ஸ்படிகமாலையின் அற்புத பலன்கள் (Sphatika Mala)

ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஸ்படிகமணி மாலை (Sphatika Mala) சிறப்பு மிக்க பயன்களை அள்ளி தருபவை. ஒரு அரண் போல நம்மை பாதுகாக்கும் முழுமையான கவசமாக முதல்தர ஸ்படிகமணி மாலை (Sphatika Mala) விளங்குகிறது.

இந்த ஸ்படிக மணி ஒன்று, ஒரு மணி நேரத்திற்கு 21600, அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள்.

அதாவது இது மனிதர்களாகிய நாம் ஒருநாளில் சராசரியாக மூச்சுவிடும் எண்ணிக்கையுடன் (21,600) ஒத்துள்ளது. 

அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108, ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள்.

அதனால் தான் தெய்வ அருள் , மனஅமைதி, சாந்தம் , நல்ல சிந்தனை , பரோபகார செயல்கள், தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் அதிசய கருவியாக இது உள்ளது.

எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும்.

மனித மனம் சாதாரணமாக ஆல்பா, பீட்டா என இரண்டு நிலைகளில் இருக்கும்.ஆல்பா நிலையில் இருந்தால் தான் மன அமைதி கிட்டும்.ஸ்படிக மாலை நமது மனதை அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும்.

ஜபம் செய்யும் போது அந்த வெண்மை நிறமான படிகத்தை உருட்டும் போது கையில் அழுத்தம் ஏற்ப்பட்டு உடலில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது.

இந்த ஸ்படிக மாலையை ஜப மாலையாகப் பயன்படுத்தி மந்திரப்பிரயோகம் செய்தால், வேண்டிய தெய்வம் அருள் பாலிக்கும்.

ஸ்படிகமணி மாலை அணிந்து கொண்டவர்களுக்கு, அவர்களிடம் சொல்லப்படும் , அவர்கள் கேள்விப்படும் , பார்க்கும் எந்த சோகமான செய்தியும் , காட்சியும் அவர்களை பாதிக்காது என்பார்கள்.

ஸ்படிக மாலையை அணிந்து கொள்வதன் மூலம் உடலில் இருக்கும் வெப்பமானது வெளியேறி குளிர்ச்சி அடையும். அதாவது ஸ்படிகத்திற்கு உடலை குளிர்ச்சியூட்டும் தன்மை அதிகமாக உள்ளது.

சிலபேருக்கு ஸ்படிக மாலையை அணிந்த உடன் காய்ச்சல் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.

ஸ்படிக மாலையை யாரெல்லாம் அணியலாம்?(Who can wear Sphatika Mala )

மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகமாலையை(Sphatika Mala) அணிவதைத் தவிர்க்கவேண்டும்.
இவர்களைத் தவிர குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்ற எந்த பாகுபாடுமின்றி யார் வேண்டுமானாலும் அணியலாம். அதிகம் கோபப்படும் நபர்கள், பிளட் பிரஷர் இருப்பவர்கள், உஷ்ண உடம்பு கொண்டவர்கள் கட்டாயம் அணியலாம். நல்ல பலன் கிடைக்கும்.

சூடு உடம்பை உடையவர்கள் இந்த ஸ்படிக மாலையை தாராளமாக அணிந்து கொள்ளலாம். மிக மிக நல்லது.

அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகளுக்கு ஸ்படிகத்தை அரை ஞாணில் அணியலாம்.

ஸ்படிக மாலையை பயன்படுத்ததும் முறை (Using a Sphatika Mala)

ஸ்படிக மாலையில் இருந்து நல்ல அதிர்வுகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஸ்படிக மாலையை புதியதாக வாங்கிய உடன் பயன்படுத்தக்கூடாது.

ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து படிக மாலையை தண்ணீர் பால் என்பவற்றால் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி.

அல்லது உங்கள் வீட்டு பூஜை அறையில் சுவாமி படங்களின் காலடியில் வைத்துவிட்டு, நன்றாக இறைவனை வேண்டிக் கொண்டு கழுத்தில் அணிந்து கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகை.

ஸ்படிக மாலை அணிந்து கொள்வதற்கு முன் குறைந்தது 3 மணி நேரம் வரை நல்ல தண்ணீரில் போட்டு விடவேண்டும். அதன் பின்னர் எடுத்து பயன்படுத்தலாம்.
வேறொருவர் அதை அணிந்தாலும் இதே போல் செய்ய வேண்டும். குளிக்கும் போதும் போட்டு கொண்டே குளிக்க வேண்டும். இரவில் உறங்கும் போது கட்டாயம் அவிழ்த்து தரையில் வைக்க வேண்டும்.
காலையில் நீங்கள் அணியும் போது மாலை குளிர்ச்சியாக இருக்கும்.
நாள் முழுவதும் உங்களது உஷ்ணத்தை இந்த ஸ்படிகம் ஈர்த்து கொண்டிருக்கும். இரவில் நீங்கள் கழற்றி வைக்கும் போது மாலை உஷ்ணமாகி விடும்.
தரையில் வைப்பதால் பூமியின் ஈர்ப்பு சக்தி பெற்று மீண்டும் குளிர்ந்த நிலைக்கு செல்லும்.
அசைவ உணவு சாப்பிடும், தூங்கும் போது, தீட்டு வீடுகளுக்கு செல்லும்போகும் அணியக்கூடாது.

ஸ்படிகமாலை அணிவதால் கிடைக்கும் பலன்கள் (Benefits of wearing Sphatika Mala)

  • ஸ்படிக மாலையை அணிவதால்,அதன் அதிர்வலைகள் நல்ல எண்ணங்களை விதைக்க செய்யும்
  • மனதை அமைதியாக வைத்திருக்க உதவும்.
  • தெளிவான சிந்தனையை இது தூண்டுவதால் மாணவர்களுக்குக் கல்வி சிறக்கும். குழந்தைகள் படிக்கும் மேஜையில் வைத்தால் கவனம் ஒருமுகப்படும். நல்லுணர்வை இது ஊக்குவிப்பதால் சொல்வன்மை மிகும்.தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
  • உஷ்ணத்தை குறைத்து உடலைக்குளிர்ச்சியுடன் வைக்கும்.
  • தீய சக்திகளை நெருங்க விடாமல் காக்கும்.
  • இதயமும், நுரையீரலும் ஒழுங்காக இயங்கும். இதனால் ஆயுள் விருத்தியாகும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு அரும்பெரும் மருந்து இது. நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும்.
  • இது கர்ப்ப மூலாதாரங்களைத் தூண்டிவிடுவதால் புத்ர சந்தான விருத்தி இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிடைக்கும்.
  • இது பில்லி, சூன்ய, ஏவல்களை விரட்டவல்லது.
  • ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

மேலும் அந்த படிக மணியிலிருந்து வெளிப்படும் நிறமாலைகள் நம் கட்டைவிரல் மற்றும் நடுவிரல் நுனியின் மூலமாக மூளை,பினியல் சுரபி ,கண்கள்,காதுகள் ஆகிய உறுப்புகளை சென்றடைந்து அந்த உறுப்புகளைத் தூண்டுவதோடு குளிர்ச்சியையும் அளிக்கிறது.

ஸ்படிகத்தின் தன்மை(The nature of the Sphatika)

பூமியிலிருந்து கிடைக்கும் ஸ்படிகம் சக்தியின் அம்சமானது.

பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும்.

அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து, கம்பிகள் இல்லாத, உடைசல்கள், பெரும் பெரும் மலையின் பாறைகள் போலில்லாமல் ஆறு பட்டை கொண்ட தூண்கள் போலவும் , ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில்கொட்டிக் கிடப்பதுண்டு.

துல்லியமற்றதும் , ஊடுருவும் தன்மையற்றதும் , வெள்ளையாகவும் இருக்கும். அதில் எல்லாம்தேர்ந்தெடுத்து கொஞ்சமும் பழுதில்லாத உருண்டையாகவும் ,பட்டைதீட்டியும் தயாரித்து அதில் துவாரமிட்டு உள்ளே புகையோ , கருப்போ இல்லாத சுத்தமான ஸ்படிக கற்களை மாலையாக்கி விற்பனை செய்கிறார்கள் .

உயர்ந்த தான ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் தெரியாது . நீரோடு நீராக ஒன்றி இருக்கும் தனியாக தெரியாது.

அதில் உள்ள 108 மணிகளும் ஒரே மாதிரியான அளவிலும் , மிகவும் துல்லியமானதாகவும், நீர்த்துளிகளை கோர்த்தது போல் இருக்கும்.

முதல் தரம் , இரண்டாம் தரம் , மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன.

சூரிய ஒளியில் இம்மணியை காண்பித்தால் (7 கலர் ) வானவில் ஒளி தெரியும், நல்ல படிகத்தை ஒன்றுடன் ஒன்று மோதினால் தீப்பொறி உண்டாகும்.இதுவே ஸ்படிகத்தை சோதிக்கும் முறை.

ஸ்வர்ண ஸ்படிக கற்களால் இணைக்கப்பட்ட ஸ்வர்ண ஸ்படிக மாலை உஷ்ணத்தையும், குளிர்ச்சியையும் வேகமாகக் கடத்தும் குணமுடையது.

ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நக்ஷத்திர பாதத்தின் பிம்பமாக இருக்கும். தனது சக்தியை தனது அருகிலுள்ள மணிக்கு இது எளிதாக கடத்த வல்லது.

இறைவனின் நாமத்தை உச்சரித்து ஸ்படிக மாலையை உருட்டும் போது மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் விலகி ஓடி விடும். மன பாரம், மன அழுத்தம் குறைந்து சாந்தமாக வைக்கும்.

அணிபவர்களின் முகம் பிரகாசமாக இருக்கும். நரம்பு மண்டலமும், இரத்த ஓட்டமும் சீரடையும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *