சோயா, சைவ உணவு உண்பவருக்கு புரதத்தின் சிறந்த ஆதாரம்! அதோடு அவை உணவில் சேர்க்கவும் எளிதானது.
சோயா போன்ற தாவர உணவு(Soya recipes), சுத்த சைவ உணவை உண்பவா்களுக்கும், மிதமான சைவ உணவை உண்பவா்களுக்கும் போதுமான ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு, அருமையான சுவையையும் தருகிறது.
சோயாவில் நாா்ச்சத்து, தாதுக்கள், விற்றமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.
சோயாவில் தயாாிக்கப்படும் சோயா பீன்ஸ், டோஃபு, எடமமி, சோயா தயிா் மற்றும் சோயா பால் போன்ற உணவுகள் உலக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.
அவற்றின் ஊட்டச்சத்து விவரங்கள் பல அசைவ உணவுகளுடன் ஒப்பிடப்படுவதால் அவை ‘சைவத்தின் இறைச்சி’ என்று அழைக்கப்படுகின்றன. சோயா துண்டுகளும் மிகவும் பல்துறை மற்றும் அசைவக் கறிகளைப் போன்ற சுவையுடன் சமைக்கப்படலாம்.
சோயா துண்டுகளின் ஊட்டச்சத்து மதிப்பு என்ன? சோயாவில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், புரதங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
உடலுக்கு கூடுதல் சர்க்கரை அல்லது சோடியம் வழங்காத அதே வேளையில் அவை கல்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தவை.
சூப்பரான மதிய உணவு சோயா ரைஸ் (Soya rice recipes)
பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த சோயா ரைஸ் சூப்பரான மதிய உணவு. சோயா ரைஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உதிராக வடித்த சாதம் – 2 கப்
மீல்மேக்கர் – 1/2 கப்
காய்ந்தமிளகாய் – 3
கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு
எண்ணெய் – பொரிக்க
தாளிக்க
பட்டை – சிறிய துண்டு, லவங்கம் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன்
சோயா உணவுகளில் உள்ள நன்மைகள் என்ன?
பல நன்மைகளைக் கொண்டுள்ள சோயா துண்டுகள் வேகமான தசை உருவாக்கம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை செயல்படுத்துகின்றன. அவை எலும்பு, முடி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.
சோயா துண்டுகள் உறுப்புகளைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு சேர்வதை நிறுத்துவதாகவும், இதனால் எடை இழப்பை ஊக்குவிப்பதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
துண்டுகள் நார்ச்சத்துடன் நிரம்பியுள்ளன.இதனால் உணவு அமைப்பிலிருந்து மெதுவாக வெளியேற அனுமதிக்கிறது மற்றும் உங்களை நீண்ட நேரம் நிரப்ப வைக்கிறது.
சோயாவில் தயாாிக்கப்படும் உணவுகள் ஆசிய மக்களின் மத்தியில் வெகு காலமாக மிக பிரபலமாக இருந்து வருகின்றன. சோயாவில் அமினோ அமிலங்களும் புரோட்டீன்களும் நிறைந்திருக்கின்றன.
பொதுவாக புரோட்டீன் மிகுந்த உணவுகள் பற்றி பேசும் போது, விலங்குகள் மூலம் கிடைக்கும் உணவுகள் தான் முதல் இடத்தில் இருக்கும்.
ஏனெனில் விலங்கு இறைச்சியில் தான் புரோட்டீன் அதிகமாக இருக்கும்.
நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மற்றும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் போதுமான அளவு புரோட்டீன் தேவைப்படுகிறது.
நமது உடலில் உள்ள செல்களின் கட்டமைப்பு புரோட்டீனை உருவாக்குகிறது.
ஆகவே பாதிக்கப்பட்ட செல்களை சீரமைக்க புரோட்டீன் தேவைப்படுகிறது.
சா்க்கரைநோயினால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள், தங்களுடைய இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையை சாியான அளவில் பராமாிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் சோயா உணவுகள் இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவை சாியான விதத்தில் பராமாிக்க உதவுகின்றன என்று ஒரு சில மருத்துவ ஆய்வுகள் தொிவிக்கின்றன.
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நமது எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
சோயா எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டவை.
புரோட்டீன், விற்றமின் சி மற்றும் ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துகளை அதிக அளவில் கொண்டிருக்கும் சோயா உணவுகள் நமது நோய் எதிா்ப்புசக்தியை அதிகாிக்கும் என்பதில் ஐயமில்லை.