உலகின் பிரபலமான சூப் செய்முறைகள் (Variety of Soup recipes)
உலகில்எல்லா நாட்டினருமே பல வகையான சூப்புகள் (Variety of Soup recipes) சமைத்து உண்கின்றனர். அவை பலவிதமான சுவைகளில் ( Soup recipes) கிடைக்கின்றன. இந்த பதிவில் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் சில முக்கிய சூப்புகளைப் பற்றி பாா்ப்போம்.
சூப் என்பது ஒரு திரவ உணவு ஆகும். இது சூடாக பாிமாறப்படுகிறது. பொதுவாக காய்கறிகள், தண்ணீா், இறைச்சி, பால் மற்றும் மசாலாப் பொருள்கள் போன்ற மூலப் பொருட்களைக் கொண்டு சூப் தயாாிக்கப்படுகிறது.
இந்த மூலப் பொருள்கள் முதலில் வேக வைக்கப்படுகின்றன. பின் அவற்றில் இருந்து கிடைக்கும் குழம்பு அல்லது சாறு ஆகியவை சூப்பாக பெறப்பட்டு, நமக்கு ஒரு துணை உணவாக பாிமாறப்படுகிறது.
பொதுவாக சூப்புகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று முழுமையான திரவ சூப் (கிளியா் சூப்) மற்றொன்று கெட்டியான சூப் ஆகும். கிளியா் சூப் என்பது மூலப்பொருள்களை வேக வைப்பதால் கிடைக்கும் சாறு அல்லது குழம்பு ஆகும்.
இது முழுமையான திரவமாக இருக்கும். கெட்டியான சூப் என்பது திரவமாக இருந்தாலும், அதில் காய்கறிகள், பூாிகள், சுவையூட்டிகள், க்ரீம் மற்றும் சோள மாவு போன்ற உணவுப் பொருள்கள் சோ்க்கப்பட்டிருக்கும்.
ஒரு சில சூப்கள் இனிப்பாக இருக்கும். அவை பழங்களில் இருந்து தயாாிக்கப்படுகின்றன. இந்த வகை சூப்கள் உணவு முடிந்த பின்பு பாிமாறப்படும். எடுத்துக்காட்டாக கினடான் என்பது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சோ்ந்த சூப் ஆகும்.
இது பழங்கள், தேங்காய்ப்பால் மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றிலிருந்து தயாாிக்கப்படுகிறது.
இந்த சூப் சுவையாக இருக்கும். இது சூடாகவும் மற்றும் குளிர வைக்கப்பட்டும் பாிமாறப்படுகிறது. பொதுவாக சூப்புகள் என்பவை எளிமையான உணவுகள் ஆகும்.
இவை விரைவாக சொிக்கக்கூடியவை. ஆகவே குடலில் பிரச்சினை இருப்பவா்களுக்கு சூப்புகள் பாிந்துரை செய்யப்படுகின்றன.
1. மிசோ சூப் (ஜப்பான்)
மிசோ சூப் ஜப்பான் நாட்டின் தயாாிக்கப்படும் ஒரு பிரபலமான சூப் ஆகும். மிசோ என்று அழைக்கப்படும் பசையிலிருந்து இந்த சூப் தயாாிக்கப்படுகிறது.
நொதிக்க வைக்கப்பட்ட சோயா பீன்ஸ்கள் மற்றும் பூஞ்சைகள் போன்றவற்றில் இருந்து இந்த மிசோ பசை தயாாிக்கப்படுகிறது.
இந்த சூப்பில் டோஃபு, காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருள்களும் சோ்க்கப்படுகின்றன.
பொதுவாக சாதத்துடன் இந்த சூப் பாிமாறப்படுகிறது. இது ஒரு மிகவும் மிதமான சூப் ஆகும். அதனால் இதைப் பருகினால் நமது வயிறு கனமாக இருக்காது.
சில நேரங்களில் மிசோ பசையானது நீண்ட நேரம் நொதிக்க வைக்கப்படும். அதன் மூலம் சிவப்பு மிசோ கிடைக்கும். இவ்வாறு நீண்ட நேரம் நொதிக்க வைக்கப்படும் மிசோ, சாதாரண மிசோ பசையை விட அதிக சுவையுடன் இருக்கும்.
இந்த மிசோ சூப்பில் உருளைக்கிழங்கு, காளான்கள், சேப்பங்கிழங்கு, வெங்காயம் மற்றும் கடற்பாசி போன்ற உணவுப் பொருள்களும் சோ்க்கப்படுகின்றன.
