சோவியத் ஒன்றியம் ஏன் உடைந்தது?(Collapse of the Soviet Union)
டிசம்பர் 31 ,1991 சோவியத் ரஷ்யா (Soviet Union) உடைந்த தினம்.சோவியத் ரஷ்யா இதே தினத்தில் சிதறுண்டது.
சோவியத் ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவ் (Mikhail Gorbachev) சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த ஆறு ஆண்டுகளில் செயல்படுத்திய பல தீவிர சீர்திருத்தங்களின் காரணமாக, ஒரு காலத்தில் வலிமையுடன் இருந்த சோவியத் யூனியன் (Soviet Union) வீழ்ச்சியடைந்தது.
இது வரலாற்று செயல்முறையின் முழு போக்கையும் பெரிதும் பாதித்தது.
கோர்பச்சேவ் தனது தேசம் கலைக்கப்பட்டதில் ஏமாற்றமடைந்தார்.அதனால் டிசம்பர் 25 அன்று தனது பதவியை விட்டு விலகினார். அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
இது உலக வரலாற்றில் ஒரு நீண்ட, திகிலூட்டும் சகாப்தத்தின் அமைதியான முடிவாகும்.
உலக அரசியலில் தீர்மான சக்தியாக இருந்த சோவியத் யூனியனின் இருப்பு 73 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
மாஸ்கோவில் (Moscow)உள்ள கிரெம்ளின் மாளிகையில் டிசம்பர் 25, 1991 அன்று தான் சோவியத் கொடி கடைசியாகப் பறந்தது. சோவிய த் குடியரசுகளின் (Soviet Union) நாடுகளான உக்ரைன், ஜார்ஜியா, பெலாரஸ், ஆர்மீனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தாங்கள் இனி சோவியத் ஒன்றியத்தின் (Soviet Union)ஒரு பகுதியாக இருக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
மூன்று பால்டிக் குடியரசுகள் (லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா) ஏற்கனவே சோவியத் ஒன்றியத்திடம் இருந்து பிரிந்து தங்கள் சுதந்திரத்தை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் சோவியத் யூனியனின் (Soviet Union) 15 குடியரசுகளில் ஒன்றான கஜகஸ்தான் மட்டுமே எஞ்சியிருந்தது.
சோவியத் யூனியனின் தோற்றம் மற்றும் வளர்ச்சி(Origin and development of the Soviet Union)
1917-ம் ஆண்டு நடந்த புரட்சியில் புரட்சிகர போல்ஷ்விக் கம்யூனிசக் கட்சியினர் ரஷ்ய ஜார் அரசை தூக்கி எறிந்தனர். இதன் பிறகு நான்கு சோசலிச குடியரசுகள் நிறுவப்பட்டன.
1922 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனை உருவாக்க ரஷ்யா அதன் தொலைதூர குடியரசுகளுடன் இணைந்தது. இந்த சோவியத் அரசின் முதல் தலைவர் மார்க்சியப் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் (Lenin)ஆவார்.
ஆரம்பத்தில் சோவியத் யூனியன் “உண்மையான ஜனநாயகத்தின் சமூகம்” என்று கருதப்பட்டாலும் ஜாரிச எதேச்சதிகாரத்திலிருந்தது போன்ற அடக்குமுறையும் சமூகத்தில் அவ்வப்போது நிலவத்தான் செய்தது.
இதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு ரஷ்ய குடிமகனின் விசுவாசத்தைக் கோரும் ஒற்றைக் கட்சி – கம்யூனிசக் கட்சியால் – சோவியத் யூனியன் ஆளப்பட்டது.
தொழிலாளிகள், விவசாயிகள் அல்லாத முதலாளிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளுக்கு இடமில்லை என்ற பெயரிலேயே இந்த ஒற்றை ஆட்சிக்கான நியாயம் விளக்கப்பட்டது. ஆரம்பத்தில் பல்வேறு மக்கள் பிரிவின் கட்சிகள் சோவியத் யூனியனில் இருந்தாலும் பின்னர் ஒரு கட்சி ஆட்சியே நிலை நிறுத்தப்பட்டது.
ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பொருளாதாரத்தின் மீது முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. அனைத்து தொழிற்துறைகளையும் நிர்வகித்ததோடு கூட்டுப்பண்ணைகளையும் நிறுவியது.
பெரும் நிலங்களை வைத்திருந்தோர் நிலவுடைமையிலிருந்து அகற்றப்பட்டு ஆரம்பத்தில் நிலங்கள் விவசாயிகளுக்குப் பிரித்து அளிக்கப்பட்டது.
