பேஸ்புக்கில் போஸ்ட் செய்வதை காண்கிறோம். அவர்கள் தங்கள் குடும்ப பிரச்சினைகளைக் கூட சில நேரங்களில் பேஸ்புக்கில் இடுகிறார்கள்.

இன்னும் சிலர் தங்கள் மனைவியுடன் அல்லது கணவருடன் பேசவேண்டிய விடயங்களைக்கூட பேஸ்புக்கில் பதிவில் எழுதுகிறார்கள்.

சிலர் தங்கள் கணவன், மனைவி அல்லது பெற்றோரின் தவறுகளை சமூக ஊடகங்களில் போஸ்ட் மூலம் கூறும் போக்கும் காணப்படுகின்றது.

easy use og social media

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீங்கு விளைவிக்கும் தகவல்களை பேஸ்புக் அல்லது பிற சமூக ஊடகங்களில் (Social media) பகிர்வதன் மூலம் மூன்றாம் தரப்பிற்கு தெரியப்படுத்துகின்றீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதனை தவிர்ப்பது உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவருக்கும் பாதுகாப்பானது.

தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்தல் (Keeping personal information secure)

உங்களது வீடு எங்கே இருக்கின்றது, வீட்டு முகவரி, தெலைபேசி இலக்கம், வங்கி கணக்கு இலக்கம் போன்ற முக்கியமான தனிப்பட்ட விடயங்களை சமூக ஊடகங்களின் நட்பு பட்டியலில் உள்ளோருடன் பகிர்ந்து கொள்வடு தவறானது.

குறிப்பாக, பலரும் தவறுதலாகவோ அல்லது தெரியாமலோ தமது தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை, அனைவரும் பார்க்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவு செய்திருப்பதை நீங்களும் கண்டிருப்பீர்கள்.

பாதுகாப்பு குறித்து சிந்தித்தல் ( Safety use of  Social media)  சமூக ஊடகங்களை கவனத்துடன் பயன்படுத்த,Proper use of social media,annaimadi.com, safety use of social media,social media, online life,அன்னைமடி,சமூக ஊடகங்களை சரியாக பயன்படுத்துவோம்,facebook use, சரியான பேஸ்புக் பாவனை,proper use of facebook,twitter,whats app,

வயது வித்தியாசமின்றி பேஸ்புக் பயன்படுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது. திகில் திருடர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் நபர்களும் பேஸ்புக்கிற்கு வருகிறார்கள்.

அதை நாம் தடுக்க முடியாது. ஆனால் குறைந்தபட்சம் நாம் சமூக ஊடகங்களில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் அத்தகைய நபர்களுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது.

சிலர் பேஸ்புக்கில் தனது வீட்டு தகவல்களையே பதிவிடுகிறார்கள். உதாரணமாக “இன்று யாரும் வீட்டில் இல்லை. நான் மட்டுமே இருக்கிறேன்” என்று சற்று சந்தோஷத்திற்கு நண்பர்களிடம் தெரிவிப்பது போல பதிவிடுகிறார்கள்.

ஆனால் அது சென்றடைவது அவரது நண்பர்களுக்கு மட்டுமல்ல, போலி பேஸ்புக் பக்கங்களுக்கு பின் மறைந்திருக்கும் தவறான நபருக்கும் போய் சேரும் என்பதி  உணர வேண்டும்.

குழந்தைகளின் விபரங்களையும் சில புகைப்படங்களையும் இடுகையிடுவது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கலாம். நீங்கள் பேஸ்புக்கில் இடும் ஒரு சிறிய தகவலிலிருந்து கூட யாரும் வீட்டில் இல்லை என்பதைக் கண்டறிந்து யாராவது உள்ளே வந்து திருடலாம். சில திருடர்கள் எந்த ஒரு நிலைக்கும் செல்வார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போது உங்களது தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்கள் எல்லோரும் பார்க்கும் வகையில் பதிவு செய்யப்பட்டிருப்பதாயின், அவற்றை நீங்கள் மாத்திரம் பார்க்கும் வகையில் சரி செய்து கொள்வது சிறந்ததாகும்.

அத்தோடு, உங்களது profile இற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு அமைப்புக்களை (Security Setting) சரிசெய்து கொள்ளுங்கள்.

குறிப்பாக,

  • வேறு நபர்களின் பதிவுகளிலும், புகைப்படங்களிலும் உங்களை ‘tag’ செய்வதை கட்டுப்படுத்தல்
  • உங்களது காலக்கோட்டில் (Time line) வேறு எவரும் எதனையும் பதிவு செய்ய முடியாதவாறு சரி செய்தல்
  • தெரியாதவர்கள் அனுப்பும் செய்திகளை (message)  களை ‘Spam Message’ களாக ஆக்குதல்

போன்ற சின்னச் சின்ன விடயங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலமாக, பெருமளவிலான தலையிடிகளைத் தவிர்த்து நன்றாக ஒன்லைனை(Online) பயன்படுத்தலாம்.

சமூக ஊடகங்களை கவனத்துடன் பயன்படுத்த,Proper use of social media,annaimadi.com, safety use of social media,social media, online life,அன்னைமடி,சமூக ஊடகங்களை சரியாக பயன்படுத்துவோம்,facebook use, சரியான பேஸ்புக் பாவனை,proper use of facebook,twitter,whats app,

மற்றவரின் தனியுரிமைக்கு மதிப்பளித்தல்

நம் எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கின்றது. அதேபோன்று, நாம் எவருக்கும் சொல்லத் தேவையில்லாத விடயங்களும் இருக்கின்றன.

சிலவேளை, வேறொருவரின் தனிப்பட்ட விவகாரமொன்றை நீங்கள் அறிந்து கொண்டு, அதனை சமூக ஊடகங்கள் வழியாக வேறு நபர்களுடன் பகிர்ந்துகொள்வது மிகவும் மோசமான செயலாக கருதப்படும்.

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நடைபெறும் ஒரு நட்பு ரீதியான சந்திப்பில், உங்கள் சக பணியாளர் ஒருவர், அந்த இடத்தில் மிகவும் சுவாரஸ்யமாக ஒரு கேலியான நிகழ்ச்சியை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

நீங்கள் அந்த நிகழ்வை புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்கிறீர்கள். அந்த நிகழ்வுக்கு அங்கு வந்திருந்தோர் பற்றிய பூரண நம்பிக்கை காரணமாகவே, அந்த நபர் அந்த இடத்தில், அந்த நிகழ்ச்சியை மேற்கொள்கிறார்.

ஆனால், நீங்கள் புகைப்படத்தை அல்லது வீடியோவை சமூக ஊடகங்கள் வழியாக வெளியிட்டால் என்ன நடக்கும்?. எந்தவொரு பொறுப்புமின்றி மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வு குறித்த விடயங்களை சமூக ஊடகங்களில் பேசித் திரியும் நபர்கள் சமூக ஊடகங்களில் நிறைந்திருப்பது நாமும் நீங்களும் அறிந்த ஒரு உண்மையாகும்.

சமூக ஊடகங்கள் வழியாக ஒரு வீடியோ மிக வேகமாகப் பரவினால், சம்பந்தப்பட்ட நபர் நிச்சயமாக சமூகத்தில் மிகவும் அசெளகரியத்திற்கு  உட்படுவார்.

எமக்கு முழு உலகையும் திருத்த முடியாது. ஆனாலும், நம்மை நம்மால் திருத்திக்கொள்ள முடியும் என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள்.

பிரபலமான மற்றும் பிரபலமற்ற நபர்களைப் பற்றி பல பேஸ்புக் பதிவுகள் உள்ளன. அவ்வாறான பதிவுகளில் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் தவறுகள், அவர்களின் தனிப்பட்ட உறவுகள், அவர்கள் செய்த மோசடிகள் மற்றும் ஊழல் பற்றி பகிரப்படுகின்றன.

அந்த விபரங்களில் சிலவற்றை படிக்கும் போது, ​​அந்த நபர்களைப் பற்றி ஏற்படும் தவறான எண்ணங்கள் மூலம் கோபப்படலாம்.

ஆனால் இதுபோன்ற ஒரு விடயத்தில் உங்கள் கருத்தை பதிவு செய்வதற்கு முன்பு அல்லது யாரோ எழுதிய பதிவை மீண்டும் பகிர்வதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள்.

ஏனென்றால் நீங்கள் வேறொருவரின் வலையில் விழக்கூடும். எனவே மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது முடிந்தவரை கவனமாக இருங்கள்.

மேலும், மற்றவர்களின் அனுமதியின்றி புகைப்படங்களைப் பகிர்வது சரியானாதல்ல. இத்தகைய புகைப்படங்கள் வேடிக்கையானவையாக இருந்தாலும், அவை புகைப்படம் (Photo) எடுக்கப்பட்ட நபருக்கு சங்கடத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும்.

எனவே ஒருவரை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமூக ஊடகங்களின் மூலம் தாக்குவதற்கு முன்னர் ஒன்றிற்கு இருதடவைகள் சிந்திக்கவும்.

சில நேரங்களில், இவை வேடிக்கையான மற்றும் எளிமையான விடயமாக தோன்றினாலும் இது மிகவும் ஆபத்தானது.

சமூக ஊடகங்களை கவனத்துடன் பயன்படுத்த,Proper use of social media,annaimadi.com, safety use of social media,social media, online life,அன்னைமடி,சமூக ஊடகங்களை சரியாக பயன்படுத்துவோம்,facebook use, சரியான பேஸ்புக் பாவனை,proper use of facebook,twitter,whats app,

தொழில் வாழ்க்கையைப் பற்றியும் சிந்தியுங்கள்

“தன் வாய் தன் சொல் என்பது போல”அவரவர் யோசனைகளும் அவரவருக்ககே சொந்தம். ஆனால் அவற்றை சமூகத்தில் பயன்படுத்தும் போது எவ்வளவு பொருத்தமானது மற்றும் அவற்றை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் போது ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் இருமுறை சிந்திக்க வேண்டும்.

இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, ஒருவர் பகிர்ந்துகொள்ளும் ஏதேனும் தவறான பதிவு மூலம் தொழில் ரீதியாக தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் சேதமாகும்.

பெரும்பாலான நேரங்களில் நீங்கள் உங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் பெயரை உங்கள் சுயவிபரத்தின் கீழ் பதிவிடுகிறீர்கள். பெரும்பாலான நேரங்களில் உங்கள் முதலாளி உங்கள் சமூக ஊடக கணக்கையும் பார்ப்பார்.

எனவே இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் சமூக விரோத அல்லது சட்டவிரோதமான ஒன்றைப் பகிர்ந்து கொண்டால் அல்லது சமூக ஊடகங்களில் அநாகரீகமாக நடந்து கொண்டால் உங்கள் நிறுவனம் அதைப் பற்றி அறிந்திருக்கலாம்.

மேலும் உங்கள் வேலையைக்கூட இழக்க நேரிடும். பேஸ்புக் எமது தனிப்பட்ட பாவனை என்றாலும், பெரும்பாலான நிறுவனங்கள் அவற்றையும் பார்க்கின்றன. ஆகவே கவனமாக இருங்கள்.

இப்போது பல தனியார் கம்பனிகளும், தொழில்களுக்கு விண்ணப்பதாரிகளை இணைத்துக் கொள்ளும் போது, அவர்களின் சமூக ஊடக கணக்குகள் குறித்தும் கரிசனை செலுத்துகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? சிலவேளை, இதுவரையிலும் நீங்கள் அது குறித்து அறிந்திராதிருக்கலாம்.

சரி, மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய சரியான நேரம் இதுதான். ஒரு 10 நிமிடத்தை ஒதுக்கி, உங்களது சமூக ஊடக கணக்குகளின் காலக்கோட்டில் சற்று உலா வாருங்கள்.

நீங்கள் பதிந்திருக்கின்ற பதிவுகளும், புகைப்படங்களும் உங்களது பிம்பத்தை உயர்த்துவனவாக இருக்கின்றனவா? அல்லது உங்கள் பிம்பத்தை தாழ்த்துவனவாக இருக்கின்றனவா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

அதோடு, நீங்கள் பகிர்ந்திருக்கின்ற விடயங்களை அடிப்படையாக வைத்து, ஒருவர் உங்களை, உங்களது ஆளுமையை எவ்வாறு மட்டிடுவார் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

எளிமையாகச் சொல்வதென்றால்… உங்களது புகைப்படம் (Profile picture), அட்டைப்படம் (cover picture) முதல் நீங்கள் பகிர்கின்ற புகைப்படங்கள் மற்றும் பதிகின்ற கருத்துக்கள் அனைத்தையும் உங்கள் பிம்பத்தை உயர்த்தக்கூடியனவாகவே பதியுங்கள்.

இன்று சமூக ஊடகங்கள் என்பவை, ஒருவரின் ஆளுமையை மதிப்பீடு செய்கின்ற இன்னுமொரு அளவுகோல் என்பதை நன்கு நினைவில் வைத்துக செயற்படுங்கள்.

நட்பு பட்டியலில் உள்ள அனைவரும் நண்பர்கள் அல்ல

நமது சமூக ஊடக கணக்குகளில் பெருமளவு நண்பர்கள் (Friends) உள்ளனர். பெருமளவு ஓன்லைன் நண்பர்கள் இருப்பதில் நன்மை உள்ளது போன்றே, கெடுதியும் உள்ளது.

நாம் நட்பு பட்டியலில் (Friend List) இணைத்துக் கொள்ளும் அனைவரும், நமது நண்பர்களா? என்பது குறித்து நாம் எப்போதும் சிந்திக்க வேண்டும்.

நாம் பகிரும் (Share) அனைத்தையும் நமது நண்பர்கள் பார்க்கவும், அதற்கு எதிர்வினையாற்றவும் கூடியவாறே சமூக ஊடகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எனவே, வாழ்வின் முக்கிய சம்பவங்கள், புகைப்படங்கள், அவ்வப்போது தோன்றுகின்ற கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிடும் போது, நம் நட்பு பட்டியலில் உள்ள நாம் அறிந்த, நாம் அறியாத அனைவருக்கும் அதனைப் பார்க்க முடியும் என்பதை நாம் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, நட்பு பட்டியலில் எவரையேனும் இணைப்பதாயின், நன்கு யோசித்ததன் பின்னரே இணைக்க வேண்டும். அத்தோடு, ஏற்கனவே நல்ல நண்பராக இருந்தபோதும், உங்களுக்கு தொந்தரவையும், உளரீதியான நெருக்குதலையும் எவரேனும் ஏற்படுத்துவராயின் அவர்களை தடை (block ) செய்துவிட தயங்க வேண்டாம்.

அதோடு அதன் நுகர்வு அமைப்புக்களை ( Settings ) உங்களுக்கு ஏற்றவாறு  மாற்றி வைத்தல் பாதுகாப்பானது .

சமூக வலைத்தளங்களில் (Social media) உபயோகமானவற்றை பதிவுசெய்தல்

annaimadi.com, , online life,அன்னைமடி,,facebook use, சரியான பேஸ்புக் பாவனை,proper use of facebook,twitter,whats app

மக்கள் அவசியமானவற்றைத்தான் உலகத்தோடு பகிர்ந்துகொள்கிறார்களா? என்ற கேள்வி பேஸ்புக், டுவிட்டர், Google+  போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது நம்மில் பலருக்கும் எழுகின்றது.

இங்கு ஒரு விடயம் தெளிவானதாகும். அதாவது, இணையத்தில் ஏனையோருடன் எதனைப் பகிர்ந்துகொள்கிறோம்? எதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்து பலருக்கும் தெளிவில்லை.

இதில் உள்ள அபாயகரமான விடயம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

நாம் நமது காலக்கோட்டில் (timeline) வெளியிடும் எதையும், நமது நட்புப் பட்டியலிலுள்ள எவரும், பகிர அல்லது மீள்பதிவுசெய்ய  முடியும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்!, நீங்கள் மிகவும் உணர்ச்சி வேகத்தில் இருக்கும் நேரத்தில், அந்த உணர்ச்சி வேகத்தை வெளியிடுவதற்காக, வெறுப்பைத் தூண்டும் ஒரு கருத்தை, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பதிகிறீர்கள்.

அந்தக் கருத்தை இன்னுமொருவர் பகிர்ந்தால், நீங்கள் கனவிலேனும் நினைத்திராத அளவுக்கு அது பரவிச் செல்லலாம்.

அதேபோன்று, இணைய வெளியின் இயல்பைப் புரிந்துகொள்ளாமல், பலரும் பல கருத்துக்களை வெளியிடுவதை நாம் காண்கிறோம். இந்தக் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம், சமூகத்துக்கு ஏதேனும் நன்மையை அவர் நாடியிருக்கலாம்.

ஆனாலும், அவர்கள் சமூகத்தில் கோமாளிகளாக பரிணமிக்கின்றனர். இது மிகவும் துரதிஷ்டவசமான ஒரு நிலையாயினும், இந்த உலகம் அவ்வாறு தான் இயங்குகின்றது. எனவே, அவசியமானவற்றை மட்டும் உலகத்தாருடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்பதே எமது பரிந்துரையாகும்.

சமூக வலைத்தளங்களில் (Social media) பொய்யான பதிவுகள்/ஏமாற்றுவேலைகள்

செய்திகளை மாத்திரமன்றி அறிவார்ந்த விடயங்களை, மகிழ்ச்சியூட்டும் விடயங்களை பெற்றுக்கொள்ள, எம்மை புத்துணர்வாக்க என பல விடயங்களுக்காக சமூக வலைத்தளங்களை (Social media) பயன்படுத்துகின்றோம். அதற்கு சந்தாவும்  செலுத்துகிறோம்.

ஆனால் இந்த நாட்களில் பல வலைத்தளங்கள் மற்றும் செய்தி தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் அனைத்தையும் நம்பமுடியுமா என்றால் அது கேள்விக்குறியானதாகும்.

ஆகவே, நாம் வாசித்த ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்பினால், முதலில் அது உண்மையா என ஆராய்ந்து அதன்பின்னர் பகிருங்கள்.

சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு கருத்தியல்களை உருவாக்குதல், அவற்றை வளர்த்தல், தமக்கு தேவையானவற்றை மக்கள்மயப்படுத்தல் போன்ற பல விடயங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்பது, இப்போது உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தியல்கள் அரசியல், மதம், கலாசாரம் அல்லது வேறு எந்தத் துறைசார்ந்ததாகவும் இருக்கலாம்.

2011 ஆம் ஆண்டு மத்திய கிழக்கெங்கும் பரவிய அரபு வசந்தம், 2014 ஆம் ஆண்டு யுக்ரேனில் மேற்கொள்ளப்பட்ட அரச விரோத போராட்டம் மற்றும் கிளர்ச்சி போன்றவை, சமூக ஊடகங்கள் மூலம் சமூகத்திலுள்ள அரசியல் கருத்தியல்களை மாற்றியமைத்த நிகழ்வுகளுக்கான சிறந்த உதாரணங்களாகும்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்தியல்கள் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை.

ஆனாலும், சில சந்தர்ப்பங்களில் அரசியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ. கலாசார ரீதியாகவோ சமூகங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்கி, அதன் மூலம் வேறு இலாபங்களை பெற்றுக்கொள்வதற்காக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதையும் நாம் காணலாம்.

இந்த விடயம் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சமூக ஊடகங்கள் மூலம் இப்போது மேலும் நடந்துகொண்டிருக்கும் விடயங்களில் ஒன்று தான் அறிவு சார்ந்த கொள்ளையாகும்.

யாரோ எழுதிய பதிவுகள், படைப்பு ரீதியான விடயங்கள் கூட பட்டப்பகலிலேயே திருடப்படுகின்றன. இதற்கு அறிவுத்திருட்டு என்ற பெயரும் உண்டு. அதாவது ஒருவரது படைப்பை அவருக்கே தெரியாமல் அவரது அனுமதியின்றி அதை தமக்கு சொந்தமாக்குகின்றனர்.

யதார்த்தத்தை உணர்ந்து வாழப்பழகுதல்

ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை உங்களது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டக்ரேம் கணக்குகளை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் இன்னுமொருவருடன் கதைக்கின்றபோது, உணவு உண்கின்றபோது உங்களது முழுமையான கவனத்தை அதில் செலுத்துங்கள்.

பெற்றோர், நெருங்கியோர், நண்பர்களுடன் பயணங்கள் செல்லும்போது அவர்களுடன் கதையுங்கள். சுற்றுச்சூழலை அனுபவியுங்கள். நீங்கள் விரும்பிய பாடல்களைப் பாடுங்கள்.

குடும்பத்தவர்களுடன் சந்தோசமாக இருப்பதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். இணையத்தில் இருப்பது போன்றே, நிஜ உலகிலும் வாழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.