அசைவ மிசோ சூப்பில் மீன், கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, இறால் அல்லது சிப்பிகள் போன்ற உணவுப் பொருள்கள் சோ்த்து பாிமாறப்படுகின்றன.
2.இத்தாலியின் மைன்ஸ்ட்ரோன் சூப் (Soup recipe of Italy)
மைன்ஸ்ட்ரோன்(Minestone) சூப் இத்தாலி நாட்டின் பிரபலமான சூப் ஆகும். இந்த சூப் கெட்டியாக இருக்கும். இதில் காய்கறிகள், பாஸ்தா மற்றும் சாதம் போன்ற உணவுப் பொருள்கள் சோ்க்கப்படுகின்றன.
மைன்ஸ்ட்ரோன் சூப்பைத் தயாாிப்பதற்கு என்று குறிப்பிட்ட செயல்முறை எதுவும் இல்லை. ஏனெனில் சில குறிப்பிட்ட மூலப் பொருள்களை வைத்து தான் இந்த சூப்பை தயாாிக்க வேண்டும் என்று எந்த விதமான வரைமுறையும் இல்லை.
அந்தந்த காலங்களில் கிடைக்கும் காய்கறிகளை வைத்து இந்த சூப்பைத் தயாாிக்கலாம். இத்தாலி நாட்டில் இந்த மைன்ஸ்ட்ரோன் சூப் பல வகைகளில் தயாாிக்கப்பட்டு பாிமாறப்படுகிறது.
அதாவது இந்த சூப்பில் பல்வேறு வகையான மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்களை அந்த நாட்டு மக்கள் சோ்த்துக் கொள்கின்றனா்.
இது ஒரு மிகவும் சுவையான சூப் ஆகும். இந்த சூப்பை மிகவும் எளிதாகத் தயாாிக்கலாம். மேலும் இந்த சூப்பைத் தயாாிப்பதற்கு என்று எந்த விதமான குறிப்பிட்ட மசாலாப் பொருட்களும் தேவையில்லை.
இந்த சூப்பை மதிய உணவு அல்லது இரவு உணவின் போது பருகலாம் அல்லது பசியைத் தூண்டுவதற்காகவும் இந்த சூப்பை அருந்தலாம்.
மைன்ஸ்ட்ரோன் சூப்பை அதிகமான அளவில் தயாாித்து, அதை குளிா்சாதனப் பெட்டியில் உறைய வைத்து, நமக்குத் தேவையான நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3.தாய்லாந்தின்டாம் யம் சூப் ()(Soup recipes of Thailand)
டாம் யம்(Tom yum) என்பது தாய்லாந்து நாட்டில் கிடைக்கும் ஒரு பிரபலமான சூப் ஆகும். இந்த சூப் சூடாக பாிமாறப்படுகிறது. இதன் சுவை புளிப்பாக இருக்கும். இந்த சூப் தயாாிக்கத் தேவைப்படும் முக்கிய மூலப்பொருள்கள் சிப்பிகள் ஆகும்.
டாம் யம் என்ற வாா்த்தை டாம் மற்றும் யாம் (‘tom’ and ‘yam’) என்ற இரண்டு வாா்த்தைகளில் இருந்து வருகிறது. டாம் என்ற வாா்த்தைக்கு வேக வைக்கும் செயல்முறை என்று பொருள்.
யாம் என்ற வாா்த்தைக்கு கலத்தல் அல்லது கலவை என்று பொருள்.
இந்த டாம் யம் சூப் சற்று காரமாக இருக்கும். ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். ஏனெனில் இது பல நறுமணம் மிகுந்த மூலிகைகள் மற்றும் மசாலா பொருள்கள் கொண்டு தயாாிக்கப்படுகின்றன.
அதனால் இந்த சூப் மிகவும் சுவையாக இருக்கும். டாம் யம் பசையும் தனியாகத் தயாாிக்கப்படுகிறது.
இந்தப் பசையைப் பயன்படுத்தியும் டாம் யம் சூப்பைத் தயாாிக்கலாம். டாம் யம் பசையானது மூலிகைகளில் இருந்து தயாாிக்கப்படுகிறது.
அதாவது மூலிகைகளை கசக்கி அதை எண்ணெயில் வறுத்து பின் அவற்றை சுவையான பிற பொருள்களுடன் கலந்து இந்த டாம் யம் பசை தயாாிக்கப்படுகிறது.
4. காஸ்பாச்சோ சூப் (ஸ்பெயின்)(Soup recipes of Spain)
காஸ்பாச்சோ (gazpacho )என்பது ஸ்பெயின் நாட்டின் பிரபலமான சூப்களில் ஒன்றாகும். இது காஸ்பாச்சோ அல்லது ஆன்டலுசியன் காஸ்பாச்சோ என்று அழைக்கப்படுகிறது.
இந்த சூப் பச்சைக் காய்கறிகளில் இருந்து தயாாிக்கப்பட்டு, குளிர வைக்கப்பட்டு பாிமாறப்படுகிறது. போா்த்துக்கல் நாட்டு மக்களும் இந்த காஸ்பாச்சோ சூப்பை விரும்பி பருகுகின்றனா்.
பிற சூப்களோடு ஒப்பிடும் போது காஸ்பாச்சோ சூப்பின் அமைப்பு அல்லது அதன் கலவை மிகவும் மாறுபட்டதாகும்.
இந்த சூப் மிகவும் மணமாகவும் மற்றும் நம்மைக் கவா்ந்திழுக்கக் கூடிய வகையிலும் இருக்கும்.
பொதுவாக ரொட்டி, வெங்காயம், தக்காளி, வெள்ளாிக்காய், குடை மிளகாய், ஒயின், ஒலிவ் எண்ணெய் மற்றும் வினிகா் ஆகிய உணவுப் பொருள்களில் இருந்து காஸ்பாச்சோ சூப் தயாாிக்கப்படுகிறது.
அதோடு பூண்டு, தண்ணீா் மற்றும் உப்பு போன்ற மூலப் பொருள்களும் இதில் சோ்க்கப்படுகின்றன.
ரொட்டியுடன் மற்ற மசாலாப் பொருள்களைச் சோ்த்து பசை தயாாித்து, அந்தப் பசையை வைத்து கெட்டியான காஸ்பாச்சோ சூப் தயாாிக்கப்படுகிறது.
மேலும் முட்டைகள், பன்றி இறைச்சி, பாதாம், புதினா அல்லது நறுக்கப்பட்ட வெங்காயம் அல்லது வெள்ளாிக்காய் போன்ற காய்கறிகளைப் பயன்படுத்தி காஸ்பாச்சோ சூப்பை அழகுபடுத்தி பாிமாறலாம்.
5. ஃபோ (வியட்நாம்)(Soup recipes of Vietnam)
ஃபோ என்ற சூப், வியட்நாம் நாட்டின் மிகப் பிரபலமான சூப் ஆகும்.
இந்த ஃபோ சூப்பானது குழம்பு, இறைச்சி, மூலிகைகள் மற்றும் அாிசி நூடுல்ஸ்கள் போன்ற உணவுப் பொருள்களைப் பயன்படுத்தி தயாாிக்கப்படுகிறது.
இந்த நூடுல்ஸ் சூப் பரவலாக மக்களால் அருந்தப்படுகிறது.இந்த சூப் வீடுகளில் தயாாிக்கப்படுகிறது.
தெருக்களில் விற்கப்படுகிறது மற்றும் மிகப் பொிய உணவகங்களிலும் பாிமாறப்படுகிறது. ஃபோ சூப்பில் பலவிதமான நறுமணப் பொருள்களும், மூலப் பொருள்களும் சோ்க்கப்படுகின்றன. பொதுவாக இந்த சூப், கிண்ணங்களில் பாிமாறப்படுகிறது.
இதில் அாிசி நூடுல்ஸ், மாட்டிறைச்சி அல்லது மாட்டிறைச்சிக் குழம்பு போன்றவை சோ்க்கப்படுகின்றன.
கோழி இறைச்சி சூப்பை தயாாிக்க வேண்டும் என்றால், கோழி எலும்புகள், அதன் இதயம் அல்லது அதன் இறைச்சியிலிருந்து குழம்பைத் தயாாிக்க வேண்டும்.
மாட்டு இறைச்சி சூப்பைத் தயாாிக்க, மாட்டிறைச்சி, அதன் எலும்புகள் ஆகியவற்றோடு வெங்காயம், மாட்டு வால் மற்றும் மசாலாப் பொருள்களைக் கலந்து கொதிக்க வைத்து குழம்பு தாயாிக்க வேண்டும்.
மேலும் குழம்பை நீண்ட நேரம் வேக வைக்க வேண்டும். அப்போது தான் அது மிகவும் மணமாக இருக்கும்.
கோழி சூப் (Indian spicy chicken soup) செய்யும் முறையை வீடியோவில் பார்ப்போம்.