சில வருடங்களுக்குப் பிறகு அந்நிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டுக் கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. நிலங்களை இழந்த பணக்கார விவசாயிகள் சோவியத் யூனியனுக்கு எதிரான மனப்பான்மையைக் கொண்டிருந்தனர்.
இப்படியாக அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கம்யூனிஸ்டுக் கட்சியும், சோவியத் அரசும் கட்டுப்படுத்தியது. ஸ்டாலினின் கொள்கைகளுக்கு எதிராக வாதிட்டவர்கள் கைது செய்யப்பட்டு குலாக்ஸ் எனப்படும் தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் சில தூக்கிலிடப்பட்டனர்.
சோவியத் ஒன்றியத்தில் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய விளைவுகள்
மேலும் ஸ்டாலின் இரண்டாம் உலகப் போரினை எதிர்கொண்டார். வளர்ந்து வரும் இளம் சோவியத் யூனியனை அழிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் விரும்பின. அதை ஹிட்லரை வைத்துச் செயல்படுத்துவதற்கு அவை திட்டமிட்டன.
ஆனால் ஜெர்மனியின் ஹிட்லர் சோவியத் யூனியனை மட்டும் குறிவைக்கவில்லை. மேற்குலகையும் சேர்த்தே குறி வைத்தார். இந்நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இல்லாமலேயே சோவியத் யூனியன் இரண்டாம் உலகப் போரில் கடும் இழப்புகளுடன் ஜெர்மனியை வெற்றி கொண்டது.
இந்த சிக்கலான அரசியல் சூழல் காரணமாக உள்நாட்டில் கம்யூனிசக் கட்சியின் எதிரிகள் வேட்டையாடப்பட்டனர். போர் முடிந்த பிறகு இழந்த பொருளாதாரத்தைக் கட்டியமைக்க ஸ்டாலின் முடிவு செய்தார்.
ஆனால் கிராமங்கள் – நகரங்கள், விவசாயிகள் – தொழிலாளிகள், தொழிற்துறை – விவசாயம், உடல் உழைப்பு – மூளை உழைப்பு ஆகியவற்றுக்கு இடையே முரண்பாடு இருந்தது. இந்த முரண்பாடுகள் கம்யூனிசக் கட்சிக்கு எதிரிகளை அளப்பறிய அளவில் உருவாக்கிக் கொடுத்தது.
பிறகு எதிரிகளைக் களையெடுக்க வேண்டிய நிலைக்கு ஸ்டாலின் நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் அப்படிக் களையெடுக்கும் போது கம்யூனிசத்தின் ஆதரவாளர்கள் கூட களையெடுக்கப்பட்டனர். இதற்குக் கேட்பார் கேள்வி இல்லாத வகையில் செயல்பட்ட ரகசிய போலீசு ஒரு முக்கியமான காரணமாகும்.
1953 இல் ஸ்டாலினின் மரணத்திற்குப் பிறகு, சோவியத் தலைவர்கள் அவரது சர்வாதிகாரமான கொள்கைகளைக் கண்டித்தனர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒற்றை ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். அவர்கள் குறிப்பாக மேற்கத்திய சக்திகளுடனான பனிப்போரில் கவனம் செலுத்தினர்.
அமெரிக்காவுடன் அதிக செலவு மற்றும் அழிவுகரமான “ஆயுதப் போட்டியில்” ஈடுபட்டனர். அதே நேரத்தில் கம்யூனிச எதிர்ப்பை அடக்குவதற்கும் கிழக்கு ஐரோப்பாவில் அதன் மேலாதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கும் இராணுவ சக்தியைப் பயன்படுத்தினார்கள்.
இரண்டாம் உலகப்போருக்கு பின் சோவியத் ரஷ்யாவும், அமெரிக்காவும் பல்வேறு முனைகளில் பல்வேறு தளங்களில் பனிப்போரை நடத்திக்கொண்டு இருந்தன .
சோவியத் ஜனாதிபதி கோர்பச்சேவ் அரசியல் காலம்
கோர்பச்சேவ் சட்டம் படித்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
எளிய பின்னணியில் இருந்து வந்த இவர் மிகக்குறுகிய காலத்தில் ரஷ்யாவில் மூன்று மூத்த தலைவர்கள் மறையவே, ரஷ்ய புரட்சிக்கு பிந்தைய காலத்தில் பிறந்த கோர்பசேவ் வசம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பதவி வந்து சேர்ந்தது .பதவிக்கு வந்த பொழுது இவருக்கு வயது 54 .
சில வெளிநாடுகளுக்கு கட்சிப்பணிகள் காரணமாக பயணம் போனார். மேலும் மக்களுக்கு விடுதலை, ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துதல், தேக்கமடைந்து இருந்த பொருளாதாரத்தை சீர்திருத்துதல் ஆகியன அவரின் முக்கிய குறிக்கோள்கள் ஆயின.
ஜனநாயகத்தை அமைப்புகளில் கொண்டு வந்தார்.
கருத்துரிமை கிடைத்ததும் ,அது வரை அடங்கி இருந்த தேசிய உணர்ச்சி எல்லா நாடுகளிலும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது .மக்கள் தெருக்களில் இறங்கி போராட ஆரம்பித்தார்கள் . நிலைமை ரொம்பவும் மோசமாகி இவரே மூன்று நாள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
தங்களை சோவியத் யூனியனில் இருந்து விடுவித்து கொள்வதாக தன்னிச்சையாக அறிவித்துக்கொண்டன .
மைக்கேல் கோர்பச்சேவின் கொள்கைகள்
மார்ச் 1985 இல், நீண்டகால கம்யூனிஸ்ட் கட்சி அரசியல்வாதியான மைக்கேல் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவர் தேக்கமான பொருளாதாரத்தைக் கொண்டிருந்த நாட்டை ஆளும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.
அதே நேரம் சோவியத் யூனியனின் அரசியல் கட்டமைப்பு எவ்வித சீர்திருத்தத்தையும் அனுமதிக்காத அளவிற்கு இறுகிப் போயிருந்தது. இது தான் கோர்பச்சேவ் பதவி ஏற்கும் போது இருந்த நிலைமை.
கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியம் மிகவும் வளமான, உற்பத்தி நாடாக மாற உதவும் என்று நம்பிய இரண்டு கொள்கைகளை அறிமுகப் படுத்தினார்.இவற்றில்
முதலாவது கிளாஸ்னோஸ்ட் அல்லது அரசியல் வெளிப்படைத்தன்மை
கிளாஸ்னோஸ்ட் கொள்கையின் மூலம் கோர்பச்சேவ் அடக்குமுறையின் தடயங்களை அகற்றினார்.
புத்தகங்களை தடை செய்தல் நிறுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டது. எங்கும் இருந்த இரகசிய போலீஸ் தடை செய்யப்பட்டது. இவையெல்லாம் சோவியத் குடிமக்களுக்கு புதிய சுதந்திரத்தை அளித்தன. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
செய்தித்தாள்கள் அரசு குறித்த விமர்சனங்களை வெளியிட அனுமதிக்கப்பட்டன. முதன்முறையாக கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மற்ற கட்சிக் தேர்தலில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது சீர்திருத்தங்கள் பெரெஸ்ட்ரோயிகா அல்லது பொருளாதார மறுசீரமைப்பு
சோவியத் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சிறந்த வழி, அரசாங்கத்தின் பிடியைத் தளர்த்துவது என்று கோர்பச்சேவ் நினைத்தார்.
தனியார் முன்முயற்சி புதுமைக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பினார், எனவே தனிநபர்களும் கூட்டுறவுகளும் 1920 களுக்குப் பிறகு முதல் முறையாக வணிகம், தொழிற்துறைகளைச் சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.
சிறந்த ஊதியம் மற்றும் இதர கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்யும் உரிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. சோவியத் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டையும் கோர்பச்சேவ் ஊக்குவித்தார்.
மூன்று தசாப்தங்களுக்கு முன் நிகழ்ந்த சோவியத் யூனியன் வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், ரஷ்யாவைச் சேர்ந்த பலர் தங்கள் வருமானத்திற்காக பல புதிய வழிகளைத் தேடினர்.
1991ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தான் டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்ததாக தற்போதைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தெரிவித்துள்ளார்.
‘ரஷ்யா’ என்ற ஆவணப்படத்தில் பேசியுள்ள ரஷ்ய அதிபர் புதின், சோவியத் யூனியனின் வீழ்ச்சி, வரலாற்று சிறப்புமிக்க ரஷ்யாவின் அழிவு என விவரித்துள்ளார்.
“இது சோவியத் ஒன்றியம் என்ற பெயரில் வரலாற்று ரஷ்யாவின் சிதைவு” என, புடின் தெரிவித்துள்ளார்.
ஒரு துன்பியல் நிகழ்வாக ,சோவியத் யூனியன் வீழ்ச்சியை புடின் கருதுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
சோவியத் பாதுகாப்புப் படையான கேஜிபியின் முகவராக புடின் அறியப்படுகிறார். எனினும், 1990களில் சென்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் அனடாலி சோப்சக்கின் அலுவலகத்தில் பணியாற்றினார்.
கோர்பச்சேவுக்கு எதிரான ஆகஸ்ட் 1991 ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்,சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த, கேஜிபியிலிருந்து தான் ராஜினாமா செய்ததாக, புதின் தொடர்ந்து கூறிவருகிறார்.
1991-ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்தபோது ரஷ்ய நாணயத்தின் மதிப்புக் குறைந்தது. இதனால், முறைசாரா சந்தைகள் முளைத்தன.
சோவியத் ஒன்றியம் சரிவுக்கான காரணங்கள் (Reasons for the collapse of the Soviet Union)
சரிவுக்கு நிறைய காரணங்கள் இருந்தன.பீர் மற்றும் வோட்காவின் மீதான விலையை ஏற்றினார்.அதை மிகக்குறைந்த அளவிலேயே அரசாங்கம் உற்பத்தி செய்யும் என்றார். மது கிடைக்காமல் மக்கள் வாடினார்கள.
கள்ள சந்தை கொழிக்க ஆரம்பித்தது.இதனால் அரசுக்கு பில்லியன் டாலர்களில் நட்டம் உண்டானது . 28 வருடங்களாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவரை பதவி விளக்கினார்.
அமெரிக்காவை நோக்கி நட்புக்கரம் நீட்டினார்.
அணு ஆயுத குறைப்புக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
கூடுதலாக 28,000 வீரர்களை இழந்திருந்த சோவியத் படைகளை ஆப்கானை விட்டு வெளியேற்றினார் .
மக்கள் பெர்லின் சுவரை(Berlin Wall) கடந்து போக ஆரம்பித்த பொழுது அமைதி காத்தார் .
கிழக்கு ஐரோப்பாவில் தான் செலுத்தி வந்த ஆதிக்கத்தை நிறுத்திக்கொள்வதாக அவர் அறிவித்த பொழுது உலகமே கொஞ்சம் ஸ்தம்பித்து தான் போனது .
அங்கே இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சிகள் அப்படியே சீட்டுக்கட்டு போல சரிந்தன .
எழுபது வருடங்களாக மறுக்கப்பட்ட பேச்சுரிமை, எழுத்துரிமையை மக்களுக்கு வழங்கினார்.
அரசாங்க அமைப்புகளை விமர்சிக்கும் உரிமை எல்லாருக்கும் கிடைத்தது .
தனியார் நிறுவனங்களை முக்கியமான துறைகளில் களமிறக்கினார்.
ஆனால் இதனால் ,மக்கள் ஒரு வேலை உணவுக்கே அலைய வேண்டிய நிலை உண்டானது .ரேசன் முறையில் உலகப்போர் சமயம் போல சாப்பாடு போட வேண்டியதாயிற்று .
டிசம்பர் 1991 இல், பெலாரஸ், உக்ரைன் மற்றும் ரஷ்யா குடியரசுகளின் தலைவர்கள் எஸ்.எஸ்.ஜி.யை உருவாக்குவது குறித்து பெலோவெஜ்ஸ்காயா புஷ்சாவில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஆவணம் உண்மையில் சோவியத் ஒன்றியத்தின் சரிவைக் குறிக்கிறது. உலகின் அரசியல் வரைபடம் வித்தியாசமாகத் தோன்றத் தொடங்கியது.
தற்செயலான நிகழ்வுகளால் இது சிதைந்தது என்று நம்புவது அப்பாவியாக உள்ளது. சோவியத் யூனியனின் முக்கிய அரசியல் எதிர்ப்பாளர் சோர்வடையவில்லை.
அசைக்க முடியாத “சோவியத் இயந்திரத்தை” அசைத்து அழிக்க முடிந்த மேற்கத்திய புவிசார் அரசியல்வாதிகளின் உளவுத்துறை மற்றும் நுண்ணறிவுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்.
சோவியத் ஒன்றியம் 15 மாநிலங்களாக உடைந்தது.
சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் குடிமக்களின் மனதிலும் இதயத்திலும் பனிப்போர் நடந்தது. மேற்கத்திய பிரச்சாரம் மிகவும் அதிநவீனமானது.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தங்களது பாரிய கலவரங்களையும் அதிருப்தியையும் ஒரு நிகழ்ச்சியாக மாற்றின.
சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்கு யார் காரணம்? (Who is responsible for the collapse of the Soviet Union?)
சோவியத் ஒன்றியத்தின் சரிவு டிசம்பர் 8, 1991 அன்று ரஷ்யா, உக்ரைன் மற்றும் பெலாரஸ் தலைவர்களால் ஆவணப்படுத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டது.
அந்த தருணத்திலிருந்து, முன்னர் ஒரு பெரிய சக்தியின் பகுதியாக இருந்த 15 முன்னாள் சோவியத் குடியரசுகளின் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டம் தொடங்கியது.
1930 களில் சோவியத் ஒன்றியத்தில் வசிப்பவர்கள் கம்யூனிசத்தின் கொள்கைகளை நம்பியபோது, நாடு ஒரு விவசாயியிடமிருந்து ஒரு தொழில்துறை நிறுவனமாக மாறியது.
1940 களில் ஒரு நியாயமான காரணத்தில் நம்பிக்கை இல்லாமல், சோவியத் ஒன்றியம் எதிரிகளை தோற்கடித்தது. அந்த நேரத்தில் இராணுவ சக்தியைப் பொறுத்தவரை அது வலுவாக இருந்தது.
1950 களில் நாட்டை உற்சாகத்துடன் வளர்க்க பொது நன்மைக்காக மக்கள் தயாராக இருந்தனர்.
1960 களில் சோவியத் யூனியன் முதன்முதலில் ஒரு மனிதனை விண்வெளிக்கு அனுப்பியது. சோவியத் மக்கள் மலை சிகரங்களை வென்றனர், அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்தனர். உலக சாதனைகளை முறியடித்தனர்.
சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்கு பின் மாற்றங்கள் (Changes after the collapse of the Soviet Union)
சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் ஒரு சக்தி. அதன் வீழ்ச்சி ஒரு அதிர்ச்சியாகவும் 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புவிசார் அரசியல் பேரழிவாகவும் வந்தது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக, பெரும்பாலான பொருளாதார மற்றும் சமூக குறிகாட்டிகளைப் பொறுத்தவரை, புதிதாக உருவான நாடுகள் கணிசமாக பின்வாங்கின.
மேலும், நிலைமை படிப்படியாக மோசமடையத் தொடங்கியது. கடந்த கால இலட்சியங்களின் கற்பனைத் தன்மையை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினர்.
சோவியத் ஒன்றியத்தின் தலைவர்கள் சாத்தியமான வளர்ச்சி மாற்றுகளைப் பற்றி சிந்திக்கவில்லை.மாறாக, மேற்கு நாடுகளின் ஆத்திரமூட்டல்களுக்கு ஆதிகாலமாக பதிலளித்தனர்.தேவையற்ற இராணுவ மோதல்களில் ஈடுபட்டனர்.
அசிங்கமாக வளர்ந்து வரும் அதிகாரத்துவம் மக்களின் தேவைகளைப் பற்றி அல்லாமல் முக்கியமாக அதன் சொந்த நலனைப் பற்றி சிந்தித்தது.
புதிய மாநிலங்களின் உருவாக்கத்திற்கு வெவ்வேறு நிலைகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் தேவைப்பட்டன.
கோர்பச்சேவின்சரியான சீர்திருத்தங்கள் ஏன் தோல்வியடைந்தது
மண்டேலாவிடம் அவரின் தேசத்தைதாண்டி, கவர்ந்த ஆளுமைகள் யார் என்று கேட்ட பொழுது
காந்தியை எல்லாரையும் நேசித்து அமைதி வழியில் இணைந்து செயல்படவைக்கும் வழியை சாத்தியப்படுத்தியதற்காக பிடிக்கும்.
எந்த கொள்கையினுள்ளே தான் இத்தனை காலமாக வாழ்ந்தோமே அந்த கொள்கையை உள்ளிருந்தே கேள்வி கேட்டு அதன் தவறுகளை ஒத்துக்கொண்டு மாற்றங்களை முன்னெடுத்த கோர்பசேவையும் பிடிக்கும்
என்றார்.
ஆனால், கோர்பச்சேவின் சரியான இத்தகைய சீர்திருத்தங்கள் ஏன் வெற்றியடையவில்லை.
உலக அரசியல் தந்திரமா காரணம்?
எத்தனையோ பாடங்கள் இவர் வாழ்வில் இருந்து கற்க முடியுமென்றாலும் மிக முக்கியமானது இதுவாகத்தான் இருக்கக்கூடும் .
நோயாளி அறுவை சிகிச்சைக்கு தயாராக இல்லாதபொழுது கத்தியை வைத்தால் கோரமான மரணம் தான் முடிவில் கிட்டும்.