சூரியசக்தியால் உழைப்போம் சேமிப்போம் (Solar energy)

சூரிய சக்தி (Solar energy) உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. சூரியனில் இருந்து சக்தியினை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் மழை முகில் சூழ்ந்துள்ள நேரத்தில், குளிர்காலத்தில் சிறிதளவு சக்தியினையே பெற முடியும்.

மனிதகுலம் உபயோகிக்கும் பெட்ரோல், டீசல், நிலக்கரி ஆகிய புதைவடிவ எரிபொருட்களால், புவி அதிக அளவில் வெப்பமடைவது குறித்து, பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த உலக வெப்பமயமாவதால், கடல் மட்டம் உயர்வு, கடல் சீற்றம், புயல், சூறாவளி, வறட்சி, பஞ்சம் போன்ற பேரழிவை உலகம் சந்தித்து வருவதை கண்டும் கேட்டும் அனுபவித்து வருகின்றோம்.

இயற்கை அழிவிலிருந்து நமது பூமியை காப்பதற்கு  சிறந்த மாற்று வழி, சூரிய சக்தியே. ஏனெனில் , சூரிய சக்தியின் பயன்பாடு ,புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கான தேவையை குறைக்கிறது . எனவே இது இயற்கை வளங்களை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் உதவுகிறது.

இதன் காரணமாகவே, உலகம் முழுதும் பல்வேறு நாடுகள், சூரிய மின்சக்தியை அதிக அளவில் பயன்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

பூமிக் கிரகத்தின் கிட்டத்தட்ட எந்த புவியியல் புள்ளியும் சூரிய சக்தியைப் பயன்படுத்தலாம்.அன்னைமடி,சூரியசக்தி ,புதிய தொழில் ,earn money,annaimadi.com,solar energy, using solar energy,easy way to save money,idea to earn money,idea to new work

போடோவொல்டய்க்ஸ் என அழைக்கப்படும் சூரியக் கலங்கள் சூரிய ஒளியினை நேரடியாக மின்சாரமாக மாற்றும் இலத்திரனியல் சாதனங்களாகும்.

நவீன சூரியக் கலங்கள், இன்று அதிகமான மக்களினால் அடையாளம் காணக்கூடியதாக வீடுகளிலும் கணிப்பான்களிலும் பொருத்தப்பட்டுள்ள பெனல்களில் காணப்படுகின்றன.

சூரியக் கலங்கள் பொருத்தப்பட்ட பெனல்களை உற்பத்தி செய்யும் செலவு கடந்த தசாப்தங்களில் அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இக்காரணத்தினால் பயன்படுத்துவதற்கு ஈடுகொடுக்கக்கூடிய மின்சார வடிவமாக இது மாறியுள்ளது.

இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் சகல புவியியல் பிரதேசங்களிலும்  கணிசமான அளவு சூரியக் கதிர்வீச்சுக் கிடைக்கின்றது.

மலைப்பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் தாழ்நிலப் பிரதேசங்களில் கிடைக்கும் சூரியக் கதிர்வீச்சேற்றத்தின் தீவிரம் உயர்வானது என்பது கவனத்திற்கொள்ளப்படுவதற்கான ஒரு விடயமாகும்.

இதற்கான காரணம் மலைப்பிரதேசங்களில் தொடர்ச்சியாக முகில்கள் காணப்படுவதும் மலைகளினால் உருவாகும் நிழலுமாகும்.

சிறந்த கூரைகளைக் கொண்டுள்ள பாரிய கைத்தொழில்களில் ஈடுபடுவோர் கூரை மேல் பொருத்தப்படும் சூரியக் கலங்களைப் பொருத்துவதன் மூலம் மின்சார செலவுகளை மிச்சப்படுத்தி அதிக இலாபத்தை பெறமுடியும்.

இந்தியா , இலங்கை போன்ற ஆசிய நாடுகளில்  சூரிய ஒளி மிகவும் ஏராளமாகவும் கிடைக்கிறது எனவே சோலார் பேனல்களைப் பயன்படுத்துவது ஒரு சாத்தியமான வழி.

சூரிய மின்கூரை அமைப்பு நிறுவப்பட்டு, சூரிய மின்சாரம் பயன்படுத்துவது நல்ல சேமிப்பாக அமையும்.

விவசாயமும் சூரியசக்தி (Sun energy) பயன்பாடுகளும்

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், நிலக்கரி விலை ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, சூரிய மின் தகடுகளுக்கு , 25 ஆண்டு ஆயுட்காலம் உள்ளதால், சூரிய மின்சாரத்திற்கான உற்பத்தி செலவு குறைவாகிறது.

அன்னைமடி,சூரியசக்தி ,புதிய தொழில் ,earn money,annaimadi.com,solar energy, using solar energy,easy way to save money,idea to earn money,idea to new work

மேலும் பராமரிப்பும் மிகக்குறைவு.

விவசாயத்திற்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் புதிதாக நிறுவுதல் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் இயந்திரங்களுக்கு சூரிய மின் சக்தி வழங்குதல் போன்றவற்ரின் மூலம் மின்சார செலவை மிச்சப்படுத்தலாம்.

விவசாயத்துடன் இணைந்து செயல்படும் பால் குளிர்வித்தல், குளிர்பதன கிடங்கு போன்றவற்றை சூரிய சக்தியைப் பயன்படுத்தலாம்.

விவசாயிகள், தங்களது பயிரிடாத புறம்போக்கு  நிலங்களில், சூரிய சக்தி மின்கலங்கள் அமைத்து, உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியங்களுக்கு விற்பதன் மூலம் மேலதிக வருவாயை ஈட்டமுடியும்.

சூரிய சக்தி மின்சாரம் (Sun energy)

மின்சாரம் (Solar Electric) தயார் செய்ய சூரிய சக்தியைப் பயன்படுத்துகையில் எரிபொருள் மிச்சமாகிறது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

மின்கட்டணம் கட்டத் தேவையில்லை. பராமரிப்புச் செலவும் மிகவும் குறைவு. ஒரு முறை முதலீடு செய்தால் போதும், ஆயுட்காலம் வரை வேறு பணச்செலவு இல்லை.

பொதுவாகக் கோடைக்காலத்தில் குளிர்சாதனப் பெட்டி, ஏசி இயந்திரம் போன்றவற்றால், நம் நாடுகளில் மின்சாரப் பயன்பாடு அதிமாக இருக்கும்.

சூரிய சக்தியைப் (Solar energy) பயன்படுத்தி மின்சாரம் சேமிக்கும் வழிமுறைகள்

அதிக செலவில்லாமல் சூரிய சக்தியைச் சேமித்து அதை நம் தேவைக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மின் பற்றாக்குறை உள்ள எந்த நேரத்திலும் கூட சூரியசக்தியைப்  (Solar energy) பயன்படுத்தி நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம். இதற்கென்று பல சோலார்  உபகரணங்கள் இன்று விற்பனைக்கு வந்து விட்டன.

சூரிய அடுப்பு (சோலார் குக்கர்)

சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் இல்லாமல் சோலார் குக்கரில் பொருட்களை வைத்து சமைத்துக் கொள்ளலாம். சுவையில் எந்த மாற்றமும் இருக்காது. மின்சாரமும் மிச்சமாகும்.

Click to Buy

சோலார்  (Solar energy) வாட்டர் ஹீட்டர்

மின்சாரத்தின் உபயோகமின்றி தண்ணீரை சுட வைத்துக் கொள்ளலாம். மழை,குளிர்காலங்களில் இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

சோலார் தெருவிளக்கு

சூரியன் இருக்கும் போது பேட்டரி சார்ஜ் ஆகிக் கொண்டு இரவு முழுவதும் எரியும் தன்மையுடையது.

சோலார் மேற்கூரை (Solar energy)

தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், மின் மோட்டார்கள் உட்பட அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் இதன் மூலம் இயங்க  வைக்கலாம். கரண்ட் பில் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது.

இதில் உள்ள பேட்டரி சூரிய சக்தி மூலமாக சார்ஜ் ஆகி இன்வெர்ட்டர் மூலமாக டி.சி. சப்ளையை ஏ.சி. சப்ளையாக மாற்றித் தரும் சாதனம். மின் பற்றாக்குறை ,மின்வெட்டு காலங்களில் மிகுந்த உபயோகமாக இருக்கும். உங்கள்  வீடுகளிலும்  நிறுவி கொள்ளலாம்.

சோலார் லாந்தர் விளக்கு (Solar energy)

இதை டார்ச் லைட் மாதிரி உபயோகித்துக் கொள்ளலாம். சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து இதனை சார்ஜ் செய்து கொண்டும் பயன்படுத்த முடியும்.

நம் வசதிக்குத் தக்கவாறு தேவையான பொருளை வாங்கிக் கொள்ளலாம். இவற்றைப் பயன்படுத்திட பழகிக் கொண்டால் மின்சாரம் மிச்சமாகும்.

அன்னைமடி,புதிய தொழில் ,earn money,annaimadi.com,idea to earn money,idea to new work

மின் தடை பற்றியோ, மின் கட்டணம் அதிகமாகி விட்டது என்றோ கவலைப்படத் தேவையில்லை. பணத்தை சிக்கனமாகப் பயன்படுத்தினால், குடும்பத்திற்கு எவ்வளவு நல்லதோ அதைப்போல மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தினால் நாட்டுக்கும் நாம் வாழும் பூமிக்கும் நல்லது.

கூரை மீதான சூரிய சக்தி எப்படி செயல்படுகிறது?

அன்னைமடி,சூரியசக்தி ,புதிய தொழில் ,earn money,annaimadi.com,solar energy, using solar energy,easy way to save money,idea to earn money,idea to new work

மின்தொடர் (grid) மூலம் இணைக்கப்பட்ட சூரிய சக்தி இரு திசையிலும்  பொருத்தப்பட்ட மீட்டர் மூலம் வீட்டில் எவ்வளவு மின்சாரம் தயாராகிறது, எவ்வளவு உபயோகப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.  அதிகமான மின்சாரம் உற்பத்தி ஆகும் போது, அது க்ரிட் மூலம் அனுப்பப்படுகிறது.

கம்பி மூலம் இணைக்கப்பட்ட அமைப்பில் மின்கலம் (battery) உபயோகம் இல்லாததால், சூரிய எரிசக்தி அமைக்க மூலதன முதலீடு மற்றும் இடம் ஆகியவை குறைவாகவே தேவைப்படுகிறது.

அன்னைமடி,சூரியசக்தி ,புதிய தொழில் ,earn money,annaimadi.com,solar energy, using solar energy,easy way to save money,idea to earn money,idea to new work

சூரிய மின்சக்தியின்  (Solar energy) நன்மைகள்

  • மின்சார செலவை மிச்சப்படுத்துவதோடு மேலதிகமாக வருமானம் ஈட்டலாம்.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தினம்தோறும் பயன்படுத்தல்
  • சோலார் பேனலின் பயன்பாடு காலம் 25 வருடம் என்பதால் விலையேற்றத்தின் தாக்கம் இருக்காது.
  • சுற்றுசூழல் பாதுகாப்பு.
  • உபரி மின்சாரத்தை வீணாக்காமல் க்ரிட்டுக்கு செலுத்தும் அமைப்பு.

சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம். இயற்கை நமக்கு வாரி வழங்கிய பரிசு தான் சூரியசக்தி; அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம்.

சூரியசக்தி (Solar energy)அதிகம் கிடைக்காத போதும் சரியாக பயன்படுத்தும் மேற்கத்தைய நாடுகள் (Sun energy)

அன்னைமடி, ,புதிய தொழில் ,earn money,annaimadi.com,

மிக சிறந்த சேமிப்பு  அல்லது உழைப்பு !!

வேலை இல்லாமல் தவிப்பவர்கள் இதை ஏன் ஒரு தொழிலாக மாற்றி கொள்ள முடியாது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *