சுவையான சோயாமீற் சிற்றுண்டிகள் (Soyameat snacks)
சோயா மீட் சைவ உணவு உண்பவர்களுக்கு பிடித்த உணவுகளில் ஒன்றாகும்.
சோயா துண்டுகள் ஒரு சைவ உணவு உண்பவருக்கு புரதத்தின் சிறந்த ஆதாரம்! ஒரு முக்கிய நன்மை என்னவென்றால், அவை உங்கள் உணவில் சேர்க்க எளிதானது.
சோயா துண்டுகள் சோயா மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
அவற்றின் ஊட்டச்சத்து விவரங்கள் பல அசைவ உணவுகளுடன் ஒப்பிடப்படுவதால் அவை ‘சைவத்தின் இறைச்சி‘ என்று அழைக்கப்படுகின்றன. சோயா துண்டுகளும் மிகவும் பல்துறை மற்றும் அசைவக் கறிகளைப் போன்ற சுவையுடன் சமைக்கப்படலாம்.
சோயாமீட் உண்பவர்கர்களுக்காக சோயாமீட்டை வைத்து வெவ்வேறு விதவிதமான சுவைகளுக்கு (Soyameat snacks) சமைக்க கூடிய சில சிற்றுண்டிகள் செய்யும் முறைகளைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சோயா மீட் – 1 கப்
- பொட்டு கடலை 1/2 கப்
-
தேங்காய் 1/4 கப்
-
2பச்ச மிளகாய்
-
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
-
1பட்டை
-
2லவங்கம்
-
1ஏலக்காய்
-
சோம்பு 1 ஸ்பூன்
-
கறிவேப்பிலை சிறிதளவு
-
கொத்துமல்லி இலை சிறிதளவு
-
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
-
உப்பு தேவையான அளவு
-
எண்ணெய் தேவையான அளவு
சோயமீட் வடை செய்முறை (Soyameat snacks)
வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சோயாவை போட்டு வேக வைத்து பிறகு பிழிந்து வைக்கவும்
சோயாமீட் கட்லட் செய்ய தேவையான பொருட்கள்
- சோயாமீட் – 1 பக்கற்
- வேகவைத்த உருளைக்கிழங்கு – 3
- நறுக்கிய வெங்காயம் – 2
- நறுக்கிய வெள்ளைபூண்டு – 2 பல்
- மசாலா தூள் – 1/3 தேக்கரண்டி
- நறுக்கிய பச்சை மிளகாய் – 3
- ருசிக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத்தூள்
- சுவைக்கேற்ப காய்ந்த மிளகாய் துண்டுகள்
- சிறிது கோதுமை மாவு மற்றும் மஞ்சள்தூள்
- பிஸ்கட் தூள்
சோயாமீட் கட்லட் செய்யும்முறை (Soyameat snacks)
- சோயாமீட்டை எடுத்து உப்பு கலந்த தண்ணீரில் போட்டு 15 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின்னர் அந்த தண்ணீரை வடித்து விட்டு நன்கு பிழிந்தெடுக்கவும்.
- பிறகு அதை கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்து, அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகுத்தூள், காய்ந்த மிளகாய், மசாலாத்தூள் போட்டு பிரட்டிக்கொள்ளவும்.
- ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் வெள்ளைப்பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும். அதில் சோயாமீட்டை போட்டு அத்தோடு அவித்த உருளைக்கிழங்கையும் போட்டு நன்கு கலந்துகொள்ளவும். பிறகு ஆறவிட்டு கட்லட் உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.
- கோதுமை மா, உப்பு மற்றும் மஞ்சள்தூளிற்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும். அந்த திக்கான கலவைக்குள் உருண்டைகளை போட்டு நனைத்து பிஸ்கட் தூளில் பிரட்டி பொரித்தெடுக்கவும்.
- சூடான சோயா கட்லட் தயார்.
சோயா 65 செய்ய தேவையான பொருட்கள்
