தந்தைக்காக பாடிய SPB மகள் பல்லவி (SPB daughter)

பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மகள் (SPB daughter) இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டது கிடையாது.

அந்தவகையில் தற்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்த வீடியோ ஆனது தற்போது படு வைரலாகி வருகின்றது.

அவரின் மகன் எஸ்.பி.சரண் தமிழ் சினிமாவில் நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக பன்முகத் திறமை கொண்ட ஒருவராக வலம் வருகிறார்.

அரை நூற்றாண்டுக்கு மேலாக சினிமா ரசிகர்களை தன்னுடைய குரலினால் கட்டிப்போட்டு வைத்திருந்த ஒருவரே எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இந்த காந்த குரலில் தான் ரசிகர்கள் காதல் நட்பு சோகம் என அனைத்து விதமான உணர்வுகளையும் உணர்ந்தார்கள்.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர்.

மேலும் எஸ் பி பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனை பறை சாற்றுகின்றது.

s.p.balasubramaniyam's daughter,annaimadi.com,அன்னைமடி,SPB குடும்பம்,SPB family,SPBdaughter sings,தந்தைக்காக பாடிய SPB மகள் பல்லவி (SPB daughter)

இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், நடிகராகவும் திகழ்ந்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியன். இவர் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
பாடகர் எஸ்பிபி நீங்கா 2020ஆம் ஆண்டு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானது யாவரும் அறிந்த ஒன்றே..
இவருடைய இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி விஜய், அஜித் படங்கள் வரை பல பாடல்கள் பாடியிருக்கிறார். அந்தவகையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் உருவான கடைசி பட பாடல் என்றால் அது ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலாகும்.

s.p.balasubramaniyam's daughter,annaimadi.com,அன்னைமடி,SPB குடும்பம்,SPB family,SPBdaughter sings,தந்தைக்காக பாடிய SPB மகள் பல்லவி ,SPB daughter

 இவரின் இழப்பு பேரிழப்பாக இருந்தாலும் இன்றும் அவர் பாடிய  பாடல் வழியாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்.

SPB குடும்பம் (SPB family)

இந்நிலையில் பாடகர் எஸ் பிபி சாவித்திரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு எஸ் பிபி சரண் மற்றும் எஸ் பிபி பல்லவி என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இதில் எஸ் பிபி சரண் ஏற்கனவே பலவிதமான பாடல்களை பாடியிருக்கிறார்.
அதோடு தற்போது சூப்பர் சிங்கர் நடுவராக இருந்து வருகிறார்.
இப்படி பட்ட நிலையில் தான் எஸ் பிபி சரண் தன்னுடைய தங்கையான எஸ் பிபி பல்லவியை (SPB daughter) சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரவழைத்துள்ளார்.
 சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட எஸ் பி பி மக்கள் பல்லவி (SPB daughter) தன்னுடைய தந்தை பற்றிய ஒரு பாடலை நிகழ்ச்சில் பாடியுள்ளார்.
இதனை பற்றிய ஒரு ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எஸ் பி பியின் மக்கள் பல்லவி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

s.p.balasubramaniyam's daughter,annaimadi.com,அன்னைமடி,SPB குடும்பம்,SPB family,SPBdaughter sings,தந்தைக்காக பாடிய SPB மகள் பல்லவி ,SPB daughter  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *