சோபா இருக்கையும் முதுகுவலியும்(Sofa and back pain)
நாங்களாகவே முதுகுவலியை (Sofa and back pain) விலை கொடுத்து வாங்குகின்றோம்.தரையில் சுகாசனத்தில் அமர்வது தன உடல்நிலைக்கு முதுகுக்கு சிறந்தது.
கீழே உட்காருவது நாகரிககுறைவு என கருதி ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா, சேர்களை வாங்கி முதுகுவலி, மூட்டுவலியை விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம்.
சோபா, கதிரையில் நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் முதலில் வருவது கால் மரத்துபோன உணர்வு. அடுத்து பின்புற வலி.
சோபாவில் உட்காருவதால் பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது. இது தான் முதுகுவலி, மூட்டுவலி (Sofa and back pain) என அனைத்துக்கும் காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம் தான்.
அதற்கு முன் தரையில் சம்மணம் போட்டு தான் எப்போதும் உட்கார்வோம்.அப்படி அமர்ந்து தான் உணவையும் உண்பது வழக்கம். வீட்டுக்கு யாராவது வந்தால் “ஜமுக்காளத்தை விரி, பாயை விரி” என தான் முன்பு சொல்வார்கள்.
ஆனால் இப்போது நாற்காலி, சோபாவில் தான் அமர்கின்றோம்.
நாற்காலி, சோபாவில் ஏற்படும் விளைவுகள்
இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது.
முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுத்தன்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது.
இலங்கை ,இந்தியா, சீனா, ஜப்பான் என கிழகாசிய நாடுகள் எங்கிலும் யோகாசன நிலையான சுகாசனம் முறையில் தரையில் தான் உட்கார்ந்து எழுகிறார்கள்.
சோபா,கதிரைகளில் அமர்வது நாகரீகம், ஆடம்பரம் ச்டடுஸ் (Status) தற்போது அங்கேயும் குறைந்து வருகிறது.
செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பது தான்.
கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் வயதானவர்கள் கீழே விழுந்து கையை, காலை முறித்துக் கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள்.
காரணம் அவர்கள் வாழ்வதே தரையில் தான். கீழே படுத்து, உட்கார்ந்து எழும் அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும், எலும்புகளும் அத்தனை வலுவாகி விடுகின்றன.
ஆனால் சோபா, மெத்தையில் படுத்து பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரிக சமூக முதியவர்களுக்கு வயதானபின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் கீழே விழுவது தான்.
எலும்பு குறைபாட்டு நோய்கள் பலவும் சோபாவில் உட்கார்வதால் வருகின்றன என ஆய்வுகள் சொல்லுகின்றன. சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும், புழங்குவதும் நம் ஆயுளை கூட்டி, முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி பின்புறத்தையும், முதுகுத்தன்டையும், மூட்டையும் வலுவாக்குகின்றன.
அதனால் இதுநாள் வரை கீழே உட்கார்ந்தது இல்லை எனில் இனி உட்கார்ந்து பழங்குங்கள். அப்படி உட்கார்கையில் முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால் அவ்வப்போது கையை வைத்து கீழே அமுக்கி விடுங்கள். இது காலின் அடக்டர் தசைகளை பிளெக்சிபிள் ஆக்கி போஸ்ச்ரசை சரி செய்யும்.
நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம் தான். அதற்கு முன் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து தான் உண்போம், உட்கார்வோம்.
வீட்டுக்கு யாராவது வந்தால் “ஜமுக்காளத்தை விரி, பாயை விரி” என தான் முன்பு சொல்வார்கள்.

ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டுமெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது.அதாவது ,
கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல், தரையில் கையோ, காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு.
தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி, அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ, இருவரோ வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் நல்லதல்ல.உடற்பயிற்சிகளை அவசியம் நாளும் செய்ய வேண்டும்.