உறைப்பு குரக்கன் ரொட்டி (Spicy Kurakkan roti)

குரக்கன் மாவுடன் தேங்காய்ப்பூ சேர்த்து இனிப்பு புட்டு, இனிப்பு ரொட்டி, களி என இனிப்பு பண்டங்களை அதிகமாக செய்து உண்போம். சற்று வித்தியாசமான சுவையில் உறைப்பான குரக்கன் ரொட்டி (Spicy Kurakkan roti) செய்வோம்.

இந்த சத்து நிறைந்த தானியம் குரக்கன்,கேழ்வரகு, ராகி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

எனவே நீரிழிவு நோயாளிகள் குரக்கன்மாவில் ரொட்டி, இடியப்பம், பிட்டாக அவித்து இனிப்பு சேர்க்காமல் கறிகளுடன் உணவில் அதிகம் சேர்த்து வருவதுசர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் தரும்.

இந்த  உறைப்பு ரொட்டி (Spicy Kurakkan roti) செய்வது மிக சுலபம். சுவையானதும் கூட. சத்துமிக்கது.

ஒரு தடவை செய்து  சாப்பிட்டு பாருங்கள்!

குரக்கன் உணவுகளை உண்பதால் கிடைக்கும் பலன்கள்

குரக்கன் உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்பாடும் நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக்  கொள்ளலாம். உடலுக்கு வலுவை தரும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு குரக்கன் சிறந்த சிறு தானியம். அரிசி சாதத்துக்குப் பதிலாக குரக்கன் உணவுகளை உண்டு வர விரைவாக எடை குறையும்.

இரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்துக்கு உதவும்.

பாலூட்டும் தாய்மார்கள் இதை சாப்பிட்டு வந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும்.கேழ்வரகில் செய்யப்படும் உணவுகள்  எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவாகும். இது பச்சிளங் குழந்தைக்கு கூட அதாவது, 6 மாதம் நிரம்பிய  குழந்தைக்கு  கூழாகக்  காய்ச்சி கொடுக்கலாம்.

குரக்கனில்  இயற்கையாக உள்ள அதிக கல்சியம் எலும்பு முறிவு, எலும்புதேய்மானம்,ஏனைய எலும்பு சார்ந்த பிரச்சனைக்கு நல்ல மருந்தாக அமையும்.

வயதானால் இயற்கையாகவே எலும்புகள் தேய்மானமடையும் . கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் வயதானவர்களுக்கும், 45 வயதை தாண்டிய மாதவிடாய் கடந்த பெண்களுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் குறையும். 

சிறியவர்கள் முதல் முதியவர்கள் என அனைத்து வயதினரும் அவசியமாக குரக்கன் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அன்றாடம் குரக்கன் உணவுகளை உட்கொண்டு வர, ஜீரண மண்டலம் சுத்தமாக்கப்படுவதோடு, மலச்சிக்கலும் தீரும்.

Leave a Reply

Your email address will not be